என் மலர்
நீங்கள் தேடியது "Asean summit"
- ஆசியான் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார்.
- அப்போது பேசிய அவர், 21ம் நூற்றாண்டு நமது நூற்றாண்டு என தெரிவித்தார்.
புதுடெல்லி:
மலேசியாவில் ஆசியான் மாநாடு நடக்கிறது. அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஆசியான் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு வாழ்த்துகள். இந்த அமைப்பில் புதிதாக இணைந்துள்ள திமோர் நாட்டை வரவேற்கிறேன்.
உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியா மற்றும் ஆசியான் அமைப்பு நாடுகளில் தான் வசிக்கின்றனர். நாம் வர்த்தக உறவை மட்டும் பகிரவில்லை. கலாசார உறவுகளையும் பகிர்கிறோம்.
இந்தியாவின் தெற்கு நோக்கிய கொள்கையில் ஆசியான் அமைப்பு முக்கிய தூணாக திகழ்கிறது. சர்வதேச ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையாக நமது வலுவான கூட்டாண்மை உருவாகி வருகிறது.
இந்தியா எப்போதும் ஆசியான் கூட்டாளிகளுடன் துணை நின்று வருகிறது. மனிதநேய உதவி மற்றும் பேரிடர் மீட்புப் பணி, கடலோர பாதுகாப்பு மற்றும் கடல், கடல்சார் வளங்கள் அடிப்படையிலான பொருளாதாரம் ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது.
2026 ம் ஆண்டை ஆசியான் - இந்தியா கடலோர பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஆண்டு என அறிவித்துள்ளோம்.
கல்வி, சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுவாக ஊக்குவித்து வருகிறோம்.
21-ம் நூற்றாண்டு நமது நூற்றாண்டு. இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு. ஆசியான் அமைப்பின் சமூக தொலைநோக்கு கொள்கை 2045 மற்றும் வளர்ந்த பாரதம் 2047 ஆகியவற்றின் நோக்கம், முழு மனித குலத்துக்கான பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குமென நம்புகிறேன் என தெரிவித்தார்.
- இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
- மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தம், அரிய மண் தாதுக்கள் ஒப்பந்தத்த்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது.
இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர்.
எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறினார்கள். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டு இரு நாட்டு தலைவர்களுடன் பேசி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இந்நிலையில் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாட்டின் கலந்துகொண்டார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் ஆகியோர் டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் மூலம் தாய்லாந்து காவலில் வைத்திருந்த 18 கம்போடிய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான 800 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட கனரக ஆயுதங்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த ஒப்பந்தத்துடன் சேர்த்து, மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தம், அரிய மண் தாதுக்கள் ஒப்பந்தத்த்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
மேலும் கம்போடியா உடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்துடனான கனிம வள ஒப்பந்தத்திலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
- வாஷிங்டனில் இருந்து 23 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு கோலாலம்பூரில் வந்திறங்கினார்.
- கடைசி நேரத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் -ஐ டிரம்ப் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று 3 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்குகிறார். அவர் 2-வது முறை அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று அமெரிக்காவிலிருந்து கிளம்பிய டிரம்ப் மலேசியா தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்துள்ளார்.
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறார்.
வாஷிங்டனில் இருந்து 23 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு கோலாலம்பூரில் வந்திறங்கிய டிரம்ப்புக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான ஓடுபாதையில் மலேசியாவின் பாரம்பரிய உடைகள் அணிந்த நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ப் நடனமாடினார். மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் அதிபரும் இணைந்து நடனமாடினர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
மலேசிய பயணத்துக்கு பிறகு டிரம்ப் ஜப்பானுக்கு செல்கிறார். இந்த பயணத்தில் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதன்பின் டிரம்ப், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இதில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
குறிப்பாக இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச உள்ளார். இந்த பயணத்தின்போது கடைசி நேரத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் -ஐ டிரம்ப் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
- அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறார்.
- சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று 3 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்குகிறார். அவர் 2-வது முறை அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டிரம்ப் முதலில் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு செல்கிறார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறார்.
இதில் மலேசியா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மேலும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா-டிரம்ப் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய பயணத்துக்கு பிறகு டிரம்ப் ஜப்பானுக்கு செல்கிறார். இந்த பயணத்தில் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதன்பின் டிரம்ப், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இதில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். குறிப்பாக இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச உள்ளார்.
சமீபகாலமாக அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. நவம்பர் 1-ந்தேதி முதல் சீனா மீதான வரியை 155 சதவீதமாக உயர்த்து வேன் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் டிரம்ப்-ஜின்பிங் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- ஆசியான் அமைப்பின் 47-வது உச்சி மாநாடு 26-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுகிறது.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆசியான் மாநாட்டில் பங்கேற்க மலேசியா அழைப்பு விடுத்தது.
கோலாலம்பூர்:
ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) அமைப்பின் 47-வது உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறுகிறது.
இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் அமைப்புக்கும், இந்தியாவுக்கும் சமீபத்திய ஆண்டுகளாக இருதரப்பு உறவு முன்னேற்றம் அடைந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆசியான் மாநாட்டில் பங்கேற்க மலேசியா அழைப்பு விடுத்தது. இதையடுத்து பிரதமர் மோடி மலேசியாவுக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மலேசியாவில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியது.
இதற்கிடையே மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
இதுதொடர்பாக மலேசிய பிரதமர் அன்வர் கூறுகையில், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். ஆசியான் உச்சி மாநாட்டிற்கான தயாரிப்புகள் குறித்து இருவரும் விவாதித்தோம்.
அதே வேளையில் இந்தியாவில் தீபாவளி பண்டிகை இன்னும் கொண்டாடப்படுவதால் ஆன்லைனில் கலந்து கொள்வதாக மோடி தெரிவித்தார். அவரது இந்த முடிவை மதிக்கிறேன். மலேசியா-இந்தியா உறவை வலுப்படுத்துவதற்கும், ஆசியான்-இந்தியா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் மலேசியா தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது என தெரிவித்தார்.
ஆசியான் உச்சி மாநாட்டில் மலேசியாவின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது. பிரதமர் மோடியின் மலேசிய பயணம் ரத்து மூலம் டிரம்ப் உடனான சந்திப்பு இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- லாவோஸ் நாட்டில் ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெறுகிறது.
- சீன பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வியன்ட்டியன்:
இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் லாவோஸ் நாட்டிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக இன்று லாவோஸ் நாட்டின் தலைநகர் வியன்ட்டியனுக்கு ராஜ்நாத் சிங் சென்றடைந்தார்.
இதேபோல், ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வியன்ட்டியன் நகருக்கு சீனாவின் பாதுகாப்புத்துறை மந்திரி டாங் ஜுன் சென்றுள்ளார். இதையடுத்து சீன பாதுகாப்புத்துறை மந்திரியை, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ராஜ்நாத் சிங் கூறுகையில், வருங்காலங்களில் கல்வானில் ஏற்பட்ட மோதல் போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மோதலுக்கு பதில் ஒத்துழைப்பில் கவனம் செலுத்தவேண்டும். 2020 மோதலில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை பற்றி சிந்திக்கவும், இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கவும், எல்லையில் அமைதி நிலவுவதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.
சமீபத்தில் இந்தியா-சீனா படைகள் டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து வாபஸ் பெறப்பட்ட நிலையில், தற்போது இருநாட்டு பாதுகாப்பு மந்திரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சிங்கப்பூரில் நடைபெற்ற பின்டெக் விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை உரையாற்றினார். மாநாட்டில் அவர் பேசியதாவது:-
உலக நிதி மையமாக சிங்கப்பூர் திகழ்கிறது. இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி நடைபெற்று வருகிறது. 130 கோடி மக்களின் வாழ்க்கையை இந்த புரட்சி மாற்றி உள்ளது. உலக பொருளாதாரத்தின் வடிவம் மாறி வருகிறது. தொழில்நுட்பம், புதிய உலகின் போட்டியாகவும் ஆற்றலாக உள்ளது. இது எண்ணற்ற வாய்ப்புக்களையும் உருவாக்கி தருகிறது.

ஆதார் மூலம் நூறு கோடிக்கும் அதிகமானோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு பொருளாதார உதவிகள் சென்று சேர்வதில் சிக்கல் இல்லை. நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் துவங்குவற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் நிலவுகிறது. இந்தியாவில் முதலீடு செய்ய உலக நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #PMModi #FintechFestival






