என் மலர்

  நீங்கள் தேடியது "US Dollar"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. #IndianRupeeValue #USDollar
  புதுடெல்லி:

  கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது. மேலும் இறக்குமதியாளர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  கடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.

  இதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளைப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது.

  சில நாட்களாக ஓரளவு உயர்ந்து வந்த நிலையில் இன்று மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. இன்று காலை வர்த்தக நேரம் துவங்கியதும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக 74.48 ஆக உயர்ந்தது. அதன்பின்னர் சற்று ஏற்றம் பெற்று வர்த்தகம் ஆனது.  #IndianRupeeValue #USDollar
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.74.10 ஆக உள்ளது. #RupeeAt74
  புதுடெல்லி:

  கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணை விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது.

  மேலும் இறக்குமதியாளர்கள் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வகையில் ரூ.74.10 ஆக சரிந்தது. ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. சென்செக்ஸ் 792 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. #Rupee #Rupeeversusdollar #USdollar
  சென்னை:

  சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 7-ந்தேதி வர்த்தக நேர இறுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.71.73 ஆக இருந்தது.

  இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 45 காசுகள் சரிந்து ரூ.72.15 ஆக இருந்தது. சிறிது நேரத்தில் மேலும் 3 காசுகள் சரிந்து ரூ.72.18 ஆனது.

  இது வரலாறு காணாத சரிவாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 6-ந்தேதி இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72.11 என்ற அளவில் இருந்தது. அதுவே உச்சபட்ச சரிவாக இருந்தது.


  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளது. அதன் காரணமாக எண்ணை உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், அமெரிக்க டாலரை அதிகம் வாங்குகின்றனர். டாலரின் தேவை அதிகரித்து வருவதால் ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.

  மற்றநாடுகளின் நாணயங்கள் அமெரிக்க டாலரை ஆதரித்து வருகின்றன. இந்தநிலையில் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் மீண்டும் தீவிரம் அடைந்தால் ரூபாய் மதிப்பு மேலும் சரியும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். #Rupee #Rupeeversusdollar  #USdollar
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து இன்று ரூ.71.87 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. #Rupee #Rupeeversusdollar #USdollar
  புதுடெல்லி:

  அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் பதற்றம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முந்தைய வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 71.87 காசுகளாக  இன்று வீழ்ச்சி அடைந்தது.  பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, நேற்றைய டாலர் விலைக்கு எதிரான மதிப்பான ரூ.71.43 காசுகளுடன் ஆரம்பமானது. ஆனால், வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு உயர்ந்து ரூ.71.40 காசுகளுக்கு வந்தது.

  ஆனால், பிற்பகலுக்குப் பின் மீண்டும் ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டு வர்த்தகம் முடியும்போது நேற்றைய மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக 44 காசுகள் சரிந்து ரூ.71.87 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது. #Rupee #Rupeeversusdollar  #USdollar
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், சாமானிய பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? என்பதை பார்க்கலாம். #RupeeInICU #IndianRupee
  புதுடெல்லி:

  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இது தவிர இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரும் சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

  இதன் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது.

  ஜூன் 19-ஆம் தேதி அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.61 என்ற அளவிற்கு சரிந்திருந்தது. இது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக கருதப்பட்டது. அதன்பின்னர் சிறிது ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு நேற்றைய வர்த்தக நேர முடிவில் 68.61 ஆக நிலைபெற்றது. 

  ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கி, அந்த நாட்டை தனிமைப்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் தொடக்கமாக, கூட்டணி நாடுகள் அனைத்தும் ஈரானிடம் இருந்து நவம்பர் மாதத்திற்குப் பிறகு கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று கூறியிருந்தது. 

  இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது என்றும், இதை மீறினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டது.

  இதுபோன்ற காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடுமையாக சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின்போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து 68.89 ஆக இருந்தது. அதன்பின்னர் சிறிது நேரத்திலேயே மேலும் சரிந்து 69.10 என்ற நிலையை எட்டியது. இது வரலாறு காணாத சரிவு ஆகும். 

  இந்த நிலை மேலும் மோசமடையலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் 70 ரூபாயை தொடலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரூபாய் மதிப்பு சரிவால் சாமானியர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படலாம் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

  ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் இறக்குமதி குறைந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது, இறக்குமதி பொருட்களின் மீதான வரியை உயர்த்தும் நடவடிக்கையை நோக்கி அரசை தள்ளும். மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, கடந்த மே மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 1,460 கோடி டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டில், இதே மாதத்தில் இருந்ததை விட 5.6 சதவீதம் அதிகம்.   சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இறக்குமதி செலவு அதிகரிக்கும். அதனால் பெட்ரோல்,  டீசலின் விலை அதிகரிக்கும். இது சாமானியர்களை வெகுவாக பாதிக்கும். 

  ஏற்கனவே, பெட்ரோல் விலை உயர்வால் கடும் சுமையை தாங்கிக்கொண்டிருக்கும் மக்களின் தலையில் மேலும் இடியாக இது இருக்கும். விலையை குறைத்தால் கடும் நிதிசுமையை ஏற்க வேண்டியிருக்கும் என்பதால், பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்க வாய்ப்புகள் குறைவு. 

  எரிபொருள் விலை உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணியாக அமையும். இதனால், ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளில் தேக்கம் ஏற்படும். இது பணவீக்கம் அதிகரிக்க காரணமாகவும் இருக்கும். பணவீக்கம் அதிகரித்ததால் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது.

  மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு ரூபாய் மதிப்பை உயர்த்தும் வழிகளை செய்தால்தான், பொதுமக்கள் தீவிர சுமைக்கு உள்ளாவதை தடுக்க முடியும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
  ×