search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி சித்தர் பீடத்தில் வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசை யாகம் - சீனிவாச சித்தர் தகவல்
    X

    தூத்துக்குடி சித்தர் பீடத்தில் வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசை யாகம் - சீனிவாச சித்தர் தகவல்

    • பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், நன்கு மழை பெய்து விவசாயம் சிறப்பாக நடைபெறவும் வேண்டி சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு யாக வழிபாடுகள் நடைபெறுகிறது.
    • தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர் உள்ளிட்ட 16வகையான அபிஷேகம் நடக்கிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம் பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகர் சித்தர் பீடத்தில் பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் குருமகாலிங்கேஸ்வரரர், மங்களம் தரும் சனீஸ்வரர், வாராஹி அம்மன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

    சித்தர் பீடத்தில் வருகிற 16-ந் தேதி (புதன்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு யாகம் மற்றும் 16 வகையான அபிஷே கத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகிறது.

    பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன்தொல்லைகள், எதிரித் தொல்லைகள் யாவும் நீங்கி டவும், பணம்,செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், திருமணவரன், குழந்தை பாக்கியம் கிடைத்திடவும், தகுதிக்கேற்ப அரசு வேலை கிடைத்திடவும், நன்கு மழை பெய்து விவசாயம் சிறப்பாக நடைபெறவும் வேண்டி சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு யாக வழிபாடுகள் நடை பெறுகிறது.

    அன்று காலை 9.10 மணிக்கு மஹா யாகத்திற்கான வழிபாடுகள் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சீனிவாச சித்தர் தலைமையில் கணபதி, நவக்கிரக ஹோமம், மஹா பிரத்தி யங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் கோலா கலமாக தொடங்கு கிறது. காலை 10.30மணிக்கு சிறப்பு மஹா யாகம் தொடங்கி நடைபெறுகிறது.

    தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவிக்கும், மஹா காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16வகையான அபிஷேகமும், மதியம் 1.20மணிக்கு மஹா தீபாரா தனையும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து மதியம் 1.30மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    செல்வவளத்தை அள்ளித்தந்திடும் சிறப்பு மஹா யாக வழிபாட்டில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்குமாறு சித்தர் பீடத்தின் சுவாமிகள் "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×