என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

9.69 சதவீத பொருளாதார வளர்ச்சி.. புதிய உச்சத்தை எட்டிய தமிழ்நாடு
- இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது
- கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இதுவே மிக அதிகமாகும்.
2024-25 நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69% என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் இருந்து தெரிய வருகிறது.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இதுவே மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும்.
இதற்கு முன்பு அதிகபட்சமாக 2017 - 18 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.59% ஆக இருந்தது.
கொரோனா நோய்த்தொற்றால் 2020 - 21 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 0.07% என்ற மிக குறைவான அளவில் இருந்தது.
2024 இல் மதிப்பிடப்பட்ட மாநில உள்நாட்டு உற்பத்தி 5.15,71,368 கோடி. 2025 இல் மதிப்பிடப்பட்ட மாநில உள்நாட்டு உற்பத்தி 5.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது.
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சி இனியும் தொடருமேயானால், 2032 இல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கை தமிழ்நாடு எட்டும்
உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த இடங்களில் ஆந்திரா 8.21%, ராஜஸ்தான் 7.82%, அரியானா 7.55% ஆகிய மாநிலங்கள் உள்ளன.






