என் மலர்
நீங்கள் தேடியது "Xi Jinping"
- அதிபர் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் பேசினார்.
- அப்போது பல்வேறு உலக நிகழ்வுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இரு தலைவர்களும் பல்வேறு உலக நிகழ்வுகள் மற்றும் நாட்டு நடப்புகள் குறித்து விவாதித்தனர்.
இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ஒரு சிறந்த தொலைபேசி உரையாடலை இப்போதுதான் முடித்தேன். அதில் பல முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
அவற்றில் வர்த்தகம், ராணுவம், ஏப்ரல் மாதத்தில் நான் சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம் (இதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்), தைவான், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர், ஈரானுடனான தற்போதைய நிலைமை, அமெரிக்காவிலிருந்து சீனா எண்ணெய் மற்றும் எரிவாயு கொள்முதல், தற்போதைய பருவத்திற்கு சோயாபீன் எண்ணிக்கையை 20 மில்லியன் டன்களாக உயர்த்துவது உள்பட கூடுதல் விவசாயப் பொருட்களை வாங்குவது குறித்து சீனாவின் பரிசீலனை, விமான எஞ்சின் விநியோகங்கள் மற்றும் பல பிற விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அனைத்தும் மிகவும் நேர்மறையானவை.
சீனா உடனான உறவும், ஜி ஜின்பிங் உடனான எனது தனிப்பட்ட உறவும் மிகவும் நல்ல ஒன்றாகும். அதை அப்படியே வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் இருவரும் உணர்கிறோம்.
எனது ஜனாதிபதி பதவியின் அடுத்த 3 ஆண்டுகளில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன மக்கள் குடியரசுடன் தொடர்புடைய பல நேர்மறையான முடிவுகள் அடையப்படுமென நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
- உலகின் 2 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக சீனா உள்ளது.
- சீனா குறைக்க சர்வதேச வர்த்தகத்தில் யுவானின் பயன்பாட்டை அதிகப்படுத்தி வருகிறது.
சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் மதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதன் விளைவாக உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருவதால் தனகத்தில் விலை புதிய உச்சத்தை தொட்டு விலையேறி வருகிறது.
இந்நிலையில், சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், சீனாவின் 'யுவான்'-ஐ (Yuan) உலகளவில் ஒரு வலுவான சக்தியாக மாற்றப் போவதாக அதிபர் ஜி ஜின்பிங் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் 2 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ள சீனா அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க சர்வதேச வர்த்தகத்தில் யுவானின் பயன்பாட்டை அதிகப்படுத்தி வருகிறது.
சீனா கடந்த ஆண்டு, அதன் 6.2 டிரில்லியன் டாலர் வெளிநாட்டு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை உள்ளூர் நாணயத்தில் மேற்கொண்டது.
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தத்துவார்த்த இதழான கியுஷியில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், "சீனாவின் நிதித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதன் மூலம், 'யுவான்' நாணயத்தை சர்வதேச வர்த்தகம், முதலீடுகளில் ஒரு முக்கிய நாணயமாக நிலைநிறுத்த வேண்டும்" என்று ஜி ஜின்பிங் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 4 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார்.
- 8 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் சீனா செல்வது இது முதல் முறை
பீஜிங்:
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 4 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார். தலைநகர் பிஜீங் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் சீனாவுக்கு செல்வது இது முதல் முறை ஆகும். ஸ்டார்மர் தன்னுடன் 54 தொழில் அதிபர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேற்று காலை சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தது.
இதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
சமீபகாலமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரிகளை கடுமையாக விதித்து வருகிறார். சீனா, இங்கிலாந்து மீதும் வரிகளை விதித்தார். இதனால் இங்கிலாந்து பிரதமரின் இந்த சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்கா மற்றும் கனடா உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.
- கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஒட்டாவா:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வர்த்தகப் போர் மற்றும் நாடுகளைக் கைப்பற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றால் அமெரிக்கா, கனடா உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனா செல்லும் கார்னி வரும் 16-ம் தேதி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதுதொடர்பாக மார்க் கார்னி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய வர்த்தகக் குழப்பம் நிலவும் இந்த நேரத்தில் கனடா ஒரு போட்டித்தன்மை வாய்ந்த, நிலையான மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. ஒரே வர்த்தகப் பங்காளியைச் சார்ந்திருந்த நமது பொருளாதாரத்தை மாற்றுவதற்காக நாங்கள் உலகம் முழுவதும் புதிய கூட்டாண்மைகளை உருவாக்கி வருகிறோம் என தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடந்த ஆசியா-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மார்க் கார்னி சந்தித்தார். அப்போது சீனா வருமாறு அவர் விடுத்த அழைப்பை ஏற்று அங்கு செல்ல கார்னி ஒப்புக் கொண்டார்.
கனடா பிரதமரின் சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- கடந்த வாரம் சீனா தைவான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியது.
- தைவானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்தது.
பீஜிங்:
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்தது. ஆனால் தைவானை இன்னும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வருகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைப்பதற்காக சீனா போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் சீனா பதற்றத்தைத் தூண்டுகின்றது.
தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தையும் தூண்டுகிறது. கடந்த வாரம் சீனா தைவான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
தைவானை தனது நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாகவே சீனா கருதுகிறது. தற்போது அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே தைவான் விரைவில் சீனாவுடன் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.
- உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக தகவல்.
- சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டெலிபோனில் பேசியதாக தெரிவித்துள்ளார். அப்போது ஜி ஜின்பிங் சீனாவுக்கு வர அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு செல்ல இருப்பதாகவும், தனது அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வருடம் இறுதியில் அமெரிக்க வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது என சமூக வலைத்தளத்தில் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இருவரும் உக்ரைன், அமெரிக்க சோயாபீன்ஸ் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
வரி விதிப்பு காரணமாக அமெரிக்கா- சீனா இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தென்கொரியாவில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். அப்போது இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்தனர்.
தைவான் குறித்து ஜப்பான் கருத்து தெரிவித்ததால் சீனா- ஜப்பான் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தைவான் குறித்து டொனால்டு டிரம்ப் குறிப்பிடவில்லை.
சுயாட்சி பெற்ற தைவான் சீன ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தைவான் குறித்து யாரும் கருத்து தெரிவித்தால் அதற்கு கடும் கண்டனமும் தெரிவித்து வருகிறது.
தைவானுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்தால், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான ஜப்பானின் ராணுவம் இதில் ஈடுபடக்கூடும் என ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி குறிப்பிட்டிருந்தார்.
- நீங்கள் அவர்களுடன் விளையாட முடியாது.
- வட கொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பங்கேற்றார்.
அப்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், இருவரில் யாரை சமாளிப்பது மிகவும் கடினம் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டிரம்ப், "அவர்கள் இருவரும் வலிமையான மற்றும் புத்திசாலித்தனமான தலைவர்கள், அவர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. நீங்கள் அவர்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களுடன் விளையாட முடியாது." என்று தெரிவித்தார்.
அதே நேர்காணலில், எட்டு போர்களை நிறுத்த முடிந்ததாக கூறிய டிரம்ப், உக்ரைன் போரை தன்னால் மட்டும் நிறுத்த முடியவில்லை, ஆனால் அது விரைவில் நடக்கும் என்று தெரிவித்தார்.
தனக்கு புதினுடன் நல்ல உறவு உள்ளது என்றும் அதனால் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்துவது மிகவும் எளிதானது என்று நினைத்தது தவறு என்று டிரம்ப் கூறினார்.
மேலும் அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடந்த திட்டமிட்டுள்ளது குறித்து பேசிய டிரம்ப், ரஷிய சோதனைகளை நடத்துவதாக அறிவித்துள்ளது, வட கொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.
