என் மலர்
நீங்கள் தேடியது "shoot"
- கடந்த 7-ந்தேதி நடந்த சோதனையின்போது ரெனி நிக்கோல் என்ற பெண்ணை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.
- அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது மிளகு தெளிப்பானை அடித்து கீழே தள்ளி தாக்கினர்.
அமெரிக்காவில் குடியேற்ற சட்ட விதிகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இச்சோதனையில் குடியேற்ற துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மினசோட்டா மாகாணத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக மின்னபொலிஸ் நகரில் போராட்டம் தீவிரமாக உள்ளது. அங்கு கடந்த 7-ந்தேதி நடந்த சோதனையின்போது ரெனி நிக்கோல் என்ற பெண்ணை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.
அவர் அதிகாரிகள் மீது காரை ஏற்ற முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் மின்ன பொலிஸ் நகரில் வாலிபர் ஒருவரை குடியேற்ற துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். குடியேற்ற சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தபோது அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி(வயது 37) என்ற வாலிபர் தனது செல்போனில் அதிகாரிகளை வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது மிளகு தெளிப்பானை அடித்து கீழே தள்ளி தாக்கினர். இதில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி தன்னிடம் துப்பாக்கி வைத்திருந்ததால் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறும்போது, "மின்ன பொலிஸ் நகரில் ஒரு கைத்துப்பாக்கியுடன் வந்த ஒருவர் அதிகாரிகளை அணுகினார். அவரிடமிருந்து ஆயுதத்தைப் பறிக்க முயன்றபோது அவர் அதிகாரிகளை தாக்கினார். அப்போது அதிகாரி ஒருவர் தற்காப்புக்காகச் சுட்டார்" என்று தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது,குடியேற்ற துறை அதிகாரிகள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டியிருந்தது என்றும் மினசோட்டர் கவர்னர், மேயர் ஆகியோர் கிளர்ச்சியை தூண்டுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டியிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
வாலிபர் சுட்டுக் கொல்லப் பட்டதை யடுத்து மினசோட்டாவில் போராட் டங்கள் வெடித்தது. இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.
- இயக்குனர் வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
- படம் முழுக்க முழுக்க ஒரு ரொமாண்டிக் கமெர்சியல் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை தற்காலிகமாக சூர்யா 46 என அழைக்கப்படுகிறது.
இயக்குனர் வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
சூர்யா 46 திரைப்படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு ரொமாண்டிக் கமெர்சியல் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
படத்தின் பூஜைவிழா நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு பணிகள் கடந்த மே 30ம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சூர்யா 46 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
- ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.
- இந்தச் சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
வியன்னா:
ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அதன்பின் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், தகவலறிந்து காலை 10 மணிக்கு (உள்ளூர் நேரம்) சிறப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தனர். பலியானோர் விவரங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.
300,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராஸ் நகரம், ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
- படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டம்.
- டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார்.
யுகே கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்ஷா நடிக்கும், திரைப்படம் "ஃபேமிலி படம்". இந்த படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் தொடங்கியது.
ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க போராடுகிறார்கள். அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அழகான குடும்பத்தின் வாழ்க்கையை எண்டர்டெயினர் படமாக அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன் உருவாக்குகிறார். இப்படம் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் ஜனரஞ்சக படைப்பாக இருக்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக சுபிக்ஷா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், ஆர்.ஜே பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிவீ இசையமைக்கிறார். கேபி நந்து கலை இயக்கம் செய்கிறார். ஆர் சுதர்ஷன் எடிட்டிங் செய்கிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

கிறிஸ்ட்சர்ச்:
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்குவதாக இருந்தது.
இந்த நிலையில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட இந்த சம்பவத்தில் 49 பேர் பலியானார்கள். தொழுகைக்காக திரண்டு இருந்த போது இந்த பயங்கர சம்பவம் நடந்தது. வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் தொழுகைக்காக அந்த மசூதிக்கு சென்றனர். நல்ல வேளையாக அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். இதை தொடர்ந்து 3-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வங்காளதேச பேட்ஸ்மேன் தமிம் இக்பால் கூறியதாவது:-
இந்த சம்பவத்தில் வங்காள தேச வீரர்கள் அனைவருமே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம். என்னால் இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. நாங்கள் அனைவரும் தற்போது ஓட்டலில் நலமாக உள்ளோம்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரம்தான் நாங்கள் இருந்தோம். இது ஒரு மோசமான பயங்கரம் நிறைந்த அனுபவம் ஆகும். எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #NZMosqueAttack #tamimiqbal
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் பிரவுன்ஸ்வில்லே பகுதியில் வீட்டு உபயோகப் பொருள் கடையில் நேற்று இரவு வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கி விட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த மர்ம நபர், திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினான்.
இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய ஆசாமி ஓடிவிட்டான். இது தொடர்பாக மியாமி டேட் கவுண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது பொதுமக்களை மட்டுமின்றி காவல்துறையையும் கவலை அடையச் செய்துள்ளது. #FloridaShotting






