search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shot dead"

    • இலங்கை U19 அணியின் முன்னாள் கேப்டனாக தம்மிகா நிரோஷனா இருந்தார்.
    • இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இலங்கை அணியின் முன்னாள் வீரரான தம்மிகா நிரோஷனா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை U19 அணியின் முன்னாள் கேப்டனாக அவரை நேற்று இரவு அவது வீட்டில் வைத்து மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நடந்த போது அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடன் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நிரோஷனாவை கொலை செய்தவர் 12 ரக போர் துப்பாக்கியை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர்.
    • பயங்கரவாதிகள் கொண்டு வந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கிரண் கிராமம் அருகே உள்ள சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்புப்படையினர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    மேலும், பயங்கரவாதிகள் கொண்டு வந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் என்கவுன்ட்டர்.
    • போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியில் திருச்சி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

    துரைசாமி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளது.

    துரைசாமி, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த ரவுடியை பிடிக்கச் சென்றபோது சம்பவம் நடந்துள்ளது.

    ஏற்கனவே ஒரு முறை ரவுடி துரையை போலீசார் துப்பாக்கியில் சுட்டுப்பிடித்துள்ளனர்.

    ரவுடி துரை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் ஆய்வு செய்துள்ளார்.

    41CNI0150602024: பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள். இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர் மாவட்டம் அடுஜ்மத் வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்களும், 4 மாவட்ட போலீசாரும் இணைந்து நக்சல்வேட்டையில் ஈடுபட்டனர்.

    நக்சலைட்டுகளும், பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்கினார்கள். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

    பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.

    இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    • நக்சல் தடுப்பு வேட்டையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
    • நக்சல் தடுப்பு வேட்டையில் நக்சல் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை.

    சத்தீஸ்கரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் கங்களூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

    நக்சல் தடுப்பு வேட்டையில் நக்சல் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

    • காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
    • சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது.

    ஒட்டாவா:

    அரியானா மாவட்டம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்தவர் சிராஜ் அந்தில் (வயது 24). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு உயர்படிப்புக்காக கனடா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் எம்.பி.ஏ. படித்து முடித்த பின் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    சிராஜ் அந்தில் கனடா நாட்டின் வான்கூர் நகரில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது சொகுசு காரில் வெளியில் சென்றார்.

    இந்த நிலையில் அவர் காருக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக கனடா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சிராஜ் அந்தில் சகோதரர் ரோஹித் கூறும்போது எனது அண்ணனுக்கு யாருடனும் பகை கிடையாது. எல்லோரிடமும் அவர் பாசமாக தான் பழகுவார். அவருடன் நான் தினமும் செல்போனில் பேசுவேன். சம்பவத்தன்று இரவு கூட நான் பேசினேன். அதற்குள் இப்படி நடந்து விட்டது என சோகத்துடன் தெரிவித்தார்.

    • மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
    • நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

    மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினருடன் இன்று நடந்த என்கவுன்டரில் 4 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர்.

    மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நாசகார செயல்களில் ஈடுபடும் நோக்கத்தில், தெலுங்கானாவில் இருந்து சில நக்சலைட்டுகள், பிரன்ஹிதா நதியைக் கடந்து கட்சிரோலிக்குள் நுழைந்ததாக, நேற்று மதியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் போர்ப் பிரிவான சி-60 மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் விரைவு நடவடிக்கைக் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

    ரெப்பன்பள்ளி அருகே உள்ள கோலமார்கா மலைப்பகுதியில் இன்று காலை சி-60 பிரிவு குழு ஒன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பிறகு, அப்பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது. இதில், நான்கு ஆண் நக்சலைட்டுகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    மேலும், அவர்களிடம் இருந்து ஒரு ஏகே-47 துப்பாக்கி, ஒரு கார்பைன், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், நக்சல் புத்தகம் மற்றும் பிற பொருட்களும் மீட்கப்பட்டதாக அதிகாரி கூறினார்.

    உயிரிழந்த நக்சலைட்டுகள் வர்கீஸ், மக்து, இருவரும் வெவ்வேறு நக்சல் குழுக்களின் செயலாளர்கள் மற்றும் படைப்பிரிவு உறுப்பினர்களான குர்சங் ராஜு மற்றும் குடிமெட்டா வெங்கடேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • நஃபே சிங்குடன் கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் உயிரிழந்தார்.
    • காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதி.

    அரியானாவில் இந்திய தேசிய லோக்தள தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான நஃபே சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

    பகதூர் என்ற இடத்தில் நஃபே சிங் காரில் சென்று கொண்டிருந்தபோது சூழ்ந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

    அப்போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து நஃபே சிங் மற்றும் கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் ஆகியோர் உயிரிழந்தனர்.

    மேலும், காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பாகிஸ்தானில் அடுத்த வாரம் பொது தேர்தல் நடைபெற உள்ளது.
    • இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வரும் 8-ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், வடமேற்கு பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியான பஜார் பழங்குடியின மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளராக ரெஹான் ஜெப்கான் போட்டியிடுகிறார். இவருக்கு இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

    ரெஹான் ஜெப்கான் சித்திக்காபாத் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரது கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ரெஹான் ஜெப்கான் மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் உடலில் குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் வேட்பாளர் ரெஹான் ஜெப்கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான்-இ-இன்சாப் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தது.

    இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆதரவாளர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்றிருந்தார்.
    • முன்னாள் எம்.எல்.ஏ.-வை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

    அருணாசல பிரதேச மாநிலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மியான்மர் எல்லை பகுதியில் அமைந்துள்ள இடாநகர் மாவட்டத்தின் ராஹோ கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.

    தனிப்பட்ட வேலை காரணமாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யெம்செம் மாட்டே தனது ஆதரவாளர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் காட்டுப்பகுதியில் வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை சுட்டுக் கொன்றவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 2009-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோன்சா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட யெம்செம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

    பிறகு 2015-ம் ஆண்டு பா.ஜ.க.-வில் இணைந்த இவர், 2024 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். அரசியலில் இணையும் முன் யெம்செம் சங்கலாங் மாவட்டத்தின் கல்வித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
    • துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வலதுசாரி ஆதரவு அமைப்பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோகமெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சுகதேவ் தனது வீட்டில் நேற்று மதியம் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் சுகதேவ் சிங் கோகமெடி உயிரிழந்தார்.

    அவருடன் பேசிக்கொண்டிருந்த நபர் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர்.


    ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் படுகொலைக்கு வசுந்தர ராஜே சிந்தியா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ராஜஸ்தானில் அரசியல் கட்சி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு இன்று ராஜஸ்தானில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அமைப்பினர் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராஜஸ்தானில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • சுகதேவ் சிங் கோகமெடியும், மர்ம கும்பலை சேர்ந்த ஒருவனும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
    • துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேதி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் வலதுசாரி ஆதரவு அமைப்பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோககெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    சுகதேவ் தனது வீட்டில் இன்று மதியம் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டது.

    இதில், சுகதேவ் சிங் கோகமெடியும், மர்ம கும்பலை சேர்ந்த ஒருவனும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். சுகதேவ் உடன் பேசிக் கொண்டிருந்த நபர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேதி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×