search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saturn Migration Worship"

    • 29-ந்தேதி (புதன்கிழமை) காலை 8மணிக்கு லட்சுமி பூஜையுடன் சனிப்பெயர்ச்சி விழா தொடங்குகிறது.
    • தொடர்ந்து மஹாயாக வேள்வியும், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையுடன் சனிப்பெயர்ச்சி வழிபாடுகள் நடக்கிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இங்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு வருகிற 29-ந்தேதி காலை முதல் இரவு வரை ஸ்ரீமங்களம் தரும் சனீஸ்வரருக்கு 64வகையான அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை, மஹா யாக வேள்விகளுடன் சிறப்பு வழிபாடுகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடக்கிறது.

    29-ந்தேதி (புதன்கிழமை) காலை 8மணிக்கு மங்கள இசை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கன்னிகா பூஜை, லட்சுமி பூஜையுடன் சனிப்பெயர்ச்சி விழா தொடங்குகிறது. காலை 10மணிக்கு மஹா பிரத்தியங்கிரா தேவி, மஹா காலபைரவருக்கு ஹோமம் நடக்கிறது.

    அதனைத்தொடர்ந்து, காலை 10.51மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் நேரத்தில் ஸ்ரீமங்களம் தரும் சனீஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், தேன், நெய், திருநீறு, பஞ்சாமிர்தம் உள்பட 64வகையான அபிஷேகம் சாக்தஸ்ரீசற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடக்கிறது.

    அபிஷேகத்தினை தொடர்ந்து மஹா யாக வேள்வியும், சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனையுடன் சனிப்பெயர்ச்சி வழிபாடுகள் நடக்கிறது. மதியம் 1மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்விழாவில், பக்தர்கள் தவறாமல் பங்கேற்று சனிப்பெயர்ச்சி வழிபாடுகளை மேற்கொண்டு சனீஸ்வரரின் தொல்லைகளில் இருந்து விடுபட்டு வாழ்வில் பேரானந்த பெருவாழ்வு பெற்று இன்புறுமாறு சாக்தஸ்ரீசற்குரு சீனிவாச சித்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×