என் மலர்
நீங்கள் தேடியது "படப்பூஜை"
- 'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழில் அறிமுகமாகிறார்.
- புதுமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ், பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார்.
'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படம் 'ஏஜிஎஸ் 28'.
குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்குகிறார். இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார்.
அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை வடிவமைக்கிறார்.
'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழில் அறிமுகமாகிறார்.
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய ட்ரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' என மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியது.
- கவின் நடிக்கும் 9 ஆவது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
- படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் கிஸ் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
கவின் நடிக்கும் 9 ஆவது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. கென் ராய்சன் இயக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
இந்நிலையில், இப்படத்திற்கான பூஜையின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
கனா காணும் காலங்கள், கட்சி சேர பாடல் ஆகியவற்றை இயக்குநர் கென் ராய்சன் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாலிவுட் நட்சத்திரம் அபார்ஷக்தி குரானா, ROOT படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம்.
- ‘ROOT – Running Out of Time’ இணையும் கௌதம் ராம் கார்த்திக் மற்றும் அபார்ஷக்தி குரானா.
'நாளைய இயக்குநர் – சீசன் 1' மூலம் கவனத்தை ஈர்த்த சூரியபிரதாப் 'ROOT – Running Out of Time' படத்தை இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர்.
வெரஸ் ப்ரொடக்ஷன்ஸ் தனது முக்கிய படமான 'ROOT – Running Out Of Time' எனும் புதிய Sci-Fi கிரைம் த்ரில்லரை அறிவித்துள்ளது.
படத்தின் முதன்மை கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் இந்த புதிய முயற்சி எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளது. நடிகை பவ்யா த்ரிகா, கௌதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.
அவருடன் இணைந்து, இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் பிரபல நடிகர் அபார்ஷக்தி குரானா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இந்தி சினிமாவில் 'Stree', 'Helmet', 'Luka Chuppi' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்த இவர், இப்போது தென்னிந்திய சினிமாவில் கால்பதிக்கிறார்.
இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
இந்தப் படம், அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் த்ரில்லராக உருவாகிறது.
இயக்குநர் சூரியபிரதாப் கூறுகையில்," "'ROOT' எனும் இந்தக் கதை ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு முக்கியமான கனவுப் பிராஜெக்ட். ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அமைந்த கிரைம் த்ரில்லரை, அறிவியல் பின்னணியுடன், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களோடு சேர்த்து உருவாக்கும் முயற்சி தான் இந்த படம்.
கௌதம் ராம் கார்த்திக், கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து காவல் அதிகாரியாக முழு ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அபார்ஷக்தி குரானா, தமிழில் தனது முதல் படத்திற்கே மிக உயர்ந்த செயல்திறன் கொண்ட நடிகராக உருவெடுக்கிறார்" என்றார்.
- படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டம்.
- டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார்.
யுகே கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்ஷா நடிக்கும், திரைப்படம் "ஃபேமிலி படம்". இந்த படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் தொடங்கியது.
ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க போராடுகிறார்கள். அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அழகான குடும்பத்தின் வாழ்க்கையை எண்டர்டெயினர் படமாக அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன் உருவாக்குகிறார். இப்படம் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் ஜனரஞ்சக படைப்பாக இருக்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக சுபிக்ஷா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், ஆர்.ஜே பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிவீ இசையமைக்கிறார். கேபி நந்து கலை இயக்கம் செய்கிறார். ஆர் சுதர்ஷன் எடிட்டிங் செய்கிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






