search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In the temple"

    • அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்
    • சன்னதியில் தேங்காய் கொடுத்தார்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கிலும் அமாவாசை யன்று லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

    நேற்று பெண் பக்தர் ஒருவர் உற்சவர் அம்மன் சன்னதியில் தேங்காயை கொடுத்தார். அதை பூசாரிகள் உடைக்கும் போது அதன் உட்புறம் இரண்டு மூடிகள் இருந்தது அங்கிருந்தவர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.

    • பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கி ழமையை முன்னிட்டு பிரசன்ன வெங்கட்ராமன் சாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்க லத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கி ழமையை முன்னிட்டு பிரசன்ன வெங்கட்ராமன் சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சா மிர்தம், தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வெங்கட்ரமண சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு துளசி இலை, தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் ஸ்ரீ கூத்தாண்டவர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த கோவிலில் கடந்த ஒரு வார காலமாக மாரியம்மன், ஸ்ரீ கூத்தாண்டவர் ஆகியோர் தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திரகவுண்டன் பாளையம் பகுதியில் ஸ்ரீ கூத்தாண்டவர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு வார காலமாக மாரியம்மன், ஸ்ரீ கூத்தாண்டவர் ஆகி யோர் தோரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற் றது. இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

    மேலும் நேற்று கூத்தாண் டவர் சாமி படுகளம் செய் யும் வழிபாடு நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பெண்களும், ஆண்களும் திரளாக கலந்து கொண்ட னர்.

    இதில் திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு அவர்கள் தங்கள் தாலியை அறுத்து வெள்ளை புடவை அணிந்தும் தலை விரி கோலத்தில் நடனம் ஆடி னார்கள். மேலும் சாமி ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று அங்கு படுகளம் செய்யப்பட்டது.

    பின்னர் குழந்தை வேண்டி நூற்றுக் கணக்கான பெண்கள் வெள்ளை புடவை அணிந்து, ஆற்றங்க ரைக்கு வந்து அக்னி தாண்டி பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு தங்கள் வேண்டுதலை வைத்தனர். இதில் குழந்தை இல்லாத வர்களுக்கு இந்த வேண்டு தல் வைத்தால் குழந்தை பிறக்கும் என ஐதீகம், இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் ராஜாவாய்க்கால் கரையோரம் அமைந்துள்ள மங்கள வராஹி அம்மன் ஆலயத்தில் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.
    • தொடர்ந்து மகா சண்டி ஹோமத்தில் பூரணகுதி இடப்பட்டு, வராகி அம்மனுக்கு கலசாபிஷேகம் நடந்தது.

    பரமத்திவேலூர்:Namakkal District News,

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் ராஜாவாய்க்கால் கரையோரம் அமைந்துள்ள மங்கள வராஹி அம்மன் ஆலயத்தில் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.தொடர்ந்து மகா சண்டி ஹோமத்தில் பூரணகுதி இடப்பட்டு, வராகி அம்மனுக்கு கலசாபிஷேகம் நடந்தது.

    விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் மாலை 3மணிக்கு விநாயகர் பூஜை, மங்கல இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 64 பைரவருக்கு பூஜை மற்றும் 13 அத்திரியாகங்கள் பாராயணம் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மகா சண்டி ஹோம விழா ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் பாண்டமங்கலம் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • வேத மந்திரங்கள் ஓத, கொடிமர பூஜைகள் நடந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த திருவதி கையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு மூலவரான வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு பால், தயிர், சந்தனம், தேன் மற்றும் மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து உற்சவர்களான சாமி-அம்பாள், தனி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கோவிலில் இருந்து விசேஷ மலர் அலங்காரத்தில் பஞ்ச மூர்த்தி சாமிகள் புறப்பட்டு கோவிலுக்கு வெளியே வந்து கொடிமரம் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து காலை 9 மணி அளவில் கோவில் முன்பு தயார் நிலையில் இருந்த கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கொடிமர பூஜைகள் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடந்தது.

    இதனை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள், ஹரகர மகா தேவா, ஓம் நமச்சிவாய, சிவாயநம, தென்னாடுடைய சிவனே போற்றி என்று பக்தி கோஷமிட்டனர். கொடியேற்றத்தில் சுப்பராய செட்டியார் பெண்கள் பள்ளி செயலாளர் மாதவன், சபாபதி, வானவில் ராஜா, கணேசன் மற்றும் கவுன்சிலர்கள், கோவில் நிர்வாகத்தினர், உற்சவ தாரர்கள், உபயதாரர்கள், கட்டளைதார்கள், கிராம முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள், வர்த்தக சங்க பிரமுகர்கள், இந்துசமய ஆன்மீக பேரவை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிரமோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது. முக்கிய திருவிழாவான திருத்தேரோட்டம் ஜூன் 1-ந்தேதி வியாழகிழமை காலை 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

    அன்று இரவு 7 மணிக்கு திரிபுரசம்ஹாரம் எனும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவதிகை பிரசித்தி பெற்ற சரநாராயண பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் எழுந்தருள உள்ளார். பின்னர் தேரில் வீற்றிருந்த திரிபுரசம்ஹாரமூர்த்தி, 3 அரக்கர்களையும் அவர்க ளது 3 கோட்டைகளையும் எரித்து சம்ஹாரம் நிகழ்த்தும் ஐதீக பெருவிழா நடக்கவுள்ளது.

    • திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது.
    • ஜூன் 2- ந் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா மற்றும் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை( 25- ந்தேதி) பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற ஜூன் 2- ந் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து கோவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்ததோடு, எல்லைக்கட்டும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முக்கிய விழாவான பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் பிடாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி முக்கிய மாடவீதியில் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள், ராகேஷ் குருக்கள் மற்றும் பலர் செய்திருந்தனர். விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு நேற்று சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு நேற்று சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில், கோவில் வெளி வாசலில் இருந்து சுமார் 40 அடி தூரத்தில் அமைந்துள்ள, கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுவது இக்கோவிலின் சிறப்பாகும்.
    • இந்த அதிசய சூரிய தரிச னத்தைக் காண உள்ளூரில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் - திருச்சி மெயின் ரோட்டில், கரைபோட்டான் ஆற்றின் கரையோரத்தில், ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

    புராண சிறப்பு பெற்ற இக்கோவிலில், சிவனும், அம்பாளும் தெற்கு நோக்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்ற னர். மேலும் இக்கோவிலின் 4 கோபுரங்களும், உள்மண்ட பமும் பிரமிடு வடிவில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில், கோவில் வெளி வாசலில் இருந்து சுமார் 40 அடி தூரத்தில் அமைந்துள்ள, கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுவது இக்கோவிலின் சிறப்பாகும். இந்த அதிசய சூரிய தரிச னத்தைக் காண உள்ளூரில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இந்த ஆண்டு நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 13-ந் தேதி (மாசி 27, 28, 29) ஆகிய 3 நாட்கள், மூலவர் சிவனின் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை சுமார் 6.20 மணிக்கு தொடங்கி சுமார் 15 நிமிடம் வரை இந்த அபூர்வ நிகழ்வு நடைபெறும்.

    அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தி னர் தெரிவித்துள்ளனர்.

    • பரமத்திவேலூர் பேட்டை ஸ்ரீ மகாபகவதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக 8-ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது.
    • சிறப்பு அபிஷேக ஆராதனையை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை ஸ்ரீ மகாபகவதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக 8-ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனையை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    அதனை தொடர்ந்து விநாயகர், பகவதிஅம்மன், மற்றும் முருகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவதி அம்மன், விநாயகர், முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • வீரணம்பாளையத்தில் ஸ்ரீ சீரடி முக்கன் சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலுார்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வீரணம்பாளையத்தில் ஸ்ரீ சீரடி முக்கன் சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபாவுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் பக்தர்களே, அவர்கள் கொண்டு வந்த பசும்பாலால் சாய் பாபாவிற்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் முழு கொப்பரை தேங்காயை பக்தர்கள் கொண்டு வந்து யாக தீயில் போட்டு வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபா பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் நாமக்கல், பரமத்தி, பரமத்திவேலுார், பொத்தனூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு, ஜேடர்பாளையம், வெங்கரை, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • தொட்டிபட்டி சாய்பாபா கோவிலில் உள்ள சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
    • பக்தர்களே நேரடியாக சாய்பாபாவிற்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டி சாய்பாபா கோவிலில் உள்ள சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாய்பாபாவிற்கு பிஸ்கட், நாட்டு வெல்லம், எண்ணைய், பூக்கள், தேங்காய் ஆகியவற்றை நேர்த்தி கடனாக வந்து செலுத்தினர். மேலும் பக்தர்களே நேரடியாக சாய்பாபாவிற்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்து மலைமுருகன் கோவிலில் முதலாம் ஆண்டு சூரசம்கார விழா வருகிற 30-ந் தேதி விமர்சையாக நடைபெறுகிறது.
    • இதில் ஆயிரக்கணக்கான் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்து மலைமுருகன் கோவிலில் முதலாம் ஆண்டு சூரசம்கார விழா வருகிற 30-ந் தேதி விமர்சையாக நடைபெறுகிறது.

    இதையொட்டி தினம் தோறும் சத்ரு சம்கார சிறப்பு பூஜை, யாகம் நடைபெற்று வருகிறது. 3-ம் நாள் நிகழ்ச்சியாக காலை மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு யாகம் நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோயிலின்நிர்வாகி ஸ்ரீதர் செய்தி ருந்தார். அர்ச்சகர் ஹரி தலைமை யிலான குழு வினர் சிறப்பு பூஜை, அலங்காரம், யாகத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். இரவு கந்த புராண சொற்பொழிவு நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×