search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்லாந்து"

    • Task, Incentive Target, Apprisal உள்ளிட்டவை கார்ப்பரேட் ஊழியர்களைப் பிணைக்கும் சங்கிலிகளாக இறுகி வருகிறது.
    • பெண்ணின் உயிரிழப்புக்கு நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

    உலகம் முழுவதிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் வலுப்பெற்றுள்ள நிலையில் ஊழியர்கள் நவீன அடிமைத்தனத்தில் உழன்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பணிச்சுமை மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது. Task, Incentive Target, Apprisal உள்ளிட்டவை கார்ப்பரேட் ஊழியர்களைப் பிணைக்கும் சங்கிலிகளாக இறுகி வருகிறது. கடந்த வாரம் புனேவின் எர்னஸ்ட் எங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது பணிச்சுமை மற்றும் பணியிட அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

     

    மேலும் உ.பியில் தனியார் வங்கியில் பணியாற்றிவந்த பெண் ஊழியர் வேலையில் இருக்கும்போதே சேரில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் தாய்லாந்தைச் சேர்ந்த 30 வயது பெண் Sick லீவு கிடைக்காமல் மேனேஜர் முன்னையே நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் சமுத் பிராகன் [Samut Prakan] மாகாணத்தில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்புடைய பிளான்டில் வேலை செய்தி வந்த மே [May] என்ற 30 வயது பெண் ஊழியர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளார்.

    கடந்த செப்டம்பர் 5 முதல் அவரது உடல்நிலை மோசமான நிலையில் மெடிக்கல் சர்டிபிகேட்டை பணிபுரியும் நிறுவனத்தில் சமர்பித்து செப்டம்பர் 5 முதல் 8 ஆம் தேதி வரை லீவ் எடுத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். டிஸ்சார்ஜ் ஆன பிறகு செப்டம்பர் 12 லீவு வரை ஓய்வுக்காக மேலும் 2 நாட்கள் லீவு வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அதிக நாட்கள் லீவு எடுத்து விட்டதால் இனி லீவ் தர முடியாது என்றும் கூடுதலாக செப்டம்பர் 9 முதல் 12 வரை எடுத்த லீவுக்கு மெடிக்கல் சர்டிபிகேட் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வேலை செய்யும்படியும் மேனேஜர் உத்தரவிட்டுள்ளார்.

    வேலையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மேலும் ஒரு மெடிக்கல் சர்டிபிகேட்டுடன் வந்து மேனேஜரிடம் கொடுத்துவிட்டு வேலை செய்யத் தொடங்கிய 20 நிமிடத்திற்குள் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். தொடந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த நாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சக ஊழியர்கள் மூலம் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் மே வேலை பார்த்து வந்த  நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

    • ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று.
    • ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி அளித்த 3-வது நாடு தாய்லாந்து.

    பாங்காங்:

    தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.

    தென்கிழக்கு ஆசியா நாடுகளின் ஒன்றான தாய்லாந்தில் மன்னராட்சி நடக்கிறது. கடற்கரைகளை அதிகம் கொண்ட இந்த நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத்துறையின் வருமானத்தை நம்பி உள்ளது.

    மேலும் வெளிநாட்டவர்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில் பல்வேறு சலுகைகளை தாய்லாந்து வழங்குகிறது. இதனால் கேளிக்கைகளின் தேசமாக விளங்கும் தாய்லாந்துக்கு ஏராளமான வெளிநாட்டவர்கள் சுற்றுலாவுக்காக செல்கிறார்கள்.

    ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் தாய்லாந்து விளங்குகிறது. இருப்பினும் தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வமாக அனுமதியளிக்கப்படாமல் இருந்தது. இதனால் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக கடுமையான எதிர்ப்பை எதிர் கொண்டனர்.

    மேலும் அவர்கள், தங்களுடைய திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என கருதப்பட்டது.

