என் மலர்
வழிபாடு

சிவன் கோவிலுக்கு சென்றால் அவசியம் படிக்க வேண்டிய பாடல்!- மேலும் சில ஆன்மிக தகவல்கள்
- எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திர நியதி இருக்கிறது.
- கற்பக விநாயகர் படத்தை வடக்குப் பார்த்து வைத்து வழிபட வேண்டும்.
விநாயகரை வணங்கும் முறை
அகரம், உகரம், மகரம் (அ, உ, ம) ஆகிய மூன்றும் சேர்ந்தது தான் 'ஓம்' என்ற நாதபிரம்மம். 'ஓம்' என்ற வடிவத்தில் விநாயகரின் உருவம் அமைந்துள்ளது. வலது கையால் முகத்துக்கு மேலாக இடப்பக்கத்திலும், இடது கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்றுமுறை குட்டிக் காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போட்டு கணபதியை வணங்க வேண்டும்.
சிவாலயங்களில் படிக்க வேண்டிய பாடல்
சிவாலயத்திற்கு செல்லும் பொழுது எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பிறகு இந்தப் பாடலை அவசியம் படித்து வழிபடுவது நல்லது.
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாய் பிழையும் நின்னஞ்செழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும் எல்லாப் பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!
நிலவொளியில் கிரிவலம் செல்வதால் ஏற்படும் நன்மைகள்
* ஆன்மிக நலம், அருள் ஏற்படும்.
* நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.
* நியாயமான கோரிக்கைகள் நிச்சம் கைகூடும்.
* திருமண தோஷம் விலகி, திருமணம் விரைவில் நடைபெறும்.
* குழந்தைச் செல்வம், நன்மக்கட்பேறு வாய்க்கும்.
* பகை விலகும்.
* உடல் உறுதி பெறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
* புகழும், பொருளும் கிடக்கும். தொழில் விருத்தி ஏற்படும்.
கோவிலில் பிரகாரம் வரும்பொழுது...
கணபதிக்கு ஒரு பிரகாரம்
சூரியனுக்கு இரண்டு பிரகாரங்கள்
சிவன் பார்வதிக்கு மூன்று பிரகாரங்கள்
விஷ்ணு இலக்குமிக்கு நான்கு பிரகாரங்கள்
அரச மரத்திற்கு ஏழு பிரகாரங்கள்
குடும்பத்தோடு பிரகாரம் வந்தால் கணவன் முதலாவதாகவும், மனைவி இரண்டாவதாகவும், பிள்ளைகள் மூன்றாவதாகவும் வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கணவனை முந்திக்கொண்டு மனைவி பிரகாரம் வரக்கூடாது.
கல்வியில் மறதி ஏற்படாமல் இருக்க கடவுள் துதி
வீட்டில் படிக்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் மாணவர்கள் சிலர், வினாத்தாளை வாங்கியவுடன் பதிலை மறந்து விடுவதுண்டு. இதனால் குறைந்த மதிப்பெண்களைப் பெறும் சூழ்நிலை அமைகின்றது. மாணவ மாணவியர்கள் தினமும் கலைவாணி துதிப்பாடல், சகலகலாவல்லி மாலை போன்றவற்றைப் படிக்கலாம். சரஸ்வதி கவசம் படித்தால் கல்வியில் தேர்ச்சியுறலாம். கற்றவர்கள் பாராட்டும் அளவு முன்னேற்றமும் வந்துசேரும்.
தெய்வங்களும்... திசையும்...
எந்த தெய்வத்தை எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திர நியதி இருக்கிறது. அதற்கேற்ப வழிபட்டால்தான், அற்புதமான பலன் கிடைக்கும். கற்பக விநாயகர் படத்தை வடக்குப் பார்த்து வைத்து வழிபட வேண்டும். ஆனால் நடராஜர் மற்றும் குரு தட்சிணாமூர்த்தி படங்களை தெற்கு நோக்கி இருக்கும் விதத்தில் வைத்து வழிபட்டால்தான், சிறப்பான பலன்களை பெற முடியும். நடராஜர் படத்தை திருவாதிரை நட்சத்திர நாளில், பூஜையறையில் வைத்து சிவபுராணம் படித்தால், கலைகளில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு கிட்டும். தட்சிணாமூர்த்தி படத்தை உத்திரம் நட்சத்திரம் அன்று பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால் வளர்ச்சியைக் காணலாம்.
பலம் தரும் பழங்கள்
பார்வை பலத்தைக் கூட்டும் நெல்லிக்கனி
இருதயத்தைக் காக்கும் மாதுளம் பழம்
ஜீரண சக்தியைக் கொடுக்கும் பப்பாளிப்பழம்
உடல் பருமனைக் கூட்டும் வாழைப்பழம்
தேனுடன் இணைத்துச் சாப்பிட்டால் இருமல் நீக்கும் பலாப்பழம்
ரத்த விருத்தியை அதிகரிக்கும் சாத்துக்குடி
சதைப்பிடிப்பை அகற்றும் திராட்சை
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் கொய்யா
ரத்தத்தைச் சுத்தமாக்கும் எலுமிச்சை
ஞாபக சக்தியைக் கூட்டும் விளாம்பழம்






