என் மலர்

  நீங்கள் தேடியது "Maha Sivaratri"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குரு மகாலிங்கேஸ்வரருக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • 20-ந் தேதி (திங்கட்கிழமை) மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சரஸ்வதிதேவிக்கு மகா யாகத்துடன் கூடிய சிறப்பு வித்யா விருத்தி ஹோமம் வழிபாடு நடைபெறுகிறது.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யன டைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஸ்ரீமஹா பிரத்தியங் கிராதேவி-கால பைரவர் ஸ்ரீசித்தர் பீடம் அமைந்துள்ளது. இங்கு, குருபகவான் குருமகாலிங்கேஸ்வராக தனிசந்தியில் எழுந்தருளி யுள்ளது மிகவும் சிறப்பான அம்சமாகும்.

  சிவராத்திரி விழா

  குரு மகாலிங் கேஸ்வர ருக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலா கலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கொண்டாடப்படுகிறது.

  18-ந் தேதி காலை 10 மணிக்கு கணபதி, நவக்கிரக ஹோமம், கோபூஜை, மகாலெட்சுமி ஹோமத்து டன் மஹா சிவராத்திரி விழா தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மஹாபூஜை-தீபாரா தனையும், இரவு 9 மணிக்கு சிவராத்திரி வழிபாடு பூஜைகளும், பூர்ணாகுதி, அபிஷேக அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகிறது.

  தொடர்ந்து இரவு 12 மணிக்கு அபிஷேகம், தமிழ் மறையில் தேவார திருவாசக பாராயணமும், அதிகாலை 2 மணிக்கு சதுர்வேத பாராயணமும், 4 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலுடன் சிவராத்திரி விழா நிறைவடைகிறது.

  சிறப்பு வித்யா விருத்தி ஹோமம்

  20-ந் தேதி (திங்கட்கிழமை) மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மாணவ-மாணவிகளின் கல்வி ஞானமும், ஞாபக சக்தியும் அதிகரித்து 10-ம் வகுப்பு, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நன்றாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக சரஸ்வதிதேவிக்கு மகா யாகத்துடன் கூடிய சிறப்பு வித்யா விருத்தி ஹோமம் வழிபாடு நடைபெறுகிறது.

  அன்னதானம்

  அன்று காலை 10 மணிக்கு மஹாகணபதி-மஹாலெட்சுமி ஹோமமும், பகல் 11மணிக்கு ஸ்ரீமஹா சரஸ்வதிதேவிக்கு மஹா யாக சிறப்பு வழிபாடும், மதியம் 12.30மணிக்கு அபிஷேக அலங்கார தீபாரதனையும், மதியம் 2மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.

  வித்யா விருத்தி ஹோம வழிபாட்டில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு சற்குரு சீனிவாச சித்தர் யாகத்தில் வைத்து வழிபட்ட பேனாக்களை பரிசாக வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

  விழாவிற்கான ஏற்பாடு களை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் விழாக்கு ழுவினர், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

  ×