என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amritsar"

    • 24 மணிநேரத்திற்குள் 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • யார் மின்னஞ்சல் அனுப்பினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை

    பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    24 மணிநேரத்திற்குள் 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பொற்கோவிலுக்குள் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் இருப்பதாக ஒரு மின்னஞ்சல் வந்ததை அடுத்து கோவிலுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டல் போலி என்று தெரியவந்ததும் யார் மின்னஞ்சல் அனுப்பினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சந்தேகத்துக்குரிய 2 நபர்களை போலீசார் கண்காணித்தனர்.
    • போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசின் கண்ட்வாலா பகுதியில் தாகூர் துவாரா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென கோவில் மீது வெடிகுண்டுகளை வீசினார்கள். இதில் சுவரின் ஒரு பகுதி சேதமானது. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டு வீசியவர்களை தேடி வந்தனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தொடர்பு உள்ளதா? என்றும் விசாரிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அமிர்த சரஸ் கோவில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    சந்தேகத்துக்குரிய 2 நபர்களை போலீசார் கண்காணித்தனர். ராஜ சான்சி பகுதியில் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலைமை காவலர் குர்பிரீத் சிங்குக்கு காயம் ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து போலீசார் தற்காப்புக்காக சுட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் காயம் அடைந்தார். அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

    மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • குண்டுவெடிப்பில் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது.
    • கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பஞ்சாபில் பல இடங்களில் கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கோவிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அமிர்தசரஸின் கண்ட்வாலா பகுதியில் உள்ள தாக்குர்த்வாரா கோவிலின் மீது நேற்று முன் தினம் இரவு சுமார் 12:35 மணியளவில் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் 2 கையெறி குண்டுகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக, இந்த கையெறி குண்டு வெடித்தபோது கோவிலில் பக்தர்கள் யாரும் இல்லை.

     

    அங்கு தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரியும் நூலிழையில் காயங்களின்றி உயிர் தப்பினார். குண்டுவெடிப்பில் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது. தாக்குதலின்போது அந்த மர்ம நபர்களின் ஒரு கையில் மத கொடி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

    கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பஞ்சாபில் பல இடங்களில் கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால் ஒரு கோவிலை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை.

    முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ-யின் தொடர்பு இருப்பதாக காவல்துறை ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

    மேலும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த இளைஞர்களை ஐ.எஸ்.ஐ மூளைச்சலவை செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துகிறது என்று அவர் கூறினார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் குழுக்கள் தேடி வருகின்றன என்று தெரிவித்தார். 

    • நேற்று சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
    • குரு ராம்தாஸ் சாராய் வளாக கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ஹோலா மொஹாலா எனப்படும் சீக்கியர்களின் புத்தாண்டு கடந்த மார்ச் 14 தொடங்கி மார்ச் 16 வரை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு நேற்றும் ஏராளமான பக்தர்கள் தங்கக்கோவிலுக்கு வந்திருந்தனர்.

    இந்நிலையில் கையில் இரும்பு கம்பியுடன் நுழைந்த நபர் ஒருவர் கோவிலில் குரு ராம்தாஸ் சாராய் வளாக கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார்.

    கையில் ஒரு இரும்புக் கம்பியுடன் வந்த அவரை பார்த்த கோவில் ஊழியர் ஜஸ்பீர் சிங் தடுக்க முயன்றார். ஆனால் அந்த நபர் ஊழியரை கம்பியால் தாக்கினார். பின் பக்தர்களும் மற்ற ஊழியர்களும் அந்த நபரை தடுக்க முயன்றபோது, அவர்களையும் அவர் தாக்கினார்.

     

    பிற பக்தர்களும் ஊழியர்களும் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பக்தர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். அபவர்கள் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில் காயமடைந்தவர்களில், ஒரு பக்தர் மற்றும் ஊழியர் ஆகிய இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு, பொற்கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போலீசார் அதிக சோதனைக்கு பின் பக்தர்களை உள்ளே அனுமதித்தனர். தாக்குதல் நடத்தியவர் அரியானாவின் யமுனா நகரில் வசிக்கும் சுல்பான் என்பது தெரியவந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
    • அமிர்தசரசில் தண்டவாளங்களில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சண்டிகர்:

    வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்தக் கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் பஞ்சாப்பில் இருந்து கடந்த மாதம் 13-ம் தேதி டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

