என் மலர்
நீங்கள் தேடியது "பொருளாதாரம்"
- லோவி இன்ஸ்டிடியூட் என்ற குழு ‘ஆசிய சக்தி குறியீடு' மூலம் உலகில் தலைசிறந்த நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
- பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தையும் அதற்கடுத்தபடியாக சீனா 2-வது இடத்தையும் பெற்று இருக்கிறது.
உலகின் சிறந்த நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம், ராணுவ பலம், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், சமூகத்தின் நிலை மற்றும் உலகுக்கு அந்த நாடு அளிக்கும் பங்களிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாராகிறது.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவை அடிப்படையாக கொண்ட லோவி இன்ஸ்டிடியூட் என்ற குழு 'ஆசிய சக்தி குறியீடு' மூலம் உலகில் தலைசிறந்த நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
பொருளாதாரத் திறன், ராணுவத்திறன், நிலைத்தன்மை, எதிர்கால வளங்கள், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்புகள், ராஜதந்திர செல்வாக்கு, கலாசார செல்வாக்கு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தையும் (80.5 புள்ளிகள்), அதற்கடுத்தபடியாக சீனா 2-வது இடத்தையும் (73.7 புள்ளிகள்) பெற்று இருக்கிறது. இந்த புள்ளி விவரங்கள் குறியீட்டின்படி, இந்த 2 நாடுகளும் மிக சக்திவாய்ந்த நாடுகளாக சொல்லப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் (40 புள்ளிகள்) உள்ளது. இந்த புள்ளி விவரங்களை வைத்து இந்தியா முக்கிய சக்திவாய்ந்த நாடாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த முன்னேற்றத்துக்கு நாட்டின் பொருளாதார மீட்பு, அதிகரித்த ராணுவ பலம், சர்வதேச அரங்கில் ராஜதந்திர செல்வாக்கு, அரசியல் முக்கியத்துவம் போன்றவை காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இதனையடுத்து 38 புள்ளிகளுடன் ஜப்பான் 4-வது இடத்திலும், ரஷியா 32.1 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் இருக்கிறது. இந்த நாடுகள் நடுத்தர சக்திவாய்ந்த நாடுகள் என வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
இந்திய பொருளாதார மதிப்பு 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் என்று மத்திய நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், "தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்த நிதியாண்டில் (2025-26) நம் நாட்டின் பொருளாதார மதிப்பு 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.357 லட்சம் கோடி) கடக்கும்" என்று தெரிவித்தார்.
- சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
- செழிப்பை ஊக்குவிக்கவும் இந்த சீர்திருத்தங்கள் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடி தனது இல்லத்தில் இன்று மாலை பொருளாதார வல்லுநர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இதில், இந்தியாவின் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அனைத்து துறைகளிலும் விரைவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்வாதாரததிற்காக வழிவகை, வாழ்க்கை முறை வணிகம், தொழில் செய்வதை எளிமைப்படுத்துவதற்கும் செழிப்பை ஊக்குவிக்கவும் இந்த சீர்திருத்தங்கள் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பொருளாதார வல்லுனர்களுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
- இது 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த வர்த்தக பற்றாக்குறையில் 37 சதவீதமாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.
- வர்த்தகப் பற்றாக்குறை, நாட்டின் நாணயத்தின் மதிப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (Free trade அக்ரீமெண்ட்)நடைமுறைக்கு வந்ததிலிருந்து ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா அதன் ஏழு வர்த்தக கூட்டாளர்களில் ஐந்து பேருடன் வர்த்தக பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இது 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த வர்த்தக பற்றாக்குறையில் 37 சதவீதமாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.
2025 நிதியாண்டில் ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 45.2 பில்லியன் டாலர்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.
2021 முதல், இந்தியா, மொரிஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் (EFTA) மற்றும் ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளது.
இருப்பினும், 2022 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
10 நாடுகளைக் கொண்ட ASEAN கூட்டமைப்புடனான பற்றாக்குறை 2019 நிதியாண்டில் 21.8 பில்லியன் டாலர்களில் இருந்து 2025 நிதியாண்டில் 45.2 பில்லியன் டாலராக உயர்ந்தது.
வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஒரு நாட்டின் இறக்குமதிகள், ஏற்றுமதிகளை விட அதிகமாக இருக்கும்போது ஏற்படும் நிலை. ஒரு நாடு வாங்கும் பொருட்களின் மதிப்பு, அது விற்கும் பொருட்களின் மதிப்பை விட அதிகமாக இருக்கும்போது வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
வர்த்தகப் பற்றாக்குறை, நாட்டின் நாணயத்தின் மதிப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் முக்கிய காரணி ஆகும்.
- உலக நாடுகளின் கடன் திறனை 'AAA'-ல் இருந்து C வரை மூடிஸ் நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது.
- இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் கடன் ரேட்டிங் குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கிரெடிட் ரேட்டிங்கை 'AAA'-வில் இருந்து 'Aa1' ஆக மூடிஸ் நிறுவனம் குறைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் கடன் திறனை 'AAA'-ல் இருந்து C வரை மூடிஸ் நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது.
இந்நிறுவனம் அமெரிக்காவின் கடன் ரேட்டிங்கை 'AAA' (outlook)-ல் இருந்து 'Aa1' (Stable) ஆக குறைத்தது அந்நாட்டில் பேசுபொருளாகியுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவின் கடன் ரேட்டிங்கை 'Aa1' ஆக மூடிஸ் நிறுவனம் குறைத்ததால் அமெரிக்க பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
- தோல் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்.
- பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டுள்ளதில் (Women IPS) தமிழ்நாடு முதலிடம்.
பொருளாதார வளர்ச்சியில் 9.69% உயர்ந்து இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
* பொருளாதார வளர்ச்சியில் 9.69%. இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்.
*ஏற்றுமதி தயார் நிலையில் தமிழ்நாடு முதலிடம்.
*தோல் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்.
*புத்தாக்கத் தொழில்கள் தரவரிசைப் பட்டியலில் 2018-ல் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு, 2022 திராவிட மாடல் ஆட்சியில் முதலிடம்.
*பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டுள்ளதில் (Women IPS) தமிழ்நாடு முதலிடம்.
*இந்திய அளவில் காலணிகள் மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பில் தமிழ்நாடு 38 சதவிகிதம் - முதலிடம்.
*அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம்.
*அதிக எண்ணிக்கையில் சதுப்பு நிலங்கள் (RAMSAR Sites) கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு.
*வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்.
*இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழிற்சாலைகளில் தமிழ்நாடு முதலிடம்.
*இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம்.
*தொழிற்சாலைகளில் பணிபுரியும் அதிக பெண் தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம்.
*அதிகத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
உலகளாவிய திறன் மையங்களில் மும்பை, புனே, ஐதராபாத், பெங்களூரூ முதலான நகரங்களைவிட சென்னை 24.5 சதவிகித வளர்ச்சியுடன் 94,121 திறன் மையங்கள் கொண்டு இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்
- பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளில் இந்தியா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்திய வான்வெளி பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர் வினியோகத்தை மத்திய அரசு அடியோடு நிறுத்தி வைத்தது. 1960-ம் ஆண்டில் சிந்துநதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் 65 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தானில் பொருளாதாரத்தை மொத்தமாக முடக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு எப்.ஏ.டி.எப். எனப்படும் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்புக்குழு இயங்கி வருகிறது.
இந்த குழு தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பது மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றம் ஆகியவை எந்தெந்த நாடுகளில் நடக்கிறது என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். இந்த உத்தரவை நிறைவேற்றும் வரை சம்பந்தப்பட்ட நாடு 'கிரே' பட்டியலில் வைக்கப்படும்.
கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் 'கிரே' பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் தீவிரவாதத்திற்கு நிதி கிடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் உறுதி அளித்ததை தொடர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபரில் 'கிரே' பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானை மீண்டும் 'கிரே' பட்டியலில் கொண்டு செல்ல முயற்சி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் மீண்டும் 'கிரே' பட்டியலில் இணைந்தால் அது அந்த நாட்டுக்கு மிகப்பெரிய நிதி சிக்கலை ஏற்படுத்தும்.
இதனால் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மூலதன வரவுகள் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் பாகிஸ்தான் பொருளாதாரம் மேலும் ஆட்டம் காணும். எனவே அடுத்த மாதம் கூடும் எப்.ஏ.டி.எப். கூட்டத்தொடருக்கு முன்பு முக்கிய உறுப்பு நாடுகளுடன் பேசி பாகிஸ்தானை 'கிரே' பட்டியலில் இணைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், பொருளாதார ரீதியாக ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் டாலர் தொகுப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச அமைப்புகளின் நிதியை பாகிஸ்தான் நாடு தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தவறாக பயன்படுத்துவதாக சொல்லி அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுவும் பாகிஸ்தானுக்கு பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
மேற்கண்ட 2 சர்வதேச அமைப்புகளும் பாகிஸ்தானுக்கான நிதியை தடை செய்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் மேலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தான் மீது நேரடி போராக அல்லாமல், அந்த நாட்டிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் புது வகையான சர்ஜிக்கல் ஸ்டிரைக்காக அமையும் என கூறப்படுகிறது.
- இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது
- கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இதுவே மிக அதிகமாகும்.
2024-25 நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69% என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் இருந்து தெரிய வருகிறது.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இதுவே மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும்.
இதற்கு முன்பு அதிகபட்சமாக 2017 - 18 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.59% ஆக இருந்தது.
