என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "explosion"

    • பெண் பலியான நிலையில் உடன் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரியில் கூடப்பாக்கம் அருகே பைக்கில் எடுத்துச்சென்ற வெடிமருந்து எதிர்பாராத விதமாக வெடித்ததில் பெண் பலி, மேலும் ஒருவர் படுகாயம்

    பைக்கில் சென்ற இருவரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தோர் எனத் தகவல்; காட்டுப்பன்றி வேட்டைக்காக வெடிமருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.

    வெடி மருந்து வெடித்ததில் நரிக்குறவர் இன பெண் பலியான நிலையில் உடன் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெடிபொருட்கள் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வால் பாறைகள் உருண்டு விழுந்தன.
    • குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் கருங்கல் குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது.

    இன்று, பாறைகளைத் தகர்க்க வைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வால் பாறைகள் உருண்டு விழுந்தன.

    இந்த விபத்தின் போது குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

    மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.  

    • புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிலர் பட்டாசு வெடித்தனர்.
    • இதனால் ஏற்பட்ட தீப்பொறி பறந்து அந்த விடுதி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.

    பெர்ன்:

    சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட தீப்பொறி பறந்து அந்த விடுதி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தீ விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள பாரில் நிகழ்ந்தது.
    • தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நள்ளிரவு 1:30 மணியளவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது அந்த பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 100 கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சுவிஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என கூறப்படுகிறது.

    வெடிப்புக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் காரணமாக இருக்கலாம் எனச் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள பாரில் நிகழ்ந்தது.
    • தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நள்ளிரவு 1:30 மணியளவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது அந்த பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் சுவிஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என கூறப்படுகிறது.

    வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இசை நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பபடுகிறது.   

    • ரஷியாவில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை தீப்பிடித்து 3 பெண்கள் பலியாகினர்.
    • இதற்கு உக்ரைனின் டிரோன் தாக்குதலே காரணம் என ரஷியா குற்றம்சாட்டியது.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தெற்கு பிராந்தியமான பாஷ்கோர் டோஸ்தானில் வெடிமருந்து தொழிற்சாலை செயல்படுகிறது.

    உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்கள், வெடிமருந்துகள் அங்கு பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர்.

    இதனை தொடர்ந்து ஏற்பட்ட தீயால் அந்தப் பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக மாறியது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    அதற்குள் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 பெண்கள் உடல் கருகி பலியாகினர். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தாக்குதலுக்கு உக்ரைனின் டிரோன் தாக்குதலே காரணம் என ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

    போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த ஆலையில் இராணுவம், விண்வெளி மற்றும் வணிகத் துறைகளுக்குத் தேவையான வெய்டபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது
    • வெடிப்பின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடுகள் கூட கடுமையாக குலுங்கின.

    அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள வெடிபொருள் உற்பத்தி ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

    மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் இராணுவம், விண்வெளி மற்றும் வணிகத் துறைகளுக்குத் தேவையான வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க நேரப்படி காலை 7.45 மணிக்கு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    வெடிப்பின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடுகள் கூட கடுமையாக குலுங்கின. உள்ளூர் மக்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் பயந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 18 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.   

    • தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர்.
    • வெடிவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    மர்மப் பொருள் வெடித்துச் சிதறியதில் அந்த வீடு தரைமட்டமானது. இதில் அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அப்போது 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

    சிலர் காயத்துடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடந்தது.

    வீட்டில் என்ன பொருள் வெடித்தது என்பது உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹிஸ்புல்லா நிலைகளை லெபனான் கைப்பற்றி வருகிறது.
    • ஆயுதக் கிடங்கை அப்புறப்படுத்தும்போது திடீரென விபத்து ஏற்பட்டது.

    லெபனானில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிப்பொருட்களை அகற்றும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதில் 6 ராணுவ நிபுணர்கள் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 14 மாதங்களாக இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் மோதல் நடைபெற்று வந்தது. கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக லெபனான் ராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப்படை ஹிஸ்புல்லாவின் நிலைகளை கைப்பற்றி வருகிறது.

    குறிப்பாக லிடானி ஆற்றுப் பகுதியின் தெற்குப் பகுதியில், ஹிஸ்புல்லா திரும்பிய பகுதியில் பல ஆயுதக் கிடங்குகள் உள்ளன. ஆயுதக் கிடங்கில் உள்ள வெடிப்பொருட்களை லெபனான் ராணுவம் அப்புறப்படுத்தி வருகிறது. அவ்வாறு தைரே மாகாணத்தில் உள்ள ஜிப்கின் கிராமத்தில் இன்று ஆயுதக் கிடக்கில் உள்ள ஆயுதங்களை அப்புறப்படுத்தியபோது, திடீரென வெடிப்பொருட்கள் வெடித்து சிதறின. இதில் 6 ராணுவ நிபுணர்கள் உயிரிழந்தனர். பல் காயம் அடைந்தனர்.

    நேற்று முன்தினம் அமெரிக்காவின் ஆதரவு திட்டமான ஹிஸ்புல்லாவை ஆயுதமில்லாமல் ஆக்கும் திட்டம் மற்றும் இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகியவை தொடர்பாக லெபனான் அமைச்சரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆதரவாக வாக்களிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வருட இறுதிக்குள் சிறிய நாடானா லெபனானில் நாட்டில், நாட்டின் அமைப்புகள் மட்டுமே ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான திட்டத்திற்கு தயாராகும்படி ராணுவத்திடம் கேடடுக்கொண்டுள்ளது.

    இதன்படி ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதம் இல்லாத நிராயுதபாணியாகும். அதேவேளையில் எல்லையில் உள்ள ஐந்து மலைப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு முன்பு, நிராயுதபாணியாகமாட்டோம் என ஹிஸ்புல்லா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
    • பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (01.07.2025) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், மீனம்பட்டியைச் சேர்ந்த திரு.மகாலிங்கம் (வயது 55) த/பெ.ராமசாமி, அனுப்பன்குளத்தைச் சேர்ந்த திரு.செல்லப்பாண்டியன் த/பெ.சின்னையா, மத்தியசேனையைச் சேர்ந்த திருமதி.லட்சுமி க/பெ.கருப்பசாமி, விருதுநகர் வட்டம், ஒ.கோவில்பட்டியைச் சேர்ந்த திரு.ராமமூர்த்தி (வயது 38) த/பெ.ராம்ராஜ், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த திரு.ராமஜெயம் (வயது 27) த/பெ.கந்தசாமி மற்றும் சூலக்கரையை சேர்ந்த திரு. வைரமணி (வயது 32) த/பெ. காந்தி ஆகிய ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் திரு.லிங்குசாமி (வயது 45), திரு.மணிகண்டன் (வயது 40), திரு.கருப்பசாமி (வயது 27), திருமதி.முருகலட்சுமி (வயது 48) மற்றும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு.அழகுராஜா (வயது 28) ஆகிய ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    • சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
    • பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

    தெலங்கானாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று சங்காரெட்டி மாவட்டம் பசமைலாரத்தில் சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுது.

    அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    தற்போது 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    • பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டது.
    • 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரையில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

    பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் வெடிவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×