    அதேநேரம் இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள அவர்கள் இதற்காக ஞாயிற்றுக்கிழமை ரெயில் மறியலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்த்சரஸ் நகரில் தண்டவாளங்களில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இதேபோல தமிழகத்திலும் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட மன்மோகன் சிங் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் கூறுகின்றன. #LSPolls #ManmohanSingh
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் தொகுதியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிட வேண்டும் என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மன்மோகன் சிங் போட்டியிட்டால் சீக்கிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் கூறினர். ஆனால், மன்மோகன் சிங், சாதகமான பதிலை கூறவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. போட்டியிட அவர் தயங்குவதாக கூறப்படுகிறது.

    மன்மோகன் சிங்கை அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட வைக்க முயற்சிப்பது இது முதல் முறையல்ல. 2009-ம் ஆண்டு தேர்தலின் போதும் இதே போன்று கோரிக்கை வைத்த போது, தனது உடல்நிலையை காரணம் காட்டி மன்மோகன் சிங் அதனை மறுத்து விட்டார்.



    1991-ம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் வரும் ஜூன் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. மக்களவைத் தேர்தல்களில் மன்மோகன் சிங் இதுவரை வெற்றி பெற்றது இல்லை. 1999 ம் ஆண்டு நடந்த தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட அவர் பா.ஜனதாவின் மல்கோத்ராவிடம் தோல்வி அடைந்தார். தற்போது, அசாமில் காங்கிரசுக்கு போதிய பலம் இல்லாததால் மன்மோகன் சிங் மீண்டும் தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. #LSPolls #ManmohanSingh

    பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரின் அருகே இன்று ராவணன் கொடும்பாவி எரிப்பை வேடிக்கை பார்த்தவர்கள் மீது ரெயில் மோதிய விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். #Dussehra #Amritsar #TrainAccident
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரின் அருகேயுள்ள சவுரா பஜார் பகுதியில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

    இவ்விழாவின் இறுதிக்கட்டமாக ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டது. பல அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவி கொளுந்துவிட்டு எரியும் காட்சியை மூடப்பட்டிருந்த 27-ம் எண் ரெயில்வே கேட்டின்  தண்டவாளத்தின் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.

    அப்போது, அந்த தண்டவாளத்தின் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. உற்சாக மிகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து கொள்வதற்குள் ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் மக்கள் கூட்டத்தின்மீது மோதியது.

    இந்த கோர விபத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமிர்தசரஸ் நகர துணை மாஜிஸ்திரேட் ராஜேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

    இந்த அசம்பாவிதத்துக்கு தசரா விழா குழுவினரின் அஜாக்கிரதையே காரணம் என கூறப்படுகிறது. அந்த பகுதியை கடந்துபோகும் போது ரெயிலின் வேகத்தை குறைக்குமாறு அவர்கள் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட ரெயில் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்திருக்க வேண்டும். அல்லது, ரெயில் வரும் நேரம் தொடர்பாக அங்கு குழுமி இருந்த மக்களிடம் ஒலிபெருக்கி மூலமாக எச்சரித்திருக்க வேண்டும் என சிலர் கருதுகின்றனர்.

    இந்த விழாவை காங்கிரஸ் கட்சியினர்தான் நடத்தினார்கள். நவ்ஜோத் சித்துவின் மனைவி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். மக்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தும்கூட அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். எனவே, இந்த விபத்துக்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும் என இன்னொரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

    சுமார் 50 உயிர்களை பறித்த இந்த கோர விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #Dussehra #Amritsar #TrainAccident
    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலரை பைக்கிள் வந்த இரு மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Punjab #municipalcouncillor #shotdead #Amritsar

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் குர்தீப் பெஹல்வான். இவர் அமிர்தசரசில் உள்ள கோல் பாக் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் நேற்று நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியை பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த குர்தீப் பெஹல்வானை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மீது 7 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு  ஜக்கு பாக்வான் பூரியா என்ற ரவுடிக்கும், கவுன்சிலருக்கும் இடையேயான முன்விரோதம் காரணமாக இருக்காலாம் என போலீசார் தெரிவித்துள்ளது.

    ஜக்கு பாக்வான் பூரியா தற்போது அமிர்தசரஸ் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். மாநகராட்சி கவுன்சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Punjab #municipalcouncillor #shotdead #Amritsar
    ×