என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பக்தர்கள்"
- சிங்காரவேலவர் வள்ளி- தெய்வானையுடன் வலம் வரும் நிகழ்வு நடந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிக்கல் சிங்கார வேலவர் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது.
சிங்காரவேலவருக்கு பதினாறு வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தீபாரா தனையும் நடைபெற்றது.
ஆலய உட்பிரகாரத்தில் சிங்காரவேலவர் வள்ளி-தெய்வானையுடனும், தியாகராஜர், பெருமாள் உட்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கோவில் வாசலில் சொக்கபனை தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 25 அடி உயரத்தில் சொக்கப்பனை கட்டி அதனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
- ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.
வேதங்கள் பூசை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாற்று சிறப்புடைய கோயில் அகஸ்திய மாமுனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தந்த இடம் ஆகும்.
இந்த கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கல்யாணசுந்தரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்று கோவில் வளாகத்தில் பனை ஓலையால் 25 அடி உயரத்தில் சொக்கப்பனை கட்டி அதற்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- மூலவருக்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
கார்த்திகை தீபதிருநாளில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் முருகனின் ஆதிபடை வீடான நாகை மாவட்டம் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக மூலவருக்கு மஞ்சள் பொடி பால் தயிர் 14 வகையான திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது தொடர்ந்து தேரடியில் அருகே அமைத்திருந்த சொக்கப்பணைக்கு மஞ்சள் பொடி திரவிய பொடி பால் மற்றும் புனித கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து ஏற்றி வந்த பரணி தீபம் கொண்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து முருகப்பெ ருமானுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மகா தீபத்திற்கு நாள் ஒன்றுக் சுமார் 650 கிலோ நெய் பயன்படுத்தப்பட உள்ளது.
- தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், 10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.

இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.
பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.
மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா "என்று விண்ணதிர கோஷம் எழுப்பி வணங்கினர்.
தொடர்ந்து பிற்பகல் 3.30 மணியளவில் மகாதீபம் ஏற்றப்படுவதற்கு முன்பாக நிகழ்வுகள் நிடைபெற்றது. கொப்பரையில் காடா துணி நிரப்பப்பட்டது. சுமார் 175 கிலோ எடை கொண்ட கொப்பரையின் உயரமானது 6.5 அடி ஆகும். மகா தீபத்திற்கு நாள் ஒன்றுக் சுமார் 650 கிலோ நெய் பயன்படுத்தப்பட உள்ளது. தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.
நிகழ்வின் ஒரு பகுதியாக, பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஷ்வரர் ஆகியோரும் கொடி மரத்தின் முன்பாக எழுந்தருளினர்.
அண்ணாமலையார் கோயில் கொடிமரம் முன்பு உள்ள அலங்கார மண்டபத்திற்கு விநாயகர் வருகை தந்தார்.
முருகன், உண்ணாமலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் ஆகியோரும் வருகை தந்தனர்.
இந்நிலையில், 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் மகா தீபம் ஏற்றப்பட்டது.

பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கோயில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது.
ஆண்டுக்கு ஒரு முறை காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோமீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தைப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கார்த்திகை பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோவிலில் கார்த்திகை பெருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேரோட்டம்
தினமும் இடும்ப, பூத, ஆட்டுக்கடா, யானை, காமதேனு, வாகன ங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. திருக்கார்த்திகை தினமான இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஈடுபட்டனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் சரவணவேல், பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், துணைத் தலைவர் சங்கர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் நான்கு வீதிகளில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்திருந்தனர்.
- தஞ்சைக்கு 5.58 மணிக்கும், திருச்சிக்கு 7.35 மணிக்கு சென்று சேருகிறது.
- வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி ஆகிய ரெயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும்.
தஞ்சாவூர்:
திருச்சி கோட்ட ரெயில்வே சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது.
இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம் வழியாக வேலூருக்கு சிறப்பு ரெயில் (06117) இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் திருச்சியில் இருந்து நாளை காலை 4.50 மணிக்கு புறப்பட்டு பூதலூர், தஞ்சை, பாபநாசம், கும்பகோணம் வழியாக காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலைக்கும், மதியம் 1 மணிக்கு வேலூ ருக்கும் சென்றடைகிறது.
அதே ரெயில் மறுமார்க்கத்தில், நாளை வேலூரில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.17 மணிக்கு கும்பகோணம் வந்தடையும், தொடர்ந்து தஞ்சைக்கு 5.58 மணிக்கும், திருச்சிக்கு 7.35 மணிக்கு சென்று சேருகிறது.
இந்த சிறப்பு ரெயில், திருவெறும்பூர், மயிலாடுதுறை, வைத்தீ ஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருக்கோவிலூர், போளூர் ஆகிய ரெயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாமக்கல் கோட்டையில் நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித் தாயார் கோவில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
- இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டையில் நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித் தாயார் கோவில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தினசரி ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை அலங்காரம் நடைபெறும். நல்லெண்ணெய், சீயக்காய், மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
வெண்ணை காப்பு
இந்த கோவிலில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கட்டளைதாரர்கள் மூலம் சுவாமிக்கு வெண்ணைக் காப்பு அலங்காரம் நடைபெறும்.
மொத்தம் 120 கிலோ வெண்ணை மூலம் சுவாமிக்கு அலங்காரம் செய்து வெண்ணை காப்பு உற்சவம் நடைபெறும். இவ்வாறு வழிபட்டால் சுவாமி உள்ளம் குளிர்ந்து பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.
முன்பதிவு
தற்போது கார்த்திகை மாதம் தொடங்கி உள்ளதால் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணைக் காப்பு அலங்காரத்திற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி வெண்ணைய் காப்பு அலங்காரத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
என கோவில் உதவி ஆணையர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
- கும்ப கலசத்திற்கும், மூலவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இடையிருப்பு ஊராட்சி, நெடுஞ்சேரி கிராமத்தில் மதுர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மகாபூர்ணஹீதி யாத்ரா ஹோமம், சோமகும்பபூஜை உள்பட யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபா ராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து திவ்ய கடங்கள் புறப்பட்டு நடைபெற்றது.
பின்னர் கும்ப கலசத்திற்கும், மூலவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இந்த மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- அண்ணாமலையார் திருத்தேர் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.
- தேரோட்டாத்தை காண ஆயிரம் கணக்கான பக்தர்கள் கோவிலை சூழ்ந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மகா ரதம் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் திருத்தேர் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.
தேரோட்டாத்தை காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையை சூழ்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், தேரோட்டத்தின்போது மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் சிலர் காயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறைவான மின்சாரம் பாய்ந்ததால் பக்தர்கள் சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
கூட்டத்தில் ஒரு பகுதியில் இருந்த பக்தர்கள் மீது மாட வீதியில் இருந்த கடை ஒன்றில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதை அறிந்த காவல்துறையினர் மின்சாரம் நிறுத்தப்பட்டு பக்தர்களை மீட்டனர்.
- அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
- ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 26-ந்தேதி காலை பரணி தீபம் மாலை 6 மணிக்கு மாலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
தீபத் திருவிழாவையொட்டி தொடர்ந்து இரவு மாட வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தீபத் திருவிழாவில் 7-வது நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம் நடந்தது. காலை 6.45 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து விநாயகர் தேர் நிலைக்கு வந்த பிறகு முருகர் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு மேல் அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.
பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
ரத வீதிகளில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் பக்தர்கள் பரவசத்துடன் காணப்பட்டனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள்.
அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தேரோட்ட த்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது. விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.