என் மலர்
நீங்கள் தேடியது "Economic Development"
- திமுக ஆட்சியில் உண்மையில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதா?
- தமிழக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதா?
2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதனை விமர்சித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில் உண்மையில் தமிழகம் பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதா? தமிழக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதா? ஸ்டாலின் விளம்பர ஆட்சியில் ஒரு டிரில்லியன் பொய்கள்!
போட்டோசூட் நடத்தி, பெயர் வைப்பதில் சாதனை புரிந்துவரும் விடியா திமுக அரசு, 'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என்று ஒரு புதிய புரளியைக் கிளப்பிவிட்டு விளம்பரம் தேடுகிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல்; மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமல்; மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் கொடுக்காமல் வெற்று விளம்பரம் செய்யும் திறனற்ற அரசு என்று திமுக-யை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறோம். இதனை நிரூபிக்கும் வகையில் விடியா அரசு மீண்டும் ஒரு பொய்யைச் சொல்லி வருகிறது.
இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு என்பதும் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழ் தாடு என்பதும், ஒரு மாய விளம்பரம் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை பொருளாதார வளர்ச்சி பற்றிய புள்ளி விபரங்கள் எல்லாமே,
* முதல் முன்கூட்டிய மதிப்பீடு,
* இரண்டாம் முன்கூட்டிய மதிப்பீடு,
* தற்காலிக மதிப்பீடு,
* முதல் திருத்தப்பட்ட மதிப்பீடு,
* இரண்டாம் திருத்தப்பட்ட மதிப்பீடு,
* மூன்றாம் திருத்தப்பட்ட மதிப்பீடு
என, பல்வேறு நிலைகளில் ஆறு கட்டங்களாக வெளியிடப்பட்டு, அதன் பிறகே இறுதி மதிப்பீடு வெளியாகும். இந்தப் புள்ளி விபாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றம் அடையும் என்பதே உண்மை. இந்த வகையில் கடந்த 17.3.2025 அன்று தமிழ் நாட்டின் வளர்ச்சி 2024-25 ஆண்டுக்கு 9.69% என கணிக்கப்பட்டது. இதுவே 1.8.2025 கணிப்பில் 11.19% என்று உயர்ந்துள்ளது.
உடனே விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு, இரு இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழ் நாடு என்று மார்தட்டிக்கொண்டு பெரிய பெரிய விளம்பரங்களை வெளியிட்டு ஒரு மாயத் தோற்றதை உருவாக்குகிறது. இந்தக் கணிப்பு இறுதியானது அல்ல என்பதும் அடுத்தடுத்த கணிப்புகளில் இது மாறலாம் என்பதுமே உண்மை. இதுதவிர, இதே புள்ளி விபரத்தில் 2022-23 ஆண்டு தமிழ் நாட்டின் வளர்ச்சி அதாவது 17.3.2025 கணிப்பின்படி 8.13% என்று இருந்தது. 1.8.2025 கணிப்பில் 6.17% என குறைந்துமிட்டது. இதுதாள் 2022-23க்கான இறுதி மதிப்பீடு, இதுபற்றி விடியா திமுக அரசு எதுவும் பேசாது. அந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் ஏற்கெனவே செய்த மதிப்பீட்டைவிட 6.17% என குறைந்து போனது. எனவே, இது இறுதியான கணிப்பு அல்ல.
