என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Girivalam"
- வட மற்றும் தென் ஒத்தவாட வீதிகளில், நீண்ட வரிசையில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.
- 2 வழித்தடங்களில் உள்ள பாதைகளிலும், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வேங்கிகால்:
திருவண்ணாமலையில் இன்று மாலை ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது. இதனையொட்டி இன்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
அதிகாலை கோவிலில் நடை திறக்கும் போதே தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.
ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வட மற்றும் தென் ஒத்தவாட வீதிகளில், நீண்ட வரிசையில் பக்தர்கள் திரண்டிருந்தனர். 2 வழித்தடங்களில் உள்ள பாதைகளிலும், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி பவுர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்திக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது.
தரிசனம் முடிந்து பக்தர்கள் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே சென்றனர்.
ராஜகோபுரத்தை காட்டிலும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அதிகாலையிலேயே உள்ளே செல்ல ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
வரிசையில் நிற்காமல், கோபுர நுழைவு வாயிலில் கூட்டமாக குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் மற்றும் பக்தர்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர். நசுங்கிய குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ள செல்ல முடியாமல் பல மணி நேரமாக காத்திருந்தனர்.
சிலர் குழந்தைகளை தங்களது தலை மற்றும் தோல் மீது தூக்கி சுமந்தபடி அம்மணி அம்மன் கோபுர வாசலை கடந்து உள்ளே சென்றனர். பக்தர்கள் வரிசையில் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் அதனை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் அம்மணி அம்மன் கோபுர வாசலில் குவிந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணமானது.
தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து மாட வீதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர்.
கோவில் வெளி பிரகாரம் முதல் பொது தரிசன வரிசை, மூலவர் சன்னதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் மாட வீதி வரை அணிவகுத்து நின்றனர்.
மேலும், பக்தர்களின் வருகை அதிகரித்திருப்பதால், அதிகாலை முதல் தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஏராளமான பக்தர்கள் நமசிவாய கோஷம் எழுப்பியபடி பரவசத்துடன் கிரிவலம் சென்றனர்.
- கிரிவல பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையை வலம் வந்து வழிபட்டனர்.
ஆனி மாத பவுர்ணமி இன்று வெள்ளிக்கிழமை காலை 7.46 மணிக்கு தொடங்கி நாளை சனிக்கிழமை காலை 7.21 மணிக்கு நிறைவு பெறுகிறது.
பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்து வழிபட்டனர்.
கிரிவல பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் இன்று காலை முதல் பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்.
இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை நகரில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி விட்டன. அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் தாகம் தணிக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.
இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் கைக்குழந்தையுடன் வந்த பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்படி தனி வழி அமைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
சாமி தரிசனம் செய்த அனைவருக்கும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.
- பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் இங்குக் கிரிவலம் செய்கிறார்கள்.
- திருச்சி மாவட்டம் குளித்தலைக்கும் மணப்பாறைக்கும் இடையில் உள்ளது ஐயர் மலை.
ஈரோடு மாவட்டம் மேட்டூருக்கு அருகில் உள்ளது வேதகிரிமலை.
பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் இங்குக் கிரிவலம் செய்கிறார்கள்.
திருச்சி மாவட்டம் குளித்தலைக்கும் மணப்பாறைக்கும் இடையில் உள்ளது ஐயர் மலை.
இம்மலையில் குடிகொண்டிருக்கும் இறைவன் ரத்தின கிரீஸ்வரர் அம்பாள் அரும்பார் குழலி.
ஒவ்வொரு பவுர்ணமியிலும் இங்குக் கிரிவலம் நடைபெறுகிறது.
இம்மலையைப் பவுர்ணமி நாளில் கிரிவலம் செய்பவர்களுக்கு துயரங்களும், பிணிகளும் நீங்கி சகல நன்மைகளும் ஏற்படும்.
குறிப்பாக ஏழரை சனியின் கொடுமையாலும், சனி தசை இருப்பவர்கள் சனியின் கொடுமை விலகி சவுகரியம் ஏற்படும்.
- வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது.
- செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.
ஏழாவது லிங்கம் குபேர லிங்கம்.
வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது.
செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.
பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம்.
வடகிழக்கை நோக்கி உள்ள இந்த லிங்கம் ஈசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது.
இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதி யுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கொண்டு திகழ்வார்கள்.
- மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.
- இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பக்குளம் உள்ளது.
ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம்.
இதற்குரிய திசை மேற்கு.
மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.
இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம் சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பக்குளம் உள்ளது.
சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களில் இருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கி உள்ளது.
வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும்.
இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களில் இருந்து காத்து கொள்ளலாம்.
- சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது.
- இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்சினைகளின்றி வாழலாம்.
மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் எமலிங்கம்.
இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கி உள்ளது. எம தர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது.
இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம்.
இதனருகில் சிம்ம தீர்த்தம் எனப்படும் தெப்பகுளம் அமைந்துள்ளது.
இதை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம் என நம்பப்படுகிறது.
நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும்.
இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.
சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது.
இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்சினைகளின்றி வாழலாம்.
- சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம்
- வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.
கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம்.
இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது.
இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது.
சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம்
வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.
கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம்.
இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கி உள்ளது.
இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும்.
அக்னிலிங்கத்தை பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது.
இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன்.
மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள்.
இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.
- பன்னிரண்டு மாதங்களில் வரும் பவுர்ணமியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சித்ரா பவுர்ணமி கருதப்படுகிறது.
- இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது.
பன்னிரண்டு மாதங்களில் வரும் பவுர்ணமியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சித்ரா பவுர்ணமி கருதப்படுகிறது.
