என் மலர்
நீங்கள் தேடியது "தொழிற்சாலை"
- இந்த ஆலையில் இராணுவம், விண்வெளி மற்றும் வணிகத் துறைகளுக்குத் தேவையான வெய்டபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது
- வெடிப்பின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடுகள் கூட கடுமையாக குலுங்கின.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள வெடிபொருள் உற்பத்தி ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் இராணுவம், விண்வெளி மற்றும் வணிகத் துறைகளுக்குத் தேவையான வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க நேரப்படி காலை 7.45 மணிக்கு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிப்பின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடுகள் கூட கடுமையாக குலுங்கின. உள்ளூர் மக்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் பயந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 18 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.
- பற்றி எறிந்த திரியில் சம்பவ இடத்திலேயே 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
- அவர்களில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று மதியம், ஜோல்வா கிராமத்தில் உள்ள சந்தோஷ் டேஸ்டைல் மில் ஆலையில் ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்த டிரம் வெடித்துச் சிதறியதால் தீவிபத்து ஏற்பட்டது. 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து வரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, காயமடைந்த 20 தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களுக்கு சூரத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- இப்ராஹிம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- தீயின் தீவிரம் மீட்புப் பணிகளை சவாலானதாக மாற்றியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
விவரங்களின்படி, மாவட்டத்தின் இப்ராஹிம்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த தீவிபத்து நடந்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலைக்குள் பல தொழிலாளர்கள் இருந்ததாகவும், சிலர் இன்னும் சிக்கியிருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் ஒருவர் மீட்கப்பட்டு மருதுவானமைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தீயின் தீவிரம் மீட்புப் பணிகளை சவாலானதாக மாற்றியது. நீண்ட போராட்டத்திற்கு பின் தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அடர்ந்த புகை மற்றும் அபாயகரமான பொருட்கள் ஆகியவை மீட்புப் பணிகளை மேலும் சிக்கலாக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வேதாரண்யம் பகுதியில் உப்பை மூலமாக கொண்டு தொழிற்சாலை தொடங்க வேண்டும்.
- கோடியக்கரையை பறவைகள் சரணாலயமாக அறிவித்து சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதியும் செய்து தர வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார்.
வேதாரண்யம் வட்ட செயலாளர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
மாநில தலைவர் அன்பரசு, மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல், மாநில செயலாளர் டானியல் ஜெயசிங், நாகை மாலி எம்.எல்.ஏ மற்றும் ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வேதாரண்யம் பகுதியில் உப்பை மூலமாக கொண்டு தொழிற்சாலை தொடங்க வேண்டும், நாகப்பட்டினம் - தஞ்சாவூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கோடியக்கரையை பறவைகள் சரணாலயமாக அறிவித்து சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதியும் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர்
அற்புதராஜ் ரூஸ்வெல்ட் நன்றி கூறினார்.
- கோலியஸ் மூலிகை கிழங்கில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
- சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஈஸ்வரமூர்த்தி பாளையத்தைச் சேர்ந்தவர் இ.கே.பெரியசாமி. இவர் நாமகிரிப்பேட்டை ஒன்றிய பா.ம.க. செயலாளராகவும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய குழு துணை தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவர் திம்ம நாயக்கன்பட்டி அருகில் கோலியஸ் மூலிகை கிழங்கில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு தயாரிக்கப்படும் கிழங்கு பவுடரை பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து வருகிறார். அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இ.கே.பெரியசாமியின் தொழிற்சாலையில் கர்நாடகா மற்றும் சேலத்தை சேர்ந்த வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.
- கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
- தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறிய தால் அவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு கோபாலபுரத்தில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் சாலையில் பார்வதி ஓடை அருகே எஸ்.ராமச்சந்திர புரத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவர் தென்னை நாரில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இந்த கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலையில் இருந்து தென்னை நார் கழிவுகளில் தீ பரவி அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளில் தீப்பற்றியது.