கொரோனா நோய்த்தொற்றால் 2020 - 21 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 0.07% என்ற மிக குறைவான அளவில் இருந்தது.
2024 இல் மதிப்பிடப்பட்ட மாநில உள்நாட்டு உற்பத்தி 5.15,71,368 கோடி. 2025 இல் மதிப்பிடப்பட்ட மாநில உள்நாட்டு உற்பத்தி 5.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது.
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சி இனியும் தொடருமேயானால், 2032 இல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கை தமிழ்நாடு எட்டும்
உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த இடங்களில் ஆந்திரா 8.21%, ராஜஸ்தான் 7.82%, அரியானா 7.55% ஆகிய மாநிலங்கள் உள்ளன.
- நன்னிலம் பகுதியில் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர்.
- விவசாய பின்னணியில் உள்ள குழந்தைகள் விவசாயத்தை குறித்து பட்டய கல்வி பயில வேண்டும்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாரம், விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்ட பகுதியாகும்.
நன்னிலம் பகுதியில், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ள பகுதியாகும்.
இங்கு விவசாயத்தை பின்னணியாக கொண்ட பொருளாதாரம் தான் உள்ளது. சிறு தொழில் கூடங்களும் கிடையாது.
இந்நிலையில், விவசாயிகளின் பிள்ளைகள், தங்கள் குடும்பங்கள் மேற்கொண்டு வரும் விவசாயப் பணியினை, தாங்கள் தொடரும் நிலையில், அது குறித்த கல்விகளை கற்பதற்கு, நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும், கல்லூரிகளில் இடம் கிடைப்பது என்பது கடினமாக உள்ளது.
விவசாய பின்னணியில் உள்ள குழந்தைகள் விவசாயத்தைக் குறித்து பட்டய கல்வி பயில்வதற்கு, வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில், விரிவாக்க கல்வி மையம் நன்னிலம் பகுதியில் அமைக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை, விவசாய பெருமக்களிடம் இருந்து வருகிறது.
எனவே விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், விவசாய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள், விவசாயக் கல்வியை கற்கும் வகையிலும், நன்னிலம் வட்டாரத்தில், வேளாண் கல்லூரி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இச்சங்கமானது இதோடு மட்டுமல்லாமல் மென்மேலும் வளரவேண்டும்.
- இவ்வாய்ப்பை பயன்படுத்தி வாழ்விலும், பொருளாதாரத்திலும் வெற்றி பெற வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் ஆதிதிராவிடர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். விழாவில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது:-
நாகப்பட்டினம் மாவட்ட த்தில் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மக்களுக்காக உருவாக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கமாகும். இந்த பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆதிதிராவிடர் மக்களுக்காக மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்குமான ஒரு நல்ல தொடக்கமாகும்.
இச்சங்கமானது இதோடு மட்டுமல்லாமல் மென்மேலும் இது வளரவேண்டும்.
கொங்கு மண்டலத்தில் இருக்கும் மக்கள் விவசாயம் மட்டுமின்றி பால் உற்பத்தியிலும் தங்களது உழைப்பின் மூலம் கணிசமான வருவாயை பெருக்கி வருகின்றனர்.
அவர்களை போன்று தாங்களும் தங்களது உழைப்பில் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்தி பால் உற்பத்தியை பெருக்கி தங்களது வாழ்வில் முன்னேற வேண்டும்.
கடந்த மாதம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரத்தில் பால் குளிரூட்டும் கருவி அமைக்கப்ட்டது.
எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கும், பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகின்றது.
பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி வாழ்விலும், பொருளாதாரத்திலும் வெற்றி பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாநில ஆத்மா திட்டக்குழு உறுப்பினர் மகாகுமார், ஒன்றியக் குழுத்தலைவர் தமிழரசி, பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்ச்செல்வி, முன்னாள் பேருராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதன் மூலம் மனித குலத்தை நோய்களிலிருந்து விடுவிக்கலாம்.
- விவசாயம் மட்டுமே இந்திய பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூர் இயற்கை விழிப்புணர்வு மையம் அறக்கட்டளை சார்பில் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் ஆட்சிப் பேரவை உறுப்பினர் ரேணுகா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மாணவிகள் பூரணி, அருணா இறைவணக்கம் பாடினர்.
நிகழ்ச்சிக்கு மூலிகை சேகர் தலைமை வகித்தார்.
மலர் இயற்கை வேளாண் பண்ணை நிறுவனர் ஸ்ரீராம் வரவேற்புரை வழங்கினார்.
இயற்கை விழிப்புணர்வு மையம் அறக்கட்டளைத் தலைவர் கோவி. திருவேங்கடம் வாழ்த்துரை வழங்கினார்.
சீனிவாசநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் இளையராஜா, இயற்கை விவசாயிகள் மருத்துவக்குடி கும்பலிங்கம், நாச்சியார் கோயில் ராஜேந்திரன் மலையப்பநல்லூர் கேசவன், சீனிவாசநல்லூர் ஹேமா, கால்நடை மருத்துவர்கள் ஆனந்த், ஆனந்தி, நேரு யுவகேந்திரா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினர் ஆதலையூர் சூரியகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதன் மூலம் மனித குலத்தை நோய்களிலிருந்து விடுவிக்கலாம். படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு குறிப்பாக இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும்.
உலகம் பொருளாதார சிக்கல்களில் சிக்கி இருக்கும்போது விவசாயம் மட்டுமே இந்திய பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.
சேவைத் துறையை விட தொழில் துறையை விட லாபம் குறைவாக இருந்தாலும் நிலையான நீடித்த வளர்ச்சிக்கு விவசாயமே உதவுகிறது.
விவசாயத்தை நம்பி இருக்கும் பொருளாதாரம் எப்போதும் சரிந்து விழுவது இல்லை. எனவே படித்த இளைஞர்கள் விவசாயத்தை நோக்கி வர முன் வர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியின் நிறைவில் இளந்துறை இயற்கை விவசாயி சுவாமிநாதன் நன்றி கூறினார். ஐம்பதிற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார்.
- மாதம் ரூ 20 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க தொடங்கியது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரையை சேர்ந்தவர் சரவணன். அவரது மனைவி நாகலெட்சுமி (வயது 38). இவர்களுக்கு தீபஸ்ரீ என்ற மகள், சந்தோஷ் என்ற மகன் உள்ளனர். இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மின் விபத்து ஒன்றில் சரவணன் இறந்து விட்டார். குடும்பத்திற்கான வாழ்வாதாரமாக இருந்த கணவர் சரவணன் இறந்தது நாகலெட்சுமியை நிலை குலைய செய்தது.
எதிர்காலம் என்னவாகும் என்ற துயரத்தில் தவித்தவரை கரை சேர்த்திருக்கிறது தஞ்சாவூர் ஓவியம். முறைப்படி தஞ்சாவூர் ஓவியம் செய்வதற்கு கற்றுக் கொண்டவருக்கு அதுவே வாழ்வாதாரமாகவும் மாறியது.
தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றான, அழியும் நிலையில் இருக்க கூடிய பாரம்பரிய கலையான தஞ்சாவூர் ஓவியம் செய்வதை தன்னை போல் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு முறையாக பயிற்சி தந்து கற்றுக் கொடுத்து வருகிறார். வருமானத்திற்கு வழியின்றி தவித்து நின்ற பல பெண்கள் இதன் மூலம் பலனடைந்து வருகின்றனர்.
இது குறித்து நாகலெட்சுமி கூறியதாவது :-
பத்து வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். அவர் இருந்த வரை வீட்டு வாசலை கூட நான் தாண்டியதில்லை. திடீரென ஒரு நாள் எங்களை தவிக்க வைத்து மறைந்து விட்டார். ஆதரவாக இருக்க எந்த உறவும் முன்வரவில்லை. அனைத்தையும் பொறுத்து கொண்டு பிள்ளைகளுக்காக வாழத் தொடங்கினேன். அப்போது தான் கும்பகோணத்தில் தஞ்சாவூர் ஓவியம் செய்து வரும் சக்கரபாணி ஆர்ட்ஸ் உரிமையாளரான பன்னீர்செல்வம் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்கு கற்றுத் தருகிறார். அவர் கம்பெனியில் என்னை போல் கணவரை இழந்த, கணவரால் கைவிடப்பட்ட பல பெண்களுக்கு பயிற்சி கொடுப்பதுடன், அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி தந்தார்.
என் நிலையை அறிந்து கலை உலகிற்குள் அழைத்து சென்றார். எனக்கு முறைப்படி தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்கு கற்றுத் தந்தார். சில ஆண்டுகள் அங்கு வேலை செய்து வந்த நான் பின்னர் வீட்டிலேயே தனியாக தஞ்சாவூர் ஓவியம் தயாரிக்க தொடங்கினேன். மாதம் ரூ 20,000 வரை வருமானம் கிடைக்கத் தொடங்கியது. தற்போது மகள் 10-ம் வகுப்பும், மகன் 8-வதும் படிக்கின்றனர்.
என்னைப் போல் கணவரை இழந்த, சரியான வாய்ப்பு கிடைக்காமல் வறுமையுடன் போராடி கொண்டிருப்ப வர்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் பயிற்சி கொடுக்க தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். அவர்கள் பலரும் இன்றைக்கு கை நிறைய சம்பாதிக்கின்றனர். சொந்தக்காலில் நிற்க நினைக்கும் பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் சிறந்த முறையில் கை கொடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






