என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிமருந்து கிடங்கு"

    • ரஷியாவில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை தீப்பிடித்து 3 பெண்கள் பலியாகினர்.
    • இதற்கு உக்ரைனின் டிரோன் தாக்குதலே காரணம் என ரஷியா குற்றம்சாட்டியது.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தெற்கு பிராந்தியமான பாஷ்கோர் டோஸ்தானில் வெடிமருந்து தொழிற்சாலை செயல்படுகிறது.

    உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்கள், வெடிமருந்துகள் அங்கு பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர்.

    இதனை தொடர்ந்து ஏற்பட்ட தீயால் அந்தப் பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக மாறியது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    அதற்குள் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 பெண்கள் உடல் கருகி பலியாகினர். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தாக்குதலுக்கு உக்ரைனின் டிரோன் தாக்குதலே காரணம் என ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

    போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    மியான்மரில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்துவிட்டனர். மேலும் 48 பேர் படுகாயம் அடைந்தனர். #Myanmar #WarehouseExplosion
    யாங்கோன்:

    மியான்மரின் கிழக்கு பகுதியில் சீனாவின் எல்லையையொட்டி உள்ள ஷான் மாகாணம், மாங்மாவோ நகரில் வெடிமருந்து அடைத்து வைக்கும் கிடங்கு உள்ளது.

    நேற்று முன்தினம் மாலை வெடிமருந்தை எடுத்துச் செல்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் கிடங்குக்கு வந்தனர். அவர்கள் வெடிமருந்தை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அங்கு வெடி விபத்து நேரிட்டது.

    அதனை தொடர்ந்து கிடங்குக்குள் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. கிடங்குக்குள் இருந்த அனைவரும் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் 16 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்துவிட்டனர். மேலும் 48 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  #Myanmar #WarehouseExplosion 
    ×