அந்த தொழிற்சாலையில் 10-கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். தீ பரவியதை உணர்ந்த தொழிலாளிகள் அலறி அடித்து ஓடி வந்து அந்த வழியாக சென்றவர்களிடம் கூறினர். இதுகுறித்து வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு தீயணைப்புதுறையினர் தொழிற்சாலையில் பற்றிய தீயை ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மேலும் இதுகுறித்து வத்திராயிருப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீப்பிடிக்க தொடங்கியதும் தொழிற்சாலையில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறிய தால் அவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
- ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் தனியார் குளுக்கோஸ் தொழிற்சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
- இந்த பலவிதமான நோய்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் போராட்டங்களை நடத்தியும் வந்தனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் தனியார் குளுக்கோஸ் தொழிற்சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையின் கழிவுநீர் வெளியேற்றத்தால் மங்களபுரம் உள்பட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டு இருப்பதாகவும், மேலும் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு மக்கள்
பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும் என அப்பகுதி
யைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் போராட்டங்களை நடத்தியும் வந்தனர்.
இந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோவில் நிலம், மற்றும் புறம்போக்கு நிலங்களையும், நீர்நிலை
களையும் ஆக்கிரமித்து இருப்ப
தாகவும் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் நாமக்கல் கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
இதையொட்டி நேற்று வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சேர்ந்து தனியார் தொழிற்சாலை ஆக்கிரமிப்பு செய்திருந்த அரசு புறம்போக்கு நிலத்தை
யும், கோவில் நிலத்தையும்,
கழிவு நீர் குழாய்களையும் கட்டப்பட்ட கட்டிடங்க ளையும் ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
- தொழிற்சாலையில் இருந்து இரவு நேரங்களில் நெகிழிக் கழிவுகளை எடுத்து வந்து அருகில் உள்ள ஏரிக்கு அருகில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனா்.
- கண் ஏரிச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
திருப்பூர்:
திருப்பூா், மண்ணரை பகுதியில் செயல்பட்டு வரும் நெகிழிக் கழிவுகளை எரிக்கும் தொழிற்சாலையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து திருப்பூா் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வாளரிடம் கவுண்டநாயக்கன்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
திருப்பூா் கவுண்டநாயக்கன்பாளையம் ரோஜா நகா், டி.மண்ணரை ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் மண்ணரையில் கழிவு பாலீத்தின் அறைக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து இரவு நேரங்களில் நெகிழிக் கழிவுகளை எடுத்து வந்து அருகில் உள்ள ஏரிக்கு அருகில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனா்.
இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு, கண் ஏரிச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. ஆகவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்தத் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
- வணிக கட்டடத்தில் இயங்கி வரும் குறு, சிறு தொழில்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
திருப்பூர் :
திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது. மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சுமதி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் ராமச்சந்திரன் முன்னிலையில் மின்வாரிய அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் குமார் நகர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் வணிக ரீதியான கட்டடங்களில் இயங்கும் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதில் உள்ள குளறு படியை களைய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுசெயலாளர் சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
குறு, சிறு பனியன் தொழில்கள், வணிக ரீதியான, கடைகளில் இயங்கி வருகின்றன. திருப்பூரில் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்பு வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. வணிக கட்டடத்தில் குறு, சிறு தொழிற்சாலைகள் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கின்றன.
மின்வரிய அலுவலர்கள், மனுக்கள் கிடப்பில் இருப்பதால் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டாமென தடுக்கின்றனர். மின் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதால் குறு, சிறு தொழில்கள் துவங்கும் தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளில் 2,500க்கும் அதிகமான புதிய வணிக நிறுவனங்கள், கடைகள், வணிக கட்டடத்தில் இயங்கி வரும் குறு, சிறு தொழில்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. தற்காலிக மின் இணைப்பில் தொழில் நடத்தி வருவதால் பல மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
கட்டிட உரிமையாளர்கள், மின் கட்டண செலவை சமாளிக்க முடியாமல் வங்கிக்கடன் தவணை செலுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர். வணிக ரீதியாக கட்டியுள்ள கட்டடங்களில் இயங்கி வரும் குறு, சிறு பனியன் தொழிற்சாலைகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது, மின்வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு, மின் இணைப்பு வழங்கி வருகிறோம். பதிவு மூப்பு அடிப்படையில் இணைப்பு வழங்கப்படும் என்றனர்.
