என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனிச்சம்பாளையம் காவேரி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
    X

    அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனிச்சாம்பாளையம் ஸ்ரீ காவேரி ஆஞ்சநேயர், பரமத்திவேலூர் பால ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. 

    அனிச்சம்பாளையம் காவேரி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

    • ஆஞ்சநேயர் சுவாமிக்கு 21-ம் ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு நேற்று காலை பக்தர்கள் காவரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அனிச்சம்பாளையம் குட்டுக்காடு காவேரி கரை யில் ஸ்ரீ காவேரி ஆஞ்சநேயர் சுவாமிக்கு 21-ம் ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை பக்தர்கள் காவரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் மேல தாளங்கள் முழங்க தீர்த்த குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    மதியம் 12 மணிக்கு காவேரி ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், இளநீர், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளான நன்செய்இடையார், பொய்யேரி, காமாட்சி நகர், குப்பச்சிபாளையம், பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம், பரமத்திவேலூர், அனிச்சம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஸ்ரீ காவேரி ஆஞ்சநேயர் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    அதேபோல் பரமத்தி வேலூரில் எல்லையம்மன் கோவிலில் உள்ள பால ஆஞ்சநேயருக்கு, ஜெயந்தி விழாவை முன்னிட்டு பலவகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சந்தன காப்பு அலங்காரத்துடன் வடை மாலை சாற்றப்பட்டு மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வடை,

    பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×