search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்த சஷ்டி விழாவை ஒட்டி  வாழப்பாடி பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
    X

    பட்டு வஸ்திர அலங்காரத்தில் அருள்பாலித்த வாழப்பாடி வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியர் சாமியை படத்தில் காணலாம்.

    கந்த சஷ்டி விழாவை ஒட்டி வாழப்பாடி பகுதி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள முருகன் கோயில்களில், கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை, சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் பட்டு வஸ்திர அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள முருகன் கோயில்களில், கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை, சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வாழப்பாடியில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயிலில், மூலவருக்கு தேன், பால், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் அபிசேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பட்டு வஸ்திர அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பேளூர் வெள்ளிமலை வேல்முருகன் கோயிலில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. மூலவர் வேல்முருகன், ராஜ அலங்காரத்தில் காட்சி யளித்தார்.

    இதேபோல், வாழப்பாடி காசி விஸ்வநாதர் மற்றும் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், கொட்டவாடி கந்தசாமி கோயில், பாலசுப்பிரமணியர் கோயில் மற்றும் புதுப்பாளையம், சின்னகிருஷ்ணாபுரம், அத்தனூர்பட்டி, துக்கியாம் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டியையொட்டி அபிசேக ஆராதனைகளுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×