என் மலர்

  நீங்கள் தேடியது "special worship"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மேகபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
  • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு

  கரூர்:

  தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகளூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் காலபைர வருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண் பிக்கப்பட்டது. இதேபோல் வேலா யுதம்பாளையம் அருகே தோட்டக் குறிச்சி, சேங்கல் மலை அடிவாரத்தில் உள்ள பைரவர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர்களால் அலங் காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபா ராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆவணி மாத பவுர்ணமியையொட்டி தளவாபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு புனித நீரால் நீராடப்பட்டு, பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி, மஞ்சள், குங்குமம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
  • இதேபோல் நாணப்பரப்பு மாரியம்மன், வேலாயுதம்பாளையம் மகாமாரியம்மன், கடம்பங்குறிச்சி மாரியம்மன், தோட்டக்குறிச்சி மலையம்மன், மண்மங்கலம் புதுகாளி அம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

  கரூர் :

  கரூர் ஆவணி மாத பவுர்ணமியையொட்டி தளவாபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு புனித நீரால் நீராடப்பட்டு, பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி, மஞ்சள், குங்குமம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பச்சை நிற பட்டு உடுத்தி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

  இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  இதேபோல் நாணப்பரப்பு மாரியம்மன், வேலாயுதம்பாளையம் மகாமாரியம்மன், கடம்பங்குறிச்சி மாரியம்மன், தோட்டக்குறிச்சி மலையம்மன், மண்மங்கலம் புதுகாளி அம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது
  • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்

  கரூர்

  நொய்யல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

  வேலாயுதம்பாளையம் அருகே புகழிமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர்,பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் நொய்யல் மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்தது

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகில் உள்ள கேப்பறை சித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான சித்த விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் வழிபாடு நடைபெற்றது. அதேபோல் திருவரங்குளம் கடைவீதியில் உள்ள விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

  தெப்பக்குளக்கரையில் அமைந்துள்ள சித்தி விநாயக ர் பிள்ளையாருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

  மேட்டுப்பட்டி சரளைப்பள்ளம் தரிசன விநாயகர், திருக்கட்டளை விநாயகர் கோவில், கைக்குறிச்சி விநாயகர், கோவில் பூவரசகுடி விநாயகர் கோவில், வல்லத்திராக்கோட்டை விநாயகர் கோவில், கீழையூர் நாயகர் கோவில், பாளையூர் விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வே று இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
  • சப்த கன்னிகளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  உடுமலை:

  திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன் ,விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை தரிசனம் செய்யவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர்.

  அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை கிருத்திகை பிரதோஷம், மகா சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. ஆவணி அமாவாசையையொட்டி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வாகனங்கள் மற்றும் பஸ்சில் திருமூர்த்தி மலைக்கு வந்தனர். பின்னர் மலையின் மீது உள்ள பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி சென்று குளித்து அடிவாரப் பகுதியில் மும்மூர்த்திகள், சுப்பிரமணியர், சப்த கன்னிகளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அமணலிங்கேஸ்வரை வழிபட்டு சென்றனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதிகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
  • மொகரம் பண்டிகையையொட்டி நடந்தது

  பெரம்பலூர்

  இஸ்லாமியர்கள் நாள்காட்டியின் முதல் மாதமான மொகரம் மாதத்தின் 10-வது நாள் ஆஸுரா நாளாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் வரலாற்றில் மிக முக்கியமான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் மொகரம் 10-ம் நாளில் நிகழ்ந்ததால் இந்த நாளை சிறப்பு மிக்க நாளாக இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் கொண்டாடுகின்றனர். இதன்படி ஆஸுரா தினமான நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் நோன்பிருந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சில மசூதிகளில் ஆஸுா தினம் குறித்த சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றன. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் மகாமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
  • அக்னி சட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  செம்பட்டி:

  திண்டுக்கல் அருகே ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் மகாமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மன் நின்ற நிலையில் இருப்பதால் ஒவ்வொரு வருடமும் அம்மனுக்கு திருவிழா எடுத்து வழிபாடு செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகள் கொரோனாவுக்கு பிறகு இவ்வருட 54-வது ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்த பக்தர்கள், அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்று கரைக்கு சென்றனர்.

