என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pooja"

    • அக்.31ஆம் தேதி ரீரிலீஸ் ஆக இருந்த நிலையில் வெளியீடு தள்ளிப்போனது.

    சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியான திரைப்படம் அட்டகாசம்.

    இந்தப் படத்தை விஜய்ம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது. தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.

    இந்தப் படம் வரும் அக்.31ஆம் தேதி ரீரிலீஸ் ஆக இருந்த நிலையில் வெளியீடு தள்ளிப்போனது.

    இந்நிலையில் அட்டகாசம்' திரைப்படம் வரும் 28ம் தேதி(வெள்ளிக்கிழமை) ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்ட படத்தின் புதிய டிரெய்லரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது.

    சமீபமாக கார் ரெஸிங்கில் அஜித் பிஸியாக உள்ளார். அடுத்ததாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் அஜித் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அட்டகாசம் ரீரிலீஸ் ரிலீஸ் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    • தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.
    • ரேஸிங்கில் அஜித் பிஸியாக இருப்பதால் புதிய படம் உருவாக தாமதமாகும் நிலையில் அட்டகாசம் ரீரிலீஸ் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

    சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியான திரைப்படம் அட்டகாசம்.

    இந்தப் படத்தை விஜய்ம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது. தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.

    இந்நிலையில், இந்தப் படம் வரும் அக்.31ஆம் தேதி ரீரிலீஸ் ஆக உள்ளதாக அதிர்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐஎஃப்பிஏ மேக்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பாக பிரியா நாயர் படத்தை ரீரிலீஸ் செய்கிறார்.

    கடைசியாக அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது.

    தற்போது கார் ரேஸிங்கில் அஜித் பிஸியாக இருப்பதால் புதிய படம் உருவாக தாமதமாகும் நிலையில் அட்டகாசம் ரீரிலீஸ் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.  

    • 'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழில் அறிமுகமாகிறார்.
    • புதுமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ், பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார்.

    'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புதிய படம் 'ஏஜிஎஸ் 28'.

    குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்குகிறார். இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார்.

    அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை வடிவமைக்கிறார்.

    'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழில் அறிமுகமாகிறார்.

    முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய ட்ரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' என மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியது. 

    • கதையும் நடிகைக்கு பிடித்துப்போனதால் விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பூஜா மீண்டும் சினிமாவுக்கு திரும்ப இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

    'உள்ளம் கேட்குமே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா. 'அட்டகாசம்', 'ஜே.ஜே.', 'நான் கடவுள்', 'ஓரம்போ' என பல படங்களில் நடித்த பூஜா, தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாள படங்களிலும் கலக்கினார்.

    இலங்கையை சேர்ந்தவரான பூஜா, 2016-ம் ஆண்டு தொழில் அதிபர் பிரசான் டேவிட் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய பூஜா, கணவரின் தொழிலையும் சேர்த்து கவனித்துக்கொண்டு வந்தார். அவ்வப்போது இலங்கை படங்களில் தலைகாட்டி வந்தார்.

    இதற்கிடையில் பூஜா தமிழ் சினிமாவுக்கு வருகிறார் என்று கூறப்படுகிறது. 2 இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லியிருக்கிறார்களாம். கதையும் நடிகைக்கு பிடித்துப்போனதால் விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பூஜா மீண்டும் சினிமாவுக்கு திரும்ப இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. 44 வயதிலும் அவரது அழகு குறையவில்லை என பாராட்டு தெரிவித்தும் வருகிறார்கள்.

    • கவின் நடிக்கும் 9 ஆவது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
    • படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் கிஸ் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

    கவின் நடிக்கும் 9 ஆவது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. கென் ராய்சன் இயக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    இந்நிலையில், இப்படத்திற்கான பூஜையின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கனா காணும் காலங்கள், கட்சி சேர பாடல் ஆகியவற்றை இயக்குநர் கென் ராய்சன் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடை பெற்றது.
    • சிறப்பு பூஜையை முன்னிட்டு சாய்பாபாவுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடை பெற்றது. சிறப்பு பூஜையை முன்னிட்டு சாய்பாபாவுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சாய்பாபா பக்தர்கள் அதிகாலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் நேரடியாக சாய்பாபாவுக்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர்.கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.

    • சிறப்பு அலங்காரத்தில் கருடபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மங்கலம் ஊராட்சி நீலிகணபதிபாளையம் பகுதியில் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, சமேத கருடபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை சிறப்புபூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கருடபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜையில் நீலிகணபதிபாளையம், சுல்தான்பேட்டை, எம்.செட்டிபாளையம், வி.ஐ.பி.நகர், மீனாட்சிநகர், ஜீவாநகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கருடபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற போது கோவிலின் கோபுரத்தைச் சுற்றி நேற்று கருடன் வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. சிறப்பு பூஜை நிறைவடைந்ததும் கருடன் சென்றுவிட்டது. சிறப்பு பூஜை நிறைவடைந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ஐப்பசி அஷ்டமி பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்

    கரூர்:

    ஐப்பசி மாத அஷ்டமியை ஒட்டி, கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகழுரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் கால பைரவ ருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யபட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின், சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் புன்னம் சத்திரம் அருகே, புன்னை வன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள காளபைரவர், திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள கால பைரவர். குந்தாணி பாளையம் நத்தமேட்டில் ஈஸ்வரன் கோவிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    • இன்று 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
    • மகா தீபாராதனை நடைபெற்று சம்வத்ராபிஷேகம் நடக்கிறது.

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு தலம் நாகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ராகு பகவான் நாகக்கன்னி, நாகவல்லி என இரு தேவியருடன் மங்கள ராகுவாக அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி முதல் ஆண்டு சம்வத்ராபிஷேகம் நேற்று மாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    அர்ச்சகர்கள் சங்கர், செல்லப்பா, சரவணன், ராஜேஷ், மூர்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு யாகசாலை பூஜைகளை நடத்தினர். இரவு முதல் கால பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(வியாழக்கிழமை) காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று சம்வத்ராபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய உதவி ஆணையர்(கூடுதல் பொறுப்பு) உமாதேவி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • பெருமாளுக்கு 9 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • பெண்களுக்கு திருமாங்கல்யம் வேண்டி பூஜைகள் நடைபெற்றது

    ஆனைமலையில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருமாங்கல்ய சிறப்பு பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கு 9 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதையடுத்து பூக்கள், மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    9 பழங்கள் வைத்து பெண்களுக்கு திருமாங்கல்யம் வேண்டி தீபாராதனை காண்பித்து பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், நாகம்மன் கோவிலில் ஐப்பசி மாதாந்திர வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலை 4.30 மணியளிவில் நடை திறக்கப்பட்டு பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம். திருநீறு, நறுமண பொருட்கள் உள்பட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து கோவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் காலை 11 மணி முதல் 3 மணி வரை சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • உணவுப் பொருட்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
    • ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடக்க இருந்தது. தற்போது பெய்து வரும் மழையால் பார்வேடு மண்டபத்தில் நடக்க இருந்த உற்சவத்தை ரத்து செய்து விட்டு நேற்று கோவிலில் உள்ள வைபவ மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடத்தப்பட்டது.

    அதையொட்டி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை வைபவ மண்டபத்துக்கு கொண்டு வந்து எழுந்தருள செய்தனர். அங்கு உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், இளநீர், பன்னீர், தேன் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்வித்தனர். உற்சவர்களுக்கு நைவேத்தியம் செய்த உணவுப் பொருட்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

    உற்சவத்தில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    ×