- பனிக்கட்டி தொழிற்சாலை அமைக்க மானியம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
- ரூ.72 லட்சமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22 மற்றும் 2022-23 திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் பனிக்கட்டி தொழிற்சாலை அமைத்தல் திட்டத்தின் கீழ் 30 டன் (பொது-1, ஆதிதிரா விடர் பழங்குடியினர்-1, மகளிர்-1) மற்றும் 50 டன் (மகளிர்-1) கொள்ளளவில் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
30 டன் கொள்ளளவு கொண்ட ஒரு பனிக்கட்டி தொழிற்சாலை அமைப்ப தற்கான அலகு தொகை ரூ.120.00 லட்சம் என கணக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பி ரிவினருக்கு செலவினத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ.48 லட்சமும், மகளிருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.72 லட்சமும் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
50 டன் கொள்ளளவு கொண்ட ஒரு பனிக்கட்டி தொழிற்சாலை அமைப்ப தற்கான அலகு தொகை ரூ.150 லட்சம் என கணக்கீடு செய்யப்பட்டு, பொதுப் பிரிவினருக்கு செல வினத்தில் 40 சதவீதம் மானி யமாக ரூ.60 லட்சமும், மகளிருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.90 லட்சமும் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்ப டையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள மீனவ பயனாளிகள் சம்மந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ள கேட் டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலு வலகம், பட்டிணம்காத்தான் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஏர்பட்ஸ்களை தயாரிக்க ரூ.230 கோடியில் ஹேர்படம் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- தனியார் தொழிற்சாலை அமைவதன் மூலம் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரூ.1800 கோடியில் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. ஐபோன் உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்த தெலுங்கானா மாநில அரசு பர்சனான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.
மேலும் ஏர்பட்ஸ்களை தயாரிக்க ரூ.230 கோடியில் ஹேர்படம் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக ஏர்பட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. தனியார் தொழிற்சாலை அமைவதன் மூலம் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளதால் ஐபோன்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாகும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
- விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக அமையும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தை சேர்ந்த தமிழக வைகை பாசன சங்கத்தலைவர் பாக்யநாதன் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை விவசாயம் நிறைந்த பூமியாகும். எனது முன்னோர்கள் காலத்திலும் சரி, பல நூற்றாண்டு காலமாக மிளகாய் சாகுபடி செய்வதே இந்த பகுதியில் நிரந்தர விவசாயமாக இருந்து வருகின்றன.
அதிலும் முண்டு மிளகாய் என்பது இன்று பன்னாட்டு வர்த்தக அளவில் வரவேற்பு பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை தரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த முண்டு மிளகாய் பொருத்தவரை அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.
இதனால் பொதுமக்கள் அதிக வரவேற்பை பெற்று மிளகாய் விற்பனையில் முன்னனியில் இருந்து வருகிறது. இத்தகைய மிளகாய்க்கு புவிசார் குறியீடு வேண்டி மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்து 100 ஆண்டு கால நினைவை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த மாதம் மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விவசாயிகளிடம் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தற்பொழுது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமாக மிளகாய் விளைச்சல் வரக்கூடிய இந்த மாவட்டத்திற்கு மிளகாய் மண்டலம் அறிவித்ததன் மூலம் 2 சாதனையும் ஒரே நேரத்தில் கிடைத்த பெருமையால் விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிய பயனுள்ளதாக அமையும்.
இந்த திட்டத்தினால் மாவட்டத்திலேயே மிளகாய் பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாகும் நிலை மற்றும் மிளகாயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தல் என்ற நிலை உருவாகும். இது மட்டுமின்றி மாவட்டத்திற்கு பன்னாட்டு வணிகம் நிறுவனம் வர தொடங்குவார்கள்.
இதன் மூலம் விவசாயி களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் காணும். மேலும் விவசாயிகள் மிளகாய் சாகுபடிக்கு அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். இத்தகைய சிறப்பான திட்டத்தை தந்த முதலமைசருக்கு அனைத்து மிளகாய் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கம் சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






