search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லறை"

    • மார்த்தாண்டம் நல்லூர் காரவிளை பகுதியில் ஒரு பிரிவினரின் கல்லறை இருந்து வருகிறது
    • இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது

    நாகர்கோவில் : மார்த்தாண்டம் நல்லூர் காரவிளை பகுதியில் ஒரு பிரிவினரின் கல்லறை இருந்து வருகிறது. அந்த கல்லறைக்கு வழி சம்பந்தமாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தக்கலை சப்-கலெக்டருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் இரு பிரிவினரையும், தக்கலை சப்-கலெக்டர் கவுசிக் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விசாரணைக்கு ஒரு தரப்பினார் ஆஜ ராகி உள்ளனர். மறு தரப்பினர் விசாரணைக்கு ஆஜரா காததால், ஆஜராகா தவர்களை பிடித்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்கு கொண்டு செல்லும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில், மார்த்தாண்டம் போலீசார் ஒரு தரப்பை சேர்ந்த தங்கப்பன் என்பவரை பிடித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து தங்கப்பனின் ஆதரவாக ஒரு தரப்பினர், போலீஸ் நிலை யத்தில் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதனால் போலீஸ் நிலையத்திற்கு முன்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட னர். 

    • அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
    • நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார்.

    கோவை:

    கணவன்-மனைவி அன்பு என்பது ஆத்மார்த்தமானது. அன்பான மனைவிக்கு கணவனிடம் உள்ள அன்பு போற்றத்தக்கது. ஏதோ ஒரு காரணத்தால் தங்கள் துணை இறந்த பிறகு அவர்களை மறக்க முடியாமல் தவிக்கும் கணவன், மனைவியை இன்றும் பார்க்கிறோம்.

    அதேபோல் இறந்த தன் மனைவியை மறக்க முடியாமல் அவரது கல்லறைக்கு தினமும் சென்று வழிபட்டு வருகிறார் கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி. கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவரது மனைவி சரோஜினி. இவர் கணவர் சுப்பிரமணியன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். இதனால் இவர்களது இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

    இந்நிலையில் சரோஜினி உடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார். தினமும் அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் முதல் அவரது கல்லறைக்கு சுப்பிரமணியன் செல்லத் தொடங்கினார். தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக காலையில் சரோஜினியின் கல்லறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டார். அங்கு கல்லறை முன்பு விளக்கேற்றி வழிபட்டு விட்டு வேலைக்கு செல்வார்.

    பின்னர் மாலையிலும் கல்லறைக்கு சென்று வணங்குவார். அப்போது அன்று நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார். சரோஜினி இறந்தாலும் தன்னுடனேயே வாழ்வதாக எண்ணி இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

    தனது மனைவி மீது சுப்பிரமணியன் கொண்டுள்ள அன்பை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இதுபற்றி சுப்பிரமணியன் கூறுகையில் என் மனைவி சரோஜினி, அதிக பாசத்துடன் என்னை கவனித்து வருகிறார். அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. ஷாஜகான் தனது மனைவிக்காக தாஜ்மகால் கட்டியது போல் எனது மனைவிக்காக நானும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்பது லட்சியமாக உள்ளது. விரைவில் அதனை செய்து முடிப்பேன் என்றார்.

    • தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து, கடந்த 2016-ம் ஆண்டு தனக்கு சொந்தமான இடத்தில் கல்லறை கட்டி பால் காய்ச்சியுள்ளார் என்ற தகவல் இப்போது கிடைத்துள்ளது.
    • கல்லறை அருகிலேயே 2 அறைகள் கட்டி ரோசி வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் கொல்லன்விளை பகுதியை சேர்ந்தவர் ரோசி(வயது 70). திருமணமாகாத இவர் பல்லுகுழி பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    100 நாள் வேலை திட்டத்தில் பணிக்குச் சென்று வந்த இவரை, உறவினர் விஜயன் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். இந்த நிலையில் ரோசி வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.

    இதுகுறித்து அவரது வீட்டருகே வசிப்பவர்கள் விஜயனுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து விஜயன் அங்கு சென்று பார்த்த போது ரோசி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

    கடந்த 12-ந் தேதி தனது மனைவியோடு நலம் விசாரிக்க வந்தபோது ரோசி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறியதாகவும் விஜயன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் இறந்து போன ரோசி, தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து, கடந்த 2016-ம் ஆண்டு தனக்கு சொந்தமான இடத்தில் கல்லறை கட்டி பால் காய்ச்சியுள்ளார் என்ற தகவல் இப்போது கிடைத்துள்ளது. கல்லறை அருகிலேயே 2 அறைகள் கட்டி ரோசி வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×