இவர்களுக்கு சாதகமான ஒரு புள்ளிவிபரம் வந்தவுடன், 2030-ல் இவர்கள் கூறியபடி தமிழ் நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டிவிடும் என்று போலியாக பெருமைப்படுகிறார்கள். 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது, இவர்கள் தெரிந்தே மக்களை ஏமாற்றுவதற்குக் கூறும் மாபெரும் பொய். இந்தியாவின் பொருளாதார வல்லுநர் டாக்டர் இரங்கராஜன், தமிழ் நாட்டின் வளர்ச்சி நிலையை ஆராய்ந்து வருபவர். தொடர்ந்து 14% வளர்ச்சி பெற்றால் தான் 2030-ஆம் அண்டு தமிழ் நாடு அரசு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட முடியும் என்று கூறி இருக்கிறார். ஆனால், விடியா திமுக ஆட்சியில் 2021-22 வளர்ச்சி விகிதம் 7.89% 2022-23ல் 6.17% 2023-24 9.26% 2024-25ல் கணிப்பு 1119%
2023-24, 2024-25 புள்ளி விபரங்கள் பின் கணிப்புகளில் மாறலாம். இந்த நிலையில் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எப்படி எட்ட முடியும்? ஆனால், திமுக அரசு தைரியமாக இந்தப் பொய்யை தொடர்ந்து சொல்லி வருகிறது. இப்படி பொய் பேசி மக்களை மயக்கி ஏமாற்றுவதே இவர்களின் வாடிக்கை. நீட்' தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்பது போல் ஒரு டிரில்லியன் பொருளாதார ரகசியம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
பொருளாதார புள்ளி விபரங்கள் எல்லாம் ஒரு குறியீடு மட்டும்தான். அை இறுதி நிலையை அடையும் போதுதான் உண்மை விளங்கும். உண்மையில், தமிழகத்தில்
உணவுப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர். எனவே, முதற்கட்ட, இரண்டாம் கட்ட பொருளாதார புள்ளி விபரங்களை வைத்துக்கொண்டு விளம்பரம் தேடுவதை விட்டுவிட்டு, இனியாவது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு முன்வர வேண்டும்.
ஒரு மாநில உற்பத்தி மதிப்பு என்பது விவசாயம் சார்ந்த துறைகள், தொழில் துறை. சேவைத் துறை ஆகியவற்றின் உற்பத்தி மதிப்பைக் காட்டும். தமிழ் நாடு போன்ற தொழில் மற்றும் சேவைத் தொழில் உள்ள மாநிலங்களில் உற்பத்தி மதிப்பு உயர்ந்தாலும், உண்மையான தனிமனித வருமானம் உயர்ந்ததாகக் கருத முடியாது. உதாரணமாக கார் உற்பத்தி, கைபேசி உற்பத்தி, வங்கிக் கடன், இன்சூரன்ஸ் போன்றவை அதிக மதிப்பு காட்டினாலும், அதன் பலன் மக்களை பரவலாக சென்றடையாது.
ஏனெனில், பொருளாதாரத் துறை கணக்கிடும் தனி மனித வருவாய் பொருளாதார உற்பத்தி மதிப்பை, மக்கள் தொகையால் வகுத்துப் பெறுவது ஆகும். இது, ஒரு மதிப்பீடு தான். கர்நாடகா, தெலுங்காளா போன்ற மாநிலங்களில் கூட தனிநபர் வருமானம் தமிழ் நாட்டைவிட கூடுதலாக உள்ளது. எனவே. இந்த மதிப்பீட்டின்படி தமிழ் நாட்டு மக்களின் தனிநபர் வருவாய் உண்மையில் உயர்ந்துவிட்டதா என்றால், இல்லை என்பது தாள் கள நிலவரம்
அதிக வளர்ச்சியுற்றதாகக் கூறப்படும் 2024-25ல், விவசாயம் வளர்ச்சி அடையவில்லை என்பதைவிட எதிர்மறை வளர்ச்சியே உள்ளது. உற்பத்தி தொழில் சராசரி வளர்ச்சிதான். அதிக வளர்ச்சி எந்தத் துறையில் உள்ளது என்பதைப் பார்த்தால். ஓட்டல், உணவகம், கட்டுமானம், விற்பனை மற்றும் பழுதுபார்ப்பு சேவை, போக்குவரத்து, தொலைத்தொடர்பு சேவை ரியல் எஸ்டேட் ஆகியவையே ஆகும். இந்தத் துறைகள் வளர்ச்சி அடைவதற்கு திமுக அரசு என்ன செய்துள்ளது?
