என் மலர்
உலகம்

அமெரிக்க ராணுவத்துக்கு வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர விபத்து - 18 பேர் பலியானதாக அச்சம்
- இந்த ஆலையில் இராணுவம், விண்வெளி மற்றும் வணிகத் துறைகளுக்குத் தேவையான வெய்டபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது
- வெடிப்பின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடுகள் கூட கடுமையாக குலுங்கின.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள வெடிபொருள் உற்பத்தி ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் இராணுவம், விண்வெளி மற்றும் வணிகத் துறைகளுக்குத் தேவையான வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க நேரப்படி காலை 7.45 மணிக்கு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிப்பின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடுகள் கூட கடுமையாக குலுங்கின. உள்ளூர் மக்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் பயந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 18 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.