    இதனையடுத்து தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஆதரவுடன் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது.


    பின்னர் அந்த நாட்டின் மன்னரின் ஒப்புதலுக்காக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமண சட்டமசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண சட்ட மசோதாவுக்கு அந்த நாட்டின் மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் வருகிற ஜனவரி மாதத்தில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

    தைவான் மற்றும் நேபாளத்திற்கு அடுத்தபடியாக ஆசியாவில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கும் 3-வது நாடு என்ற சிறப்பை தாய்லாந்து பெறுகிறது.

    • ஊழியர்களுக்கு இந்த சலுகை இந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த டிண்டர் விடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தாய்லாந்தைச் சேர்ந்த ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம் ஒன்று தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Tinder Leave) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கு இந்த டிண்டர் விடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கூறியதை அடுத்து அந்நிறுவனம் இந்த முடிவை அறிவித்துள்ளது.

    காதல் செய்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும், இது உற்பத்தியை அதிகரிக்க உதவும் என அந்நிறுவனம் நம்புகிறது. 

    • அரசியல்வாதி தாக்கியது தொடர்பாக பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார்.
    • பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்.

    தாய்லாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், பலத் பிரசாரத் என்ற கட்சியை அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

    மூத்த அரசியல் தலைவரான வாங்சுவானிடம் ஒரு பெண் பத்திரிகையாளர், அந்நாட்டின் புதிய பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்வியினால் கோபமடைந்த அவர், பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்துள்ளார். பின்னர் கோபத்துடன் அவர் கிளம்பி சென்றார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

    பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் மிகவும் ரசிக்க செய்யும்.
    • தாய்லாந்தில் நடைபெற்ற தவழும் குழந்தைகளுக்கான போட்டி.

    சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் பார்ப்பவர்களை மிகவும் ரசிக்க செய்யும். அந்த வகையில் தாய்லாந்தில் நடைபெற்ற தவழும் குழந்தைகளுக்கான போட்டி குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பயனர்களை ரசிக்க செய்துள்ளது.

    இந்த போட்டிகளை பொறுத்தவரை குழந்தைகள் ஒருபுறம் இருந்து மறுபுறம் இருக்கும் வெள்ளை கோடான இலக்கை வந்தடைய வேண்டும்.

    தவழும் குழந்தைகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் குழந்தைகள் இலக்கை அடைய செய்வதற்கு பெற்றோர்கள் பெரும் பாடுபடுவார்கள்.

    அதே போல போட்டியின் போது மழலை குழந்தைகளின் சேட்டைகளும் பார்வையாளர்களை பெரிதும் கவரும். தற்போது வைரலாகி வரும் வீடியோவில், தவழும் குழந்தைகள் இலக்கை அடைவதற்காக பெற்றோர்கள் ஊக்குவிக்கும் காட்சி உள்ளது.

    அதில் ஒரு குழந்தை போட்டி நடைபெறும் இடத்திலேயே படுத்து தூங்குவது போன்றும், அந்த குழந்தையை விழிக்கச் செய்வதற்காக அவரது பெற்றோர் பாடுபடுவதும் போன்ற காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • முதலில் ஆடிய தாய்லாந்து 93 ரன்களில் சுருண்டது.
    • அடுத்து ஆடிய இலங்கை 94 ரன்களை எடுத்து வென்றது.

    தம்புல்லா:

    மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பெற்ற இலங்கை, தாய்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய தாய்லாந்து இலங்கை அணியின் பந்துவீச்சில் சிக்கியது. அந்த அணியின் கன்னாபட் கொஞ்சாரோஎன்கை

    ஓரளவு தாக்குப் பிடித்து 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    இறுதியில், தாய்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 93 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இதையடுத்து, 94 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

    இதனால் இலங்கை அணி 11.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 94 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் அரையிறுதிக்கும் முன்னேறியது. கேப்டன் சமாரி அடப்பட்டு 49 ரன்னும், விஷ்மி குணரத்னே 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    தாய்லாந்து அணி தோற்று தொடரில் இருந்து வெளியேறியதால் வங்காளதேசம் அணியும் அரையிறுதிக்கு முன்னேறியது.