கட்டுமானத் துறை வளர்ச்சிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில், சாலைகள், நீர்ப் பாசனத் திட்டங்கள் போன்றவையே காரணம். எனவே, திமுக பெருமை பீற்றிக் கொள்வதற்கு இதில் எதுவுமே இல்லை. ஆனாலும், தமிழ் நாடு இந்திய அளவில் உள்ள சராசரி வளர்ச்சியைவிட எப்போதுமே அதிக வளர்ச்சி பெற்றுவருகிறது. குறுகிய காலத்தில் இந்த வளர்ச்சியைப் பெற முடியாது. அதற்கு அடித்தளம் போட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. அதனாலேயே தமிழ் நாடு சரியில்லாமல் வளர்ச்சி பெறுகிறது.
எனவே, பொருளாதார வளர்ச்சியோ, அதன் அடிப்படையில் மதிப்பிடப்படும் தனிநபர் வருமானமோ ஒரு குறியீடுதானே தவிர, அது மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரத்தைக் காட்டும் அளவுகோலாக கருத முடியாது. எனவே, உண்மையை
ஸ்டாலின் அரசு உணர்ந்து வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து மக்கள் நலளில் கவனம் செலுத்த வேண்டும். இதைச் சொன்னால்கூட திமுக ஜால்ராக்கள், நாம் பொறாமையில் கூறுவதாகச் சொல்வார்கள். ஆனால், உண்மையை மக்களுக்கு உரக்கச் சொல்ல வேண்டியது நமது கடமை என்பதாலேயே இதனைக் கூறுகிறோம்.
உண்மையில், விவசாயிகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர். ஏனென்றால், நீர் ஆதாரம் பராமரிக்கப்படவில்லை.
விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை இல்லை.
கிராமந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி பரிதவிக்கின்றனர்.
நெசவாளர், மீனவர் என்று யாருமே நிம்மதியாக இல்லை.
எல்லா இடங்களிலும் லஞ்ச, லாவண்யம் புரையோடி இருக்கிறது. விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது.
சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். அரசு ஊழியர்கள் வெறுப்பின் விளிப்பில் உள்ளனர்.
தமிழகம் முழுக்க இந்த அரசுக்கு எதிரான ஒரு வெறுப்பு அலை வீசுவதை, என் பயணத்தில் கண் எதிரே காண முடிகிறது.
சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுக் கிடப்பதையும், திமுக-வின் ரவுடிப் பட்டாளத்தின் அட்டூழியத்தைக் கண்டும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பொய் சொல்லி விளம்பர சூட்டிங் நடத்தும் விடியா திமுக ஆட்சிக்கு விடை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.19% ஆகும்.
- தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டி இருக்கிறது.
முன்பு 9.69% என்று மதிப்பிடப்பட்ட 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதத்தை இன்று 11.19% என்று திருத்தி மத்திய அரசின் புள்ளிவிவரத்துறை மதிப்பிட்டுள்ளது.
இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்றிராத அபரிமிதமான பெரும் வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரண்டு இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு – சீரான கொள்கைநெறி வழியில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் ஒன்று, மணிமகுடத்தில் மற்றொரு பொறித்த வைரக்கல்லாகத் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டி இருக்கிறது.
ஏற்கனவே நாம் சொல்லிருக்கக்கூடிய 9.69% என்கிற அந்த GSDP உடைய இலக்கையும் தாண்டி, இன்றைக்கு 11.8% பொருளாதார குறியீடுகள் உயர்ந்து இருக்கின்றன. ஏறத்தாழ 12% நெருங்கி வரக்கூடிய வாய்ப்பை பெற்று இருக்கிறோம்.
நம்முடைய சாதனையை நாம்தான் முறியடிக்க முடியும் என்கிற வகையில் 9.69% என்ற ஒற்றை இலக்கத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சி சதவீதத்தை இன்றைக்கு இரட்டை இலக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிற மகத்தான சாதனையை மாண்புமிகு முதலமைச்சருடைய ஆட்சி உருவாக்கியிருக்கிறது.
