என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வள்ளலார் சத்யதர்மசாலைக்கு அரிசி மூட்டைகளை தோளில் சுமந்து வந்து வழங்கிய ஜெர்மன் நாட்டினர்
- தைப்பூச விழாவில் கலந்து கொள்ள தற்போது பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர்.
- ஜெர்மன் நாட்டில் இருந்து பக்தர்கள் குழுவினர் தைப்பூச விழாவை காண வடலூருக்கு வந்தனர்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் கடந்த 1867-ம் ஆண்டு சத்ய தர்மசாலையை நிறுவி அணையா அடுப்பை ஏற்றி வைத்தார்.
இந்த அணையா அடுப்பு இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது. இந்த அணையா அடுப்பு மூலம் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு இரவு பகலாக தொடர்ந்து அன்னதானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி வடலூரில் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்த தைப்பூச விழாவில் கலந்து கொள்ள தற்போது பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஜெர்மன் நாட்டில் இருந்து பக்தர்கள் குழுவினர் தைப்பூச விழாவை காண வடலூருக்கு வந்தனர்.
வள்ளலார் எடுத்துரைத்த ஜீவகாருண்ய ஒழுக்கம் என்று கூறப்படும் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்ற உணர்வால் அன்னதானம் வழங்குவதற்காக அரிசி மூட்டைகளை ஜெர்மன் நாட்டு பயணிகள் தங்கள் தோளில் சுமந்து வந்து கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்கள்.
வள்ளலார் அன்று அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்று கூறியது கடல் கடந்து ஜெர்மன் நாட்டு பயணிகள் அரிசி மூட்டைகளை தங்கள் தோளில் சுமந்து வந்து வழங்கிய சம்பவம் வள்ளலார் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