    • தாய்லாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
    • சிறப்பாக பந்துவீசிய ரபீயா கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் தாய்லாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

    அதன்படி களமிறங்கிய தாய்லாந்து அணி வங்காளதேசம் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தாய்லாந்து அணியின் நட்டயா பூச்சாத்தம் (40 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதன் காரணமாக தாய்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களையேசேர்த்தது. வங்காளதேசம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரபீயா கான் 4 விக்கெட்டுகளையும் சபிகுன் நஹர் ஜெஸ்மின் மற்றும் ரிது மோனி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    97 எனும் எளிய இலக்கை துரத்திய வங்காளதேசம் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை குவித்தது. இதன் மூலம் வங்காளதேசம் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியின் திலாரா அக்தர் 17 ரன்களையும், முர்சிதா கதுன் 50 ரன்களையும், இஷாமா தன்ஜிம் 16 ரன்களையும் சேர்த்தனர்.

    • முதலில் ஆடிய தாய்லாந்து 133 ரன் எடுத்தது.
    • அடுத்து ஆடிய மலேசியா 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    தம்புல்லா:

    9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் பி பிரிவு ஆட்டத்தில் தாய்லாந்து, மலேசியா அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தாய்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 133 ரன்கள்எடுத்துள்ளது. அதிகபட்சமாக நன்னபட் கொஞ்சரோஎங்கை 40 ரன்கள் அடித்தார்.

    மலேசியா சார்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மலேசியா களமிறங்கியது. வான் ஜூலியா அரை சதம் கடந்து 52 ரன்கள் எடுத்தார். வின்பயர்ட் துரைசிங்கம் 22 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

    இறுதியில், மலேசியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 111 ரன்கள்மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தாய்லாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

    • டுன் ஹவாங், குன்ஹசீன் நகரங்களில் உள்ள விநாயக சிலைகள் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
    • நான்முக விநாயகரும் அந்நாட்டில் இருக்கிறார்.

    ஜப்பான்

    சீனா வழியே தான் விநாயகர் வழிபாடு ஜப்பானுக்கு சென்றுள்ளதாம்.

    கான்கிட்டன் ஹாயக்ஷா என்று விநாயகருக்குப் ஜப்பானில் பெயர்கள் உள்ளன.

    டுன் ஹவாங், குன்ஹசீன் நகரங்களில் உள்ள விநாயக சிலைகள் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

    தாய்லாந்து

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள இந்துக்கோவிலில் கையில் எழுத்தாணியுடன் ஐந்தாம் நூற்றாண்டு விநாயகர் காணப்படுகிறார்.

    நான்முக விநாயகரும் அந்நாட்டில் இருக்கிறார்.

    • உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.

    தாய்லாந்தின் மத்திய பாங்காக்கில் உள்ள பாதும் வான் மாவட்டத்தில் நட்சத்திர ஓட்டலில் வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட சுற்றுலா பயணிகள் 6 பேர் ஒரே அறையில் பிணமாக கிடந்தனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு அறைகளை பதிவு செய்திருந்தனர்.

    ஆனால் அவர்களின் உடல்கள் அனைத்தும் ஒரே அறையில் கண்டுபிடிக்கப்பட்டன.


    உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    அவர்கள் விஷம் குடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பலியானவர்கள் வியட்நாம் வம்சாவளியைச் சேர்ந்தவர். இதில் 2 பேர் அமெரிக்க குடியுரிமையும் பெற்றவர்கள்.