  அங்கிருந்து பால் குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக பித்தளைப்பட்டி பிரிவு, செம்பட்டி-வத்தலக்குண்டு சாலை வழியாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

  அதன்பின்னர் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை செய்து தரிசனம் செய்தனர். இன்று அக்னி சட்டி எடுத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வரலட்சுமி விரத பூஜையையொட்டி பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
  • ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது

  பெரம்பலூர்:

  பெரம்பலூர் ஜெய்ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரத பூஜை நடந்தது. இதில் வரலட்சுமி சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு அர்ச்சனை, ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. சுமங்கலி பெண்கள் தமது கைகளில் மஞ்சள் சரடு கட்டி வரலட்சுமி விரதபூஜையை நடத்தினர். அப்போது உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும் வேண்டி லட்சுமி தோத்திரங்ளையும், லலிதா சகஸ்ர நாமத்தையும் பாராயணம் செய்தனர்.     

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
  • பக்தர்களுக்கு அன்னதானம், மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

  பல்லடம் :

  ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பல்லடம் வட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

  இதன்படி, பல்லடம் வடுகபாளையம் மாகாளியம்மன் கோவிலில், தாமரைப் பூக்களால் மாகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், கரடிவாவி மாரியம்மன் கோவில், பல்லடம் அங்காளம்மன் கோவில், ராசாகவுண்டம்பாளையம் மாகாளியம்மன் கோவில், மற்றும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடிவெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
  • ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

  வெள்ளகோவில் :

  வெள்ளகோவில் பகுதியில் உள்ள மாகாளியம்மன், செல்லாண்டியம்மன், கண்ணபுரம் மாரியம்மன், எல்.கே.சி நகர், புற்றுக்கண் நாகாத்தாள், மயில்ரங்கம் திருமலை அம்மன், மாரியம்மன், மஞ்சள் மாதா பகவதி அம்மன், உத்தமபாளையம் மாரியம்மன் கோவில்களில் நேற்று ஆடிவெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.ஆடிவெள்ளியையொட்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறப்பு பூஜையும், அபிசேக அலங்கார ஆராதனையும் நடைபெற்றது.
  • முத்துக்குமார சாமியை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வழிபட்டனர்.

  பல்லடம் :

  பல்லடம், ஆடி பண்டிகை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்லடம் பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

  இதன்படி பல்லடம் முத்துக்குமாரசாமி மலை கோவில்,சிறப்பு பூஜையும்,அபிசேக அலங்கார ஆராதனையும் நடைபெற்றது. இதில் மாதப்பூர், பல்லடம்,பொங்கலூர்,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் முத்துக்குமார சாமியை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடி பண்டிகை முன்னிட்டு மலை கோவிலில் இடுவாய் சரவணா காவடி குழுவினரின், காவடி ஆட்டம் நடைபெற்றது இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

  இதேபோல பல்லடம் தண்டபாணி கோவில், அங்காளஅம்மன் கோவில், பொன்காளியம்மன் கோவில், சித்தம்பலம் நவகிரக கோட்டை, உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி பண்டிகை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

  வாழப்பாடி:

  சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

  வாழப்பாடி அருகே பிரசித்திப்பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர், வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதர், பேளூர் அஷ்டபுஜமதன வேணுகோபால சாமி, வாழப்பாடி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அக்ரஹாரம் சென்றாயப்பெருமாள், வடபத்திர காளியம்மன் , புதுப்பாளையம் சக்தி மாரியம்மன், ஏத்தாப்பூர் சமயபுரம் மாரியம்மன் மற்றும் வாழப்பாடி ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். புதுப்பாளையம் சக்தி மாரியம்மன் பட்டாடை அலங்காரத்திலும், ஏத்தாப்பூர் சமயபுரம் மாரியம்மன் வெற்றிலை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

  ×