என் மலர்
நீங்கள் தேடியது "Siddhar Peedam"
- தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் மஹாபிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது.
- மகா சரஸ்வதிதேவிக்கு வித்யா விருத்தி ஹோமத்துடன் கூடிய சிறப்பு மகா யாக வழிபாடுகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம் பள்ளம் அய்ய னடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் மஹாபிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது. தென்தமிழகத்தில் ஆன்மிக சிறப்பு பெற்ற சித்தர் பீடத்தில் மாணவ, மாணவிகளின் நினைவாற்றல் அதிகரித்து பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற ஆண்டுதோறும் 'மஹா சரஸ்வதி தேவிக்கு வித்யா விருத்தி ஹோமம்' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மாணவ-மாணவிகளின் கல்வி ஞானம், நினை வாற்றல் அதிகரித்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றிடவும், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றிடவும் வேண்டி மகா சரஸ்வதிதேவிக்கு வித்யா விருத்தி ஹோமத்து டன் கூடிய சிறப்பு மகா யாக வழிபாடுகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
காலை 10மணிக்கு மஹா கணபதி, மஹாலெட்சுமி ஹோமமும், பகல் 11 மணிக்கு ஸ்ரீமஹா சரஸ்வதிதேவிக்கு மஹாயாக சிறப்பு வழிபாடும், மதியம் 12.30 மணிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், அதனைத்தொடர்ந்து மதியம் 2மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக நடைபெற்ற சிறப்பு மகா யாக வழிபாட்டில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு சற்குரு சீனிவாச சித்தர் வித்யா விருத்தி ஹோம வழிபாட்டில் வைத்து வழிபட்ட பேனாக்களை பரிசாக வழங்கினார்.
இதில், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்ட னர். ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் தலைமை யில் விழாக்குழு வினர், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
- குரு மகாலிங்கேஸ்வரருக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- 20-ந் தேதி (திங்கட்கிழமை) மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சரஸ்வதிதேவிக்கு மகா யாகத்துடன் கூடிய சிறப்பு வித்யா விருத்தி ஹோமம் வழிபாடு நடைபெறுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யன டைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஸ்ரீமஹா பிரத்தியங் கிராதேவி-கால பைரவர் ஸ்ரீசித்தர் பீடம் அமைந்துள்ளது. இங்கு, குருபகவான் குருமகாலிங்கேஸ்வராக தனிசந்தியில் எழுந்தருளி யுள்ளது மிகவும் சிறப்பான அம்சமாகும்.
சிவராத்திரி விழா
குரு மகாலிங் கேஸ்வர ருக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலா கலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கொண்டாடப்படுகிறது.
18-ந் தேதி காலை 10 மணிக்கு கணபதி, நவக்கிரக ஹோமம், கோபூஜை, மகாலெட்சுமி ஹோமத்து டன் மஹா சிவராத்திரி விழா தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மஹாபூஜை-தீபாரா தனையும், இரவு 9 மணிக்கு சிவராத்திரி வழிபாடு பூஜைகளும், பூர்ணாகுதி, அபிஷேக அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகிறது.
தொடர்ந்து இரவு 12 மணிக்கு அபிஷேகம், தமிழ் மறையில் தேவார திருவாசக பாராயணமும், அதிகாலை 2 மணிக்கு சதுர்வேத பாராயணமும், 4 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலுடன் சிவராத்திரி விழா நிறைவடைகிறது.
சிறப்பு வித்யா விருத்தி ஹோமம்
20-ந் தேதி (திங்கட்கிழமை) மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மாணவ-மாணவிகளின் கல்வி ஞானமும், ஞாபக சக்தியும் அதிகரித்து 10-ம் வகுப்பு, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நன்றாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக சரஸ்வதிதேவிக்கு மகா யாகத்துடன் கூடிய சிறப்பு வித்யா விருத்தி ஹோமம் வழிபாடு நடைபெறுகிறது.
அன்னதானம்
அன்று காலை 10 மணிக்கு மஹாகணபதி-மஹாலெட்சுமி ஹோமமும், பகல் 11மணிக்கு ஸ்ரீமஹா சரஸ்வதிதேவிக்கு மஹா யாக சிறப்பு வழிபாடும், மதியம் 12.30மணிக்கு அபிஷேக அலங்கார தீபாரதனையும், மதியம் 2மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.
