என் மலர்
நீங்கள் தேடியது "factory blast"
- இந்த ஆலையில் இராணுவம், விண்வெளி மற்றும் வணிகத் துறைகளுக்குத் தேவையான வெய்டபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது
- வெடிப்பின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடுகள் கூட கடுமையாக குலுங்கின.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள வெடிபொருள் உற்பத்தி ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் இராணுவம், விண்வெளி மற்றும் வணிகத் துறைகளுக்குத் தேவையான வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க நேரப்படி காலை 7.45 மணிக்கு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிப்பின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடுகள் கூட கடுமையாக குலுங்கின. உள்ளூர் மக்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் பயந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 18 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.
- விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதி.
- தீ விபத்தால், அருகே உள்ள 60 வீடுகளுக்கும் தீ பரவியது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ௧௦௦-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தால், அருகே உள்ள 60 வீடுகளுக்கும் தீ பரவியது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- தீ மளமளவென பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை அடுத்துள்ள சங்காரெட்டி மாவட்டம், சந்தாபூர் எனும் ஊரில் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் திடீரென ரசாயன டேங்கர் வெடித்து தீப்பற்றியது.
தீ மளமளவென பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர். இந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் சங்காரெட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர்.
- வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி இரங்கல் தெரிவித்தார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் பந்தரா மாவட்டத்தில் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புக்குழுவினர் தொழிற்சாலையில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, படுகாயமடைந்த 7 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
வெடிவிபத்தின் சத்தம் 5 கிலோமீட்டர் தொலைவுவரை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அவர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதியுதவி அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.






