search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepam festival"

    • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • இன்று மாலை 5 மணியளவில் கோவிலில் உள்ள உற்சவர் மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, 27 தீபங்கள் ஏற்றப்பட்டு பூஜை நடைபெறும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முருகப்பெருமானுக்கு நேற்று மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அபிஷேகத்தின் போது திரவிய பொடி, மாவு பொடி, திருநீறு, மஞ்சள், சந்தனம், இளநீர், தயிர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையினர், தொல்லியல் துறையினர், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (7-ந்தேதி) மாலை 5 மணியளவில் கோவிலில் உள்ள உற்சவர் மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, 27 தீபங்கள் ஏற்றப்பட்டு பூஜை நடைபெறும்.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டு கோவிலை வலம் வந்து ஏழு மணி அளவில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.

    பிறகு சுடர் (சாம்பல்) எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து பிரசாதம் வழங்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி முழு ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது.
    • 21 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

     திருப்பூர் :

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதில்,பங்கேற்கசெல்லும் பக்தர்களுக்குபல்வேறு அமைப்புகள்,தொண்டு நிறுவனங்கள் சார்பில்அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இந்த சேவையில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் பங்கெடுத்து வருகிறது.அவ்வகையில், திருப்பூர் பத்மாவதிபுரத்தில் இயங்கி வரும் திருவண்ணாமலை டிரஸ்ட் மூலம்இரு மண்டபங்களில் 21 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.தொடர்ந்து, 40வது ஆண்டாக, இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டுஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    இதற்காக திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் ஏற்பாட்டில், வசூலிக்கப்பட்ட 2 லட்சம் ரூபாயை,டிரஸ்ட் செயலாளர் சண்முகசுந்தரத்திடம், எம்.எல்.ஏ., வழங்கினார். டிரஸ்ட் நிர்வாகிகள்விவேகானந்தம், மோகனசுந்தரம், முருகேசன்,சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • புரட்டாசி மாதம் சனிக்கிழமை கிருஷ்ணரை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல சவுபாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    • 6.45 மணிக்கு மகா தாமோதர தீபாராதனையும், 7 மணிக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலை வாய்க்கால்தோட்டம் பகுதியில் உள்ள காஞ்சி காமாட்சிஅம்மன் கோவிலில் நாளை (சனிக்கிழமை) தீபத்திருவிழா நடக்கிறது. புரட்டாசி மாதம் சனிக்கிழமை கிருஷ்ணரை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல சவுபாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி கோவிலில் நாளை மாலை 4.30 மணிக்கு விழா தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றப்படுகிறது.

    5.15 மணிக்கு கிருஷ்ணகானம் இன்னிசை கச்சேரி நடக்கிறது. மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், 6.45 மணிக்கு மகா தாமோதர தீபாராதனையும், 7 மணிக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது.  

    ×