என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலங்கானா"

    • இடைத்தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை கவரும் காங்கிரசின் வியூகம் என்று கூறப்படுகிறது.
    • பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் அசாருதீன் தோல்வியடைந்தார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன், தெலங்கானா மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

    தெலங்கானா அமைச்சராக பதவியேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் அசாருதீன் சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

    2023 சட்டமன்றத் தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன், பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் தோல்வியடைந்தார்.

    பிஆர்எஸ் எம்எல்ஏ மாகாந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் காலமானதால் அந்தத் தொகுதியில் நவம்பர் 11 அன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

    இந்தத் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் அசாருதீனை அமைச்சராக்குவது, இடைத்தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை கவரும் காங்கிரசின் வியூகம் என்று கூறப்படுகிறது.

    தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏவோ அல்லது அமைச்சரோ இல்லை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • போற்றோரை புறக்கணிக்கும் ஊழியர்கள் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் பிடித்தம்.
    • அது பெற்றோர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    குரூப்-II தேர்வில் வெற்றி பெற்று தேர்வானவர்களுக்கு, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நியமனக் கடிதம் வழங்கினார்.

    பின்னர் அவர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-

    பிரச்சனைகளுடன் வரும் மக்களை, கனிவுடன் அணுக வேண்டும். நாங்கள் புதிய சட்டம் கொண்டு வர இருக்கிறோம். அரசு பணியார்கள் அவர்களுடைய பெற்றோரை புறக்கணித்தால், அவர்களுடைய சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். இது பெற்றோர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நீங்கள்தான் சட்டத்திற்கான வரைவை உருவாக்குவீர்கள். நீங்கள் மாதச் சம்பளம் பெறும்போது, உங்களுடைய பெற்றோர்களும், அதில் இருந்து மாதச் சம்பளம் பெறுவார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், தலைமைச் செயலாளரிடம் இது தொடர்பாக சட்ட வரைவு உருவாக்க கமிட்டி உருவாக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.
    • காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.

    தெலங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் இன்று பந்த் தொடங்கியது. இந்த பந்த் நடவடிக்கைக்கு ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பந்த் நடவடிக்கையால் தெலுங்கானாவின் பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.

    உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்றுவதாக ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.

    தெலுங்கானா அரசின் அரசாணைக்கு அக்டோபர் 9ம் தேதி தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

    • 10 ஆம் வகுப்பு மாணவரான விஜய் கார்த்திக், தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
    • விஜய் கார்த்திக் ஜாலியாக பேட்மிண்டன் விளையாடியுள்ளார்.

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உறவினர் வீட்டில் பேட்மிண்டன் விளையாடி கொண்டிருக்கும் போது, டிரான்ஸ்ஃபார்மரின் மீது விழுந்த ஷட்டில் கார்க்கை எடுக்க முயற்சித்த போது 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவரான விஜய் கார்த்திக், தனது பெற்றோர் உடன் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 

    • சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
    • பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

    தெலங்கானாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று சங்காரெட்டி மாவட்டம் பசமைலாரத்தில் சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுது.

    அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    தற்போது 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    • சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
    • பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

    தெலங்கானாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சங்காரெட்டி மாவட்டம் பசமைலாரத்தில் சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    • உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தில் கார் ஒட்டி சென்றார்.
    • ரெயில்வே அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் அருகே ரெயில் தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்ற இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

    உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தில் கார் ஒட்டியதை கண்ட ரெயில்வே அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர்.

    அதன் பின் ரயில்வே ஊழியர்கள், பொது மக்களுடன் இணைந்து காரை நிறுத்தி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.

    தண்டவாளத்தில் காட்டிய பெண் குடிபோதையில் உள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே அவ்வழியே வந்து கொண்டிருந்த பெங்களூரில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட்டை எச்சரிக்கை செய்து ரெயிலை ரெயில்வே அதிகாரிகள் நடு வழியிலேயே நிறுத்தினர். மேலும் இந்த வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த 15 ரெயில்கள் திருப்பி விடப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஐந்து சடலங்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
    • ஒரு வாரத்திற்கு முன் மெடிகட்டா தடுப்பணையிலும் இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்தனர்.

    தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் புனித நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    சமீபத்திய மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருந்த நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த அந்த இளைஞர்கள் ஆழம் தெரியாமல் ஆற்றுக்குள் சென்றதே விபத்துக்குக் காரணம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஐந்து சடலங்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    கோதாவரி படித்துறையில் தொடர்ச்சியான இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த ஜனவரியில் கொண்டபோச்சம்மாவிலும், ஒரு வாரத்திற்கு முன் மெடிகட்டா தடுப்பணையிலும் இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலங்கானாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயண சேவை வழங்கப்படுகிறது.

    இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் மஹ்பூப்நகரை சேர்ந்த தேவா (வயது 45) குடிபோதையில் தனது ஆட்டோவுடன் முதல் மந்திரி முகாம் அலுவலகமான ஐதராபாத் பிரஜா பவனுக்கு வந்தார்.


    பின்னர் பெண்களுக்கான இலவச பஸ் பயணத்தால் எங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    இதனைத் தொடர்ந்து ஆட்டோவுக்கு திடீரென தீ வைத்தார். இதனை பார்த்த பிரஜா பவன் ஊழியர்கள் மற்றும் போலீசார், ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    இருப்பினும் தீ பரவியதில் ஆட்டோ முழுவதும் எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    • தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் விரட்டி விரட்டி குத்திக் கொன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
    • பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த சையத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் விரட்டி விரட்டி குத்திக் கொன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பாலாபபூர் பகுதியில் உள்ள ராயல் காலனியில் நேற்று [ஜூன் 13] இரவு நடந்த இந்த கொடூர சம்பவத்தில் சையத் சமீர் என்ற அந்த 28 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சம்பாபேட் பகுதியைச் சேர்ந்த அலங்காரத் தொழிலாளர் சையத் நேற்று இரவு வேலை முடித்து வீடு திரும்பும்போது மர்ம நபர்கள் அவரைகொலை வெறியுடன் துரத்தியுள்ளனர். சுற்றிலும் அடுக்குமாடி கட்டிடங்கள் நிறைந்த ராயல் காலனி பகுதியில் சையதை துரத்திப் பிடித்த அவர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

    அவர்களில் ஒருவன் தனது கையில் வைத்திருந்த கத்தியால் சையதை குத்தினான். சையத் சரிந்து கீழே விழுந்த நிலையிலும் அவரை கண்மூடிதனமாக அவர்கள் உதைத்ததை அப்பகுதியில் இருந்தவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

    சையத்தை அவர்கள் தாக்கியபோது அருகே பலர் நடந்து சென்று கொண்டிருந்தும் யாரும் உதவிக்கு வரவில்லை. பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த சையத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் மர்ம நபர்களை வீடியோ காட்சிகளின் உதவியுடன் தீவிரமாக தேடிவருகின்றனர்.  

    • மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
    • இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.

    நள்ளிரவில் பிரதான நகரங்களில் தெருக்களை ஆக்கிரமித்த ரசிகர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் இந்தியாவின் வெற்றியை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. நிலையத்தில் உள்ளவர்களுக்கு இனிப்புகள் பரிமாறப்பட்டன.

    இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா தெருவில் இறங்கி தேசியக்கொடியை அசைத்து ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் உத்தரப் பிரதேசம் கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களிலும் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளன. 

    • தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பெரிய விவசாய நிலங்களில் 50% மரங்கள் காணாமல் போயுள்ளது.
    • மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் பல் மரங்கள் காணாமல் போயுள்ளது.

    2019 முதல் 2022 வரையிலான காலகட்டங்களில் மகாராஷ்டிரா, தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்த சுமார் 60 லட்சம் மரங்கள் காணாமல் போயிருப்பதாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது

    தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பெரிய விவசாய நிலங்களில் 50% மரங்கள் காணாமல் போயுள்ளதாகவும், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 22 மரங்கள் வரை காணாமல் போயுள்ளதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும், மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் பல் மரங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் வனத்துறை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகங்கள் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஜூலை 31-ம் தேதி ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பான மற்றொரு வழக்குடன் இந்த விஷயமும் விசாரிக்கப்படவுள்ளது.

    ×