என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Japanese"

    • சீனாவின் மிகப்பெரிய உணவு ஆதாரமாக ஜப்பான் நாட்டின் கடல் உணவுகள் உள்ளன.
    • இருநாடுகளிடையே ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் ஜப்பானில் இருந்து சீனாவில் இறக்குமதியாகிறது.

    பீஜிங்:

    அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கி சீனா அச்சுறுத்தி வருகிறது.

    ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால் வெகுண்டெழுந்த சீனா, ஜப்பானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்த நாட்டிற்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மேலும் அறிவுறுத்தியது.

    சீனாவின் மிகப்பெரிய உணவு ஆதாரமாக ஜப்பான் நாட்டின் கடல் உணவுகள் உள்ளன. மீன்கள், இறால்கள், கடல் நண்டுகள், ஸ்குவிட்கள், ஆக்டோபஸ்கள் போன்றவை அங்கிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இருநாடுகளிடையே ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் ஜப்பானில் இருந்து சீனாவில் இறக்குமதியாகிறது.

    இந்தநிலையில் ஜப்பான் கடல் உணவுகளுக்கு சீன அரசாங்கம் நிரந்தர தடை விதித்தது. மேலும் அந்த நாட்டின் சினிமாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • 100-க்கும் மேற்பட்ட ஜப்பான் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர்.
    • நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டையுடன் கோவிலுக்குள் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்த சிறந்த பரிகார தலமாகாவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். திருவிழா காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் இன்று ஜப்பானிய ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில் முருகன் மற்றும் பழனி புலிப்பாணி ஆசிரமம் கவுதம் கார்த்திக் ஒருங்கிணைப்பில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப குரு முனி மற்றும் அவர்களது சீடர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர்.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த முருக பக்தர்கள் கடந்த கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பழனி, ராமேஸ்வரம் உட்பட 128 கோவில்களுக்கு ஆன்மிக பயணமாக சென்று தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த முருக பக்தர்கள் நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டையுடன் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர், சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

    மேலும் கோவிலுக்கு வெளியே வந்த ஜப்பான் நாட்டு முருக பக்தர்கள் ஒன்று கூடி தமிழில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா, ஞானவேல் முருகனுக்கு அரோகரா, கந்தவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் முழங்க முருகனை வழிபட்டு சென்றனர்.

    • ஜப்பானைச் சேர்ந்த முராட்டா நிறுவனம் சென்னையில் கெபாசிட்டர் ஆலை அமைக்கிறது.
    • ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள் தயாரிக்கப்படவுள்ளன.

    ஜப்பானைச் சேர்ந்த முரட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சென்னை ஓஎம்ஆர் சாலையில் தொழிற்சாலை அமைக்க உள்ளது.

    மல்டிலேயர் செராமிக் கேபாசிட்டர் என்ற உதிரிபாகத்தை இந்த ஆலையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    முராட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஆப்பிள், சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வருகிறது.

    இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், "ஓராண்டாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பயன் கிடைத்துள்ளது. இந்நிறுவனம் 2026ம் ஆண்டில் முழு அளவிலான உற்பத்தியை மேற்கொள்ளும்" என்றார்.

    • நள்ளிரவில் மிளகாய் வத்தல் யாகம் நடத்தினர்.
    • வேத மந்திரங்கள் ஓதியவாரு ஜப்பான் நாட்டினர் பூஜையில் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் நடிகைகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக பகுதியில் உள்ள கோவில்களில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் உலக நன்மை வேண்டியும், அமை திகாக்கவும் புதுச்சேரியை அடுத்த மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் நேற்று நள்ளிரவில் மிளகாய் வத்தல் யாகம் நடத்தினர்.

    கோவில் பீடா திபதி நடாத்தூர் ஜனார்த்தனன் சாமிகள் தலைமையில் நடைபெற்ற பூஜையில் 108 கிலோ மிளகாய் வத்தல் உட்பட 108 யாக பொருட்களைக்கொண்டு பூஜைகள் நடந்தது. இதில் இந்திய முறைப்படி வேத மந்திரங்கள் ஓதியவாரு ஜப்பான் நாட்டினர் பூஜையில் கலந்துகொண்டனர்.

    பின்னர் பய பக்தியுடன் பிரத்தியங்கிரா காளியை வழிபட்டனர். ஜப்பான் நாட்டினர் இந்திய முறைப்படி யாகம் நடத்தி சாமி தரிசனம் செய்ததை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து வியப்படைந்தனர்.

    ஆசிய போட்டியில் பங்கேற்க இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்த ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் ஓட்டலில் உல்லாசம் அனுபவித்தது தொடர்பாக 4 பேருக்கு ஒரு ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #AsianGame #Japanese
    டோக்கியோ:

    ஆசிய போட்டியில் பங்கேற்க இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்த ஜப்பான் கூடைப்பந்து வீரர்கள் ஹசி மோட்டா, கெய்டா இமாமுரா, நகாயோஷி, தகுமோ சாட்டோ ஆகியோர் ஜகர்தாவில் உள்ள பாருக்கு சென்று மது அருந்தியதுடன், 4 பெண்களை அழைத்து கொண்டு அங்குள்ள ஓட்டலில் உல்லாசம் அனுபவித்ததாக புகார் எழுந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய ஜப்பான் கூடைப்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு 4 வீரர்களுக்கும் தலா ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. அத்துடன் 3 மாதங்கள் அவர்களது சம்பளத்தில் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
    ×