வித்யா விருத்தி ஹோம வழிபாட்டில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு சற்குரு சீனிவாச சித்தர் யாகத்தில் வைத்து வழிபட்ட பேனாக்களை பரிசாக வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.
விழாவிற்கான ஏற்பாடு களை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் விழாக்கு ழுவினர், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- தை மஹாளய அமாவாசையை முன்னிட்டு சித்தர் பீடத்தில் முன்னோர்களுக்கான ‘பித்ரு பூஜை’யுடன் கூடிய மஹா யாக சிறப்பு வழிபாடுகள் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடந்தது.
- மஹா யாக சிறப்பு யாக வழிபாடுகள் அனைத்தும் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள சித்தர் பீடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, ஸ்ரீமஹா காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரருக்கு அமாவாசை, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி நாட்களில் 'சாக்தஸ்ரீ' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி, தை மஹாளய அமாவாசையை முன்னிட்டு சித்தர் பீடத்தில் முன்னோர்களுக்கான 'பித்ரு பூஜை'யுடன் கூடிய மஹா யாக சிறப்பு வழிபாடுகள் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடந்தது.
நாட்டில் தொழில்வளம் சிறக்க வேண்டியும், நன்கு மழை பெய்து பசுமை வளம் கொழிக்கவேண்டியும், உலக மக்கள் அனைவரும் நோய்கள் மற்றும் உடல் பிணிகள் நீங்கி நலமாக வாழவேண்டியும், கடன் தொல்லைகள் எதுவும் இல்லாமல் செல்வ செழிப்போடு வாழவேண்டியும் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர் மற்றும் குரு மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு யாக வழிபாடுகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து திருமஞ்சனம், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், பால், குங்குமம் உள்ளிட்ட 21வகையான அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது.
மஹா யாக சிறப்பு யாக வழிபாடுகள் அனைத்தும் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடந்தது. யாகத்தின் முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம், மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில், ஸ்ரீசித்தர் பீடத்தினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
- பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருக வேண்டி மஹா காலபைரவருக்கு யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
- சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம் பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் மஹா பிரத்தியங்கிரா தேவி-மஹா காலபைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
பைரவரின் பிறந்த தினமான மஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு உலகில் கொடிய நோய்கள் இல்லாமல் அன்பு-அமைதி நிலவ வேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும்,
பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருக வேண்டியும், நோய், நொடிகள், கடன் தொல் லைகள் இல்லாமல் செல்வங்கள் பெருகி வளமாக நலமாக வாழ வேண்டியும் ஸ்ரீசித்தர் பீடத்திலுள்ள ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
காலை 8.45மணிக்கு விநாயகர் வழிபாடுடன் தொடங்கிய யாக வழிபாட்டில், காலை 10.30மணிக்கு மஹா கால பைரவருக்கு சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பால், பழம், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, குங்கும், நெல், அன்னம், சங்கு, ருத்திராட்சம், தாமரை, புனுகு, அருகம்புல், மலர்கள் உள்ளிட்ட 64 வகையான சிறப்பு அபிஷேகம் மிக பிரம்மாண்டமாக பக்தர்கள் திரளாக பங்கேற்க ''பைரவா போற்றி போற்றி... காக்கும் கடவுளே மஹா கால பைரவா போற்றி போற்றி, கருணையின் தெய்வமே காலபைரவா போற்றி போற்றி '' என பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, மதியம் 12மணிக்கு ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை என பலவகையான மலர்களான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனையுடன் கூடிய சிறப்பு வழிபாடுகளும், தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு மஹா அன்ன தானமும் வழங்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.
சிறப்பு வழிபாடு களுக்கான ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக்கு ழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
- அய்யனடைப்பு சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மஹா யாகம் நடைபெற்றது.
- பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் 64 வகையான அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மஹா யாகம் நடைபெற்றது. பக்தர்களின் வாழ்வில் மனக்குறை கள், கடன்தொல்லைகள் நீங்கிடவும், பருவ மழை பெய்திட வேண்டியும் சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் யாகம் தொடங்கியது. பின்னர் பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், சந்தனம், திருநீறு, மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 64 வகையான அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வழிபாட்டுக் குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.