

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று 3 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்குகிறார். அவர் 2-வது முறை அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டிரம்ப் முதலில் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு செல்கிறார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறார்.
இதில் மலேசியா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மேலும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா-டிரம்ப் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய பயணத்துக்கு பிறகு டிரம்ப் ஜப்பானுக்கு செல்கிறார். இந்த பயணத்தில் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதன்பின் டிரம்ப், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இதில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். குறிப்பாக இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச உள்ளார்.
சமீபகாலமாக அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. நவம்பர் 1-ந்தேதி முதல் சீனா மீதான வரியை 155 சதவீதமாக உயர்த்து வேன் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் டிரம்ப்-ஜின்பிங் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
BREAKING ? Close to Midnight, President Trump departs for his massively HISTORIC trip to Asia ❤️ Protect Trump at all costs ? pic.twitter.com/LooRKrQMXJ