பாகிஸ்தானும் சோதனை செய்கிறது. சோதனை செய்யாத ஒரே நாடு நாங்கள்தான். அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாங்கள் பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
பேட்டியில், சீனா, ரஷியா ஆகியவை அணு ஆயுதத்தை சோதனை செய்யவில்லை என்றும் அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் டிரோன் உள்ளிட்ட உபகரணங்களை தான் சோதனை செய்வதாக நிருபர் கூறினார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், அவை ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்கின்றன அவை வெளியே கூறப்படுவதில்லை என தெரிவித்தார்.
- பூசான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- ஜி ஜின்பிங்குடன் நான் கச்சா எண்ணெய் பற்றி விவாதிக்கவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக பூசான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தகம் தொடர்பான சாதகமான முடிவுகள் எட்டப்பட்டன. சீனா மீதான வரியை 57%லிருந்து 47%ஆக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்த சந்திபின் பின் வாஷிங்டன் புறப்பட்ட டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, சீனா நீண்ட காலமாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருகிறது. அது சீனாவின் பெரும்பான்மையான தேவையை பூர்த்தி செய்கிறது.
அதே சமயம், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.
ஜி ஜின்பிங்குடன் நான் கச்சா எண்ணெய் பற்றி விவாதிக்கவில்லை. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒன்றாக இணைந்து செயல்படுவது பற்றி விவாதித்தோம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்திய பொருட்கள் மீது அபராதமாக டிரம்ப் 50 சதவீத வரிவிதித்தது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவிடம் சோயாபீன்ஸ் வாங்க சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
- அரிய பூமி தாதுக்களை அமெரிக்காவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா சம்மதம்
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்தார். இதனால் அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், அமெரிக்காவிடம் சோயாபீன்ஸ், சோளம் போன்ற விவசாய பொருட்களையும், கச்சா எண்ணெயையும் வாங்க சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
அதே சமயம் அரிய பூமி தாதுக்களை அமெரிக்காவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.
முன்னதாக முக்கிய வர்த்தகப் பிரச்னைகளைத் தீர்க்க இருநாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருந்த நிலையில், சீனா மீதான வரியை 57%லிருந்து 47%ஆக குறைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீன பொருட்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதித்தார்.
- அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்தார். இதனால் அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பரஸ்பர வரி விதிப்புகள், அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சீனப் பொருட்கள் மீதான வரியை டிரம்ப் 10% குறைத்துள்ளார். இதன்மூலம் 57% ஆக இருந்த வரி தற்போது 47% ஆக குறைந்துள்ளது.
- சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
- உலகின் 2 முன்னணி பொருளாதாரங்களுக்கு இடையே அவ்வப்போது உராய்வுகள் இருப்பது இயல்பு.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்தார். இதனால் அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் பரஸ்பர வரி விதிப்புகள், அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே டிரம்ப் உடனான சந்திப்பின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்று பலமுறை பொதுவெளியில் கூறியுள்ளேன்.
உலகின் 2 முன்னணி பொருளாதாரங்களுக்கு இடையே அவ்வப்போது உராய்வுகள் இருப்பது இயல்பு. இருப்பினும் இரு நாடுகளின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல சூழலை உருவாக்க டிரம்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என்றார்.
- அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறார்.
- சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று 3 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்குகிறார். அவர் 2-வது முறை அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டிரம்ப் முதலில் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு செல்கிறார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் டிரம்ப் பங்கேற்கிறார்.
இதில் மலேசியா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மேலும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா-டிரம்ப் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய பயணத்துக்கு பிறகு டிரம்ப் ஜப்பானுக்கு செல்கிறார். இந்த பயணத்தில் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதன்பின் டிரம்ப், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இதில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். குறிப்பாக இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச உள்ளார்.
சமீபகாலமாக அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. நவம்பர் 1-ந்தேதி முதல் சீனா மீதான வரியை 155 சதவீதமாக உயர்த்து வேன் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் டிரம்ப்-ஜின்பிங் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.