இந்த இரட்டை இலக்கத்திலே பொருளாதார ஆட்சியை உருவாக்குவது, Real terms-ல் வளர்ச்சி பெறுவது என்பது கலைஞர் அவர்கள் ஆட்சி பொறுப்பிலே இருந்தபோது 13% வளர்ச்சியை நாம் பெற்று இருந்தோம். அதன்பின் 14 வருடத்திற்கு பிறகு இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சரின் ஆட்சியில்தான் இரட்டை இலக்க வளர்ச்சியைத் தமிழ்நாடு பெற்று இருக்கிறது.
இந்திய அளவில் பல மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடுதான் இந்த இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்று இருக்கிறது என்பது குறிப்பிட்டத்தக்கது. எனவே இந்த வளர்ச்சி என்பது 2030ஆம் ஆண்டு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம் என்பதற்கு திடமான வழியை வகுத்து தந்துள்ளது.
முதலமைச்சரின் சீரிய முயற்சிகளிலான தொழில் முதலீடுகள், தொழில் முதலீடுகள் மூலம் கிடைத்த வேலை வாய்ப்புகள் என அனைத்தின் காரணமாக இந்தப் பொருளாதார வளர்ச்சி அமைந்திருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கான முழு சூழ்நிலைகளையும் நாம் உருவாக்கி இருக்கிறோம். நாம் முதலீடுகளுக்கான முதல் முகவரி தமிழ்நாடு என்கிற அளவில் மாண்புமிகு முதலமைச்சர் முயற்சியின் காரணமாக ஈர்க்கப்பட்டு இருக்கக்கூடிய ஏராளமான முதலீடுகளே இந்தப் பெருமையைத் தந்து இருக்கிறது.
நிதி நிலைமையை நாம் சரியாகக் கையாண்டு இருக்கிறோம்; நாட்டின் பொருளாதாரத்தை நாம் உயர்த்தி இருக்கிறோம். கடன் வாங்குகிறார்கள் என குற்றச்சாட்டு வைக்கிறார்கள். ஆனால் வரைமுறைகளுக்கு உட்பட்டு முதலீடுகளுக்காக நாம் வாங்குகின்ற கடன்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒன்றிய அரசு நமக்கு உரிய நிதிகளை விடுவிக்காத போதிலும், நமது முதலமைச்சரின் கூரிய நோக்கிலான வழிகாட்டுதல் மூலம் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
- தோல் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்.
- பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டுள்ளதில் (Women IPS) தமிழ்நாடு முதலிடம்.
பொருளாதார வளர்ச்சியில் 9.69% உயர்ந்து இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
* பொருளாதார வளர்ச்சியில் 9.69%. இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்.
*ஏற்றுமதி தயார் நிலையில் தமிழ்நாடு முதலிடம்.
*தோல் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்.
*புத்தாக்கத் தொழில்கள் தரவரிசைப் பட்டியலில் 2018-ல் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு, 2022 திராவிட மாடல் ஆட்சியில் முதலிடம்.
*பெண் காவல் அதிகாரிகளைக் கொண்டுள்ளதில் (Women IPS) தமிழ்நாடு முதலிடம்.
*இந்திய அளவில் காலணிகள் மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பில் தமிழ்நாடு 38 சதவிகிதம் - முதலிடம்.
*அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம்.
*அதிக எண்ணிக்கையில் சதுப்பு நிலங்கள் (RAMSAR Sites) கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு.
*வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்.
*இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழிற்சாலைகளில் தமிழ்நாடு முதலிடம்.
*இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம்.
*தொழிற்சாலைகளில் பணிபுரியும் அதிக பெண் தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம்.
*அதிகத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்.
உலகளாவிய திறன் மையங்களில் மும்பை, புனே, ஐதராபாத், பெங்களூரூ முதலான நகரங்களைவிட சென்னை 24.5 சதவிகித வளர்ச்சியுடன் 94,121 திறன் மையங்கள் கொண்டு இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது!
- ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்!
2024-25 நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69% என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது!
அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது.
அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது.
ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது
- கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இதுவே மிக அதிகமாகும்.
2024-25 நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69% என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் இருந்து தெரிய வருகிறது.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இதுவே மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும்.
இதற்கு முன்பு அதிகபட்சமாக 2017 - 18 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.59% ஆக இருந்தது.
கொரோனா நோய்த்தொற்றால் 2020 - 21 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 0.07% என்ற மிக குறைவான அளவில் இருந்தது.
2024 இல் மதிப்பிடப்பட்ட மாநில உள்நாட்டு உற்பத்தி 5.15,71,368 கோடி. 2025 இல் மதிப்பிடப்பட்ட மாநில உள்நாட்டு உற்பத்தி 5.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது.
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சி இனியும் தொடருமேயானால், 2032 இல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கை தமிழ்நாடு எட்டும்
உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த இடங்களில் ஆந்திரா 8.21%, ராஜஸ்தான் 7.82%, அரியானா 7.55% ஆகிய மாநிலங்கள் உள்ளன.
- 2022-ம் ஆண்டில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு 17.94 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
- இந்த தகவலை சீனாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ளது.
பீஜிங் :
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், உலக பொருளாதார வளர்ச்சியை பதம் பார்த்தது.
இதில் உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடான சீனாவும் தப்பவில்லை.
அங்கு கடந்த 2022-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீத அளவுக்கு சுருங்கிப்போய் விட்டது.
இது கடந்த 50 ஆண்டுகளில் காணப்பட்டுள்ள 2-வது மோசமான பொருளாதார வளர்ச்சி ஆகும்.
2022-ம் ஆண்டில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு 17.94 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி ஆகும்.)
இது அதிகாரப்பூர்வமான இலக்கான 5.5 சதவீதத்திற்கு குறைவு ஆகும்.
இந்த தகவலை சீனாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ளது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிக மோசமான சரிவைக் கண்டிருப்பதற்கு காரணம், அங்கு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு 'ஜீரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் கொண்டு வந்த கடுமையான கட்டுப்பாடுகளும், பொதுமுடக்கமும்தான்.
சீனாவில் 1974-ம் ஆண்டு மிகக்குறைந்த அளவாக 2.3 சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது நினைவுகூரத்தக்கது.
- இந்தியா வளர்ந்து வருகிறது.
- மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது.
டாவோஸ் :
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேட்டி அளித்தார்.
அப்போது, சர்வதேச பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பதில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா என்று இப்போதே சொல்ல முடியாது. ஏனென்றால், தற்போதைய நிலையில் இந்தியா மிகவும் சிறிய பொருளாதாரத்தை கொண்டது. இருப்பினும், அது உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருப்பதால், நிலைமை மாறலாம். இந்தியா வளர்ந்து வருகிறது. மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது.
சீன பொருளாதாரம் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மீண்டு எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், சர்வதேச பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாஷிங்டனில் சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் நடந்த ஒரு அமர்வில் பங்கேற்றார்.
- இந்தியப்பொருளாதாரம் நல்ல நிலையில் செல்கிறது.
வாஷிங்டன் :
அமெரிக்காவில் நடைபெறுகிற சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.அவர் வாஷிங்டனில் சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடந்த ஒரு அமர்வில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசும்போது, "நடப்பு நிதி ஆண்டில் மிக வேகமாக வளர்ந்து வருகிற பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கணித்துள்ளன. இந்தியப்பொருளாதாரம் நல்ல நிலையில் செல்கிறது. நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி பார்த்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.
- பொருளாதார வளர்ச்சியில் 10-வது இடத்தில் இருந்து வந்த இந்தியா பா.ஜ.க.வின் 9 ஆண்டு ஆட்சி காலத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
- சிறு தொழில் முனைவோருக்காக வழங்கப்படும் முத்ரா கடன் வழங்கப்பட்டதன் மூலம் 76 லட்சம் பேர் புதிய வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் மத்திய இணை மந்திரி வி.கே. சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
கடந்த 2014-ல் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தது. ஆனால் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இந்த 9 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் புதியதாக கொண்டு வரப்பட்டுள்ளது.