    • திருமணத்தின் பின் முதல் முறையாக இருவரும் தங்கள் உறவு குறித்தும் காதல் குறித்தும் செய்தியாளர்களிடம் மனம் திறந்துள்ளனர்.
    • 'நிக்கோலய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்பதுதான் இனி என் பெயர். சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் பெருமை இனி எனக்கும் சொந்தம்'

    தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்துக்குமாருக்கும் முமபை கேலரிஸ்ட் நிக்கோலய் -கும் கடந்த ஜூலை 10 ஆம் தேதி அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் திருமணத்தின் பின் முதல் முறையாக இருவரும் தங்கள் உறவு குறித்தும் காதல் குறித்தும் செய்தியாளர்களிடம் மனம் திறந்துள்ளனர். திருமணத்துக்கு பின் நாடு திரும்பிய நிலையில் இன்று சென்னையில் வைத்து தந்தை சரத்குமார் மற்றும் கணவன் நிக்கோலய் உடன் வரலட்சுமி சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

     

    நிக்கோலய் பேசியதாவது, "எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும். மும்பை இனிமேல் என் வீடு கிடையாது. சென்னைதான் என் வீடு. என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். என் பெயர் நிக்கோலய் சச்தேவ். நான் வரலட்சுமி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன்.

    திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என நிச்சயம் மாற்ற மாட்டார். அவரது பெயர் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே நானும் விரும்புகிறேன். ஆனால், நான் அவரது பெயரை எடுத்துக் கொள்கிறேன்.

    நிக்கோலய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்பதுதான் இனி என் பெயர். சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் பெருமை இனி எனக்கும் சொந்தம். வரலட்சுமி என்னைத் திருமணம் செய்திருந்தாலும் நான் அவருடைய முதல் காதல் இல்லை. அவருடைய முதல் காதல் எப்போதும் சினிமாவில் நடிப்பதுதான். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார். உங்கள் அன்பும், ஆதரவும் நிச்சயம் அவருக்கு வேண்டும்" என்றார்.

    நடிகை வரலட்சுமி சரத்குமார், "நீங்கள் எல்லோரும் இங்கு வந்ததற்கு நன்றி. நிக்கோலய் சொன்னதுபோல என்னுடைய காதல் அவர். ஆனால், என்னுடைய உயிர் சினிமாதான். அதனால், திருமணத்திற்குப் பிறகும் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன். வந்து வாழ்த்திய எல்லோருக்கும் நன்றி" என்றார்.

    நடிகர் சரத்குமார், "வரலட்சுமிதான் நிக்கோலயை எங்களுக்கு அறிமுகப்படுத்தினர். நிக்கோலயுடன் எங்கள் குடும்பத்திற்கு கண்டதும் காதல் வந்துவிட்டது. ரொம்ப எனர்ஜிட்டிக்கான மனிதர் அவர். அவர் கொடுத்திருக்கும் சந்தோஷம் நிச்சயம் வாழ்நாள் முழுவதும் தொடரும். இறைவனால், இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்". 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனது பாஸ்போர்ட்டில் உள்ள 12 பக்கங்களைக் கிழித்து மோசடியில் ஈடுபட்டனர்.
    • தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இருந்த துஷார் பவார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்

    ஜூலை 11 அன்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இருந்த துஷார் பவார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    33 வயதான துஷார் பவார், தனது பாஸ்போர்ட்டில் உள்ள 12 பக்கங்களைக் கிழித்து மோசடியில் ஈடுபட்டதாகவும், அதில் அவர் தாய்லாந்து, பேங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் செய்த விவரங்கள் உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    2023 - 2024 ஆம் ஆண்டுகளில் 3 முறை தாய்லாந்து சென்றதாகவும் அந்த விஷயம் தனது மனைவிக்கு தெரிந்தால் பிரச்சனையாகும் என்று பாஸ்போர்ட்டின் சில பக்கங்களை கிழித்ததாக அவர் ஒப்பு கொண்டுள்ளார்.

    பாஸ்போர்ட்டில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட துஷார் தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ×