search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Darga"

    • காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாகிப் வலியுல்லா என்ற இறைதூதர், 18-ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்ள இந்தியா வந்தார்

    புகழ்பெற்ற மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் நாளை(பிப்.20) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாகிப் வலியுல்லா நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாகிப் வலியுல்லா என்ற இறைதூதர், 18-ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்ள இந்தியா வந்தார். இந்தியாவில், திருச்சி, நாகூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றி வந்தார். காரைக்காலில் தங்கி இருந்தபோது. அவர் இயற்கை எய்தினார். அவரது நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    • கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    கடையநல்லூர்:

    மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடைய நல்லூர் பகுதியில் மக்தூம் ஞானியார் தர்கா உள்ளது.

    இந்த தர்காவில் நூறாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு என்று சொந்தமாக யானை வாங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை வளர்க்க சில ஆண்டுகளாக வனத்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் தர்காவினர் வளர்த்து வந்ததால், வனத்துறை தெரிவித்த தகவலின்பேரில், சென்னையில் இருந்து யானை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கமிட்டியினர் ஒரு குழுவாக கடையநல்லூர் வந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு யானையை பார்வையிட்டனர்.

    இந்நிலையில் யானையை வளர்க்க தோட்டம், நீச்சல் குளம், தூங்குவதற்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவை தர்காவில் இல்லை என்று கூறி உடனடியாக இந்த யானையை பறிமுதல் செய்து திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல அந்த குழு உத்தரவு பிறப்பித்தது.

    அதனைத்தொடர்ந்து நேற்று இரவு கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    தற்போது 58 வயது கொண்ட இந்த பெண் யானையின் எடை 4.5 டன் ஆகும். இந்த தர்காவிற்கு இது 5-வது யானையாகும். நூற்றாண்டு பழமையான இந்த தர்காவில் இருந்து யானையை வனத்துறையினர் கைப்பற்றி சென்றது அங்குள்ளவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

    இதனால் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து யானையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதேநேரத்தில் யானை பாகன் நத்கர் பாதுஷா, யானையின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதபடி யானைக்கு பிரியா விடை கொடுத்தார்.

    • ேகாரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
    • உள்ளூர் மட்டும் மில்லாமல் வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்க உள்ளனர்.

    மதுரை

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குத்து புல் ஹஜ்ரத் காஜாசையத் சுல்தான் அலாவுதீன், அவு லியாக்களின் தர்காவில் சந்தனக்கூடு என்னும் உரூஸ் மத நல்லிணக்க விழா இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு இன்று அதி காலை 6 மணியளவில் உரூஸ் கொடி பாரம்பரிய ஹக்த்தார்கள் முன்னிலையில் யாசின் ஓதிதுஆவுடன் ஏற்றப்பட்டன.

    இதில் திரளான முஸ்லீம்கள் மற்றும் பொது மக்கள் ஜாதி, மத பேதமின்றி பங்கேற்று அவுலியாக்களின் நல்லாசி பெற்றனர்.

    மாலை நடைபெறும் உரூஸ் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மின்சார விளக்கு கள் அலங்காரத்துடன் மேளதாள வாத்தியம் ஒட்டகம், நாட்டிய குதிரை யுடன் சந்தனக்கூடு ஊர்வ லம் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தர்காவை வந்தடையும். இந்த விழாவை காண உள்ளூர் மட்டும் மில்லாமல் வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி தர்கா முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடு களை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சையது சம்

    சுதீன், சையது ரசூல், சம்சுதீன் அபு மற்றும் பரம்பரை தர்கா ஹக்தார்கள் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.

    • பெரிய மினோரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
    • பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள் என தேசிய கொடிகளை பறக்கவிட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினோரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினோராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.

    இதேபோல நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் நாகை நகராட்சி அலுவலகமும் கண்கவர் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. முகப்பு பகுதியில் 3 நாட்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    • இளையான்குடி அருகே உள்ள தர்காவில் தமிழ்மகன் உசேன் தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
    • முன்னதாக அவர் அ.தி.மு.க. கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    சிவகங்கை

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தமிழகம் முழுவதும் உள்ள தர்காவிலும் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்.

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் புதூரில் புலவர் மீரா தர்காவில் மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில் நாதன் தலைமையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திட சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடத்தினார்.

    பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.வில் ஜாதி, மதம் கிடையாது. அவரவர் மத வழிபாட்டின் படி இறைவனிடம் வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்து மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திட பிரார்த்திப்போம் என்றார்.

    முன்னதாக அவர் அ.தி.மு.க. கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், நகரசெயலாளர் மீரா, ஒன்றிய செயலாளர்கள் பாரதிராஜன், ஜெகதீசுவரன், கோபி, செல்வமணி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கந்தூரி விழா டிசம்பர் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • தர்கா சின்ன ஆண்டவர் வாசல் முன்பு தர்கா கலிபா சிறப்பு துவா ஓதினார்.

    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா அடுத்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதைமுன்னிட்டு வெள்ளை முகூர்த்தம் பணி தொடங்கியது. முன்னதாக தர்கா சின்ன ஆண்டவர் வாசல் முன்பு தர்கா கலிபா சிறப்பு துவா ஓதினார். இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி மற்றும் போர்டு ஆப் டிரஸ்டிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×