என் மலர்
நீங்கள் தேடியது "ரசாயன தொழிற்சாலை"
- தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் இந்தியா-வைச் சேர்ந்த 'Farmlane பிரைவேட் லிமிடெட்' என்ற ரசாயன நிறுவனமும் அடங்கும்.
- அமெரிக்க கருவூலத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தயாரிப்பு திட்டங்களுக்கு ஆதரவளித்ததாகக் கூறி, இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் இந்தியா-வைச் சேர்ந்த 'Farmlane பிரைவேட் லிமிடெட்' என்ற ரசாயன நிறுவனமும் அடங்கும்.
இந்த நிறுவனம், ஆகிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட மார்கோ கிளிங்கே நிறுவனத்துடன் இணைந்து, ஏவுகணை மோட்டார்களில் பயன்படுத்தப்படும் சோடியம் குளோரேட் மற்றும் சோடியம் பெர்க்ளோரேட் போன்ற ரசாயனப் பொருட்களை ஈரான் பெற உதவியதாக அமெரிக்க கருவூலத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஜூலை மாதம், ஈரான் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஆறு இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- தீ மளமளவென பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை அடுத்துள்ள சங்காரெட்டி மாவட்டம், சந்தாபூர் எனும் ஊரில் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் திடீரென ரசாயன டேங்கர் வெடித்து தீப்பற்றியது.
தீ மளமளவென பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர். இந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் சங்காரெட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