மற்ற பவுர்ணமி நாட்களை விட, சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்பு மிகுந்தது.
அன்றைய தினம் மலை வலம் வந்து முருகனை வழிபட்டால் மகத்தான வாழ்வு மலரும்.
சித்ரா பவுர்ணமியில் சித்ரகுப்தனையும் வழிபட வேண்டும்.
இந்த வழிபாட்டால் ஆயுள் விருத்தியும், ஆதாயம் தரும் செல்வ விருத்தியும் உண்டாகும்.
நமது பாவ புண்ணியங்களைப் பதிவு செய்து வைக்கும், சித்ரகுப்தனுக்கு அவர் அவதரித்த நாளில் விழா எடுப்பது சிறப்புக்குரியதாகும்.
பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர்.
இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.
இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது.
இதே போல் தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டி, கோவை சிங்காநல்லூர் எமதர்மன் கோவில்களிலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்ய கடன் வசூலாகும், வாணிபம் சிறக்கும், ஆயுள்பலம் கூடும் என்பது நம்பிக்கை.
- பஞ்ச பருவ பூஜைகளில் பவுர்ணமி தினத்தில் நடக்கும் பூஜை மிகவும் விசேஷமானது.
- அங்கு அவருக்கு தீபாராதனை உள்ளிட்ட உபசாரங்கள் நடத்தப்படும்.
பஞ்ச பருவ பூஜைகளில் பவுர்ணமி தினத்தில் நடக்கும் பூஜை மிகவும் விசேஷமானது.
அன்றைய தினம் கிரிவலத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் திரள்வது உண்டு.
ஆனால் பெரும்பாலானவர்கள் ஆலயத்தில் நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்பதில்லை.
அன்றைய தினம் மாலை உற்சவ மூர்த்தியான சந்திரசேகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.
பிறகு அவர் அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு ஆகி மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள்வார்.
அங்கு அவருக்கு தீபாராதனை உள்ளிட்ட உபசாரங்கள் நடத்தப்படும்.
இதை நேரில் கண்டுகளிப்பது மிகுந்த பலன் தருவதாக கருதப்படுகிறது.
- நாளை மறுநாள் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
- 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர்.
அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை மறுநாள் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- திருக்கார்த்திகை தினத்தில் கிரிவலம் வந்தால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது ஐதீகம்.
- வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால், பெண்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும்
திருவண்ணாமலையில் நாம் எந்த கிழமை கிரிவலம் செல்கிறோமோ, அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில் வரும் திருக்கார்த்திகை தினத்தில் கிரிவலம் வந்தால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது ஐதீகம்.
இது தொடர்பாக கூறப்படும் புராண நிகழ்வு வருமாறு:
ஒரு காலத்தில் அசுரர்கள் தங்களுக்கு நிறைய செல்வங்களை வழங்க வேண்டும் என்று திருமகளை வற்புறுத்தினார்களாம்.
ஆனால் திருமகள் அவர்களின் பேராசைக்கு இணங்காமல் அவர்களிடமிருந்து தப்பித்து திருவண்ணாமலைக்கு வந்தாள்.
அங்கு தைல எண்ணையில் தீபமாய் உறைந்து தீபமாக கிரிவலம் வந்தாள்.
அன்றைய தினம் ஒரு வெள்ளிக்கிழமை ஆகும்.
அதனால் வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் இல்லறப் பெண்களுக்கு லட்சுமி கடாட்சமும்,
இல்லற இன்பமும், அமைதியும், மாங்கல்ய பலமும் நிச்சமயாகக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
எதிரிகளால் ஏற்படுகின்ற பில்லி, சூனியம், ஏவல் முதலான துன்பங்களை அகற்றி மனக்கோளாறுகளை நீக்கவல்லது இந்த வெள்ளிக்கிழமை கிரிவலமாகும்.
எனவே வரும் கார்த்திகை தீப தின கிரிவலத்தை தவற விடாதீர்கள்.
+2
- இன்று காலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கவர்னர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
- திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர்.
வேங்கிகால்:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று மதியம் திருவண்ணாமலைக்கு வந்தார்.
அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் புத்தகம் கொடுத்து வரவேற்றார். தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து வந்த கவர்னர் ரவி, கிரிவலப்பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களை சந்தித்து பேசி அன்னதானம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வள்ளலார் ஆசிரமத்தில் தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கம் சார்பில் விவசாயிகளுடனான ஓர் சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் தமிழக கவா்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூட்டரங்கில் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்டு இருந்த விளைபொருட்களை பார்வையிட்டார்.
பின்னர் கவர்னர் அவரது குடும்பத்துடன் கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரமம் மற்றும் யோகி ராம்சுரத் ஆசிரமத்தில் தரிசனம் செய்த பின்பு நேற்று இரவு சுற்றுலா மாளிகையில் தங்கினார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கவர்னர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், நவகிரக சன்னதி தொடர்ந்து பாதாள லிங்கத்தை தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவல் குழு தலைவர் ஜீவானந்தம் தலைமையிலான உறுப்பினர்கள் மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
கிரிவலப் பாதைக்கு சென்று நிருதி லிங்கத்தில் சாமி தரிசனம் செய்த கவர்னர் அங்கிருந்து தனது மனைவி மற்றும் மகளுடன் கிரிவலம் சென்றார். திருநேர் அண்ணாமலையார் சன்னதி வரை சென்று நிறைவு செய்தார்
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். கிரிவலத்தை முடித்த பின்பு ஜவ்வாது மலைக்கு புறப்பட்டு சென்றார்.
இன்று மாலை காவலுார் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றுவிட்டு செஞ்சிக்கோட்டை செல்கிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்