கன்னியாகுமாரியில் புதிய விமான நிலையம் அமைப்பதில் தொழில்நுட்ப பிரச்சனைகள் இருக்கிறது. அது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். காரைக்குடியிலும் விமான நிலைய அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலைய விரிவாக்கம், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், மதுரை விமான நிலைய விரிவாக்கம் போன்றவை நடந்து வருகிறது.
இந்தியா பொருளாதார வளர்ச்சி, அரசியல் மேம்பாடு மற்றும் சமுதாய மேம்பாட்டில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. 2014-ல் இருந்ததைவிட இந்தியா கடந்த 9 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி உள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் 10-வது இடத்தில் இருந்து வந்த இந்தியா பா.ஜ.க.வின் 9 ஆண்டு ஆட்சி காலத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த 2015-ல் 428 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலை மாறி இந்த 9 ஆண்டுகளில் 86 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளது. புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. டிஜிட்டல் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியை எட்டி வருகிறது.
80 கோடி பேருக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ விதம் கொரோனா காலத்தில் இருந்து தற்போது வரை தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு வேலை வாய்ப்பு வழங்குவதை விளம்பரப்படுத்துவ தில்லை. 4 சதவீதம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்க முடியும். மீதம் உள்ள நபர்களுக்கு தனியார் மூலமாக வேலை வாய்ப்புகள் வழங்க முடியும்.
ஒரு வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தோம். ஆனால் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறு தொழில் முனைவோருக்காக வழங்கப்படும் முத்ரா கடன் வழங்கப்பட்டதன் மூலம் 76 லட்சம் பேர் புதிய வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட கூடுதல் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு மட்டுமே நிதி ஒதுக்குகிறது. பணிகள் முழுவதும் மாநில அரசால் செய்யப்படுகிறது. இந்த பணிகளில் தவறு மற்றும் குறைபாடு இருந்தால் மத்திய அரசு அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்.
தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க பொதுமக்கள் அமைப்புகளாக கூடி கழிவுகள் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு முயற்சித்தால் மட்டும் தாமிரபரணி நதியில் கழிவுகள் கலப்பதை தடுக்க முடியாது, பொதுமக்களும் ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் தயா சங்கர் உடன் இருந்தார்.
- தி.மு.க.வில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நடந்து கொண்டு இருக்கிறது.
- மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் பேரிடர் மீட்பு நிவாரண நிதியாக ரூ.813 கோடி வழங்கி உள்ளது.
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை நேற்று மாலை தொடங்கினார்.
அவருக்கு வழிநெடுகிலும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் அண்ணாமலை பேசுகையில்:-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகளில் நம் நாடு மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.

தி.மு.க.வில் உள்ள 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் கோர்ட்டுகளில் நடந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு திருக்குறள், தமிழ் மொழி இருக்கைகள், காசி தமிழ் சங்கம், 46 சங்க இலக்கியங்கள் என மொழி பெயர்ப்புக்கு ரூ. 700 கோடி செலவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் தமிழை புகுத்தி வருபவர் பிரதமர் மோடி.
வருகிற தேர்தலில் பா.ஜனதா ஆட்சி அமைத்து கும்பகோணம் மகாமகத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்தியா முழுவதும் ஒரு கோடி மக்கள் திரண்டு மகாமக விழாவை சிறப்பாக நடத்துவோம்.
மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் பேரிடர் மீட்பு நிவாரண நிதியாக ரூ.813 கோடி வழங்கி உள்ளது. நடப்பாண்டில் மத்திய அரசு மேலும் ரூ. 900 கோடி வழங்கி உள்ளது. மொத்தம் ரூ. 1,713 கோடி செலவு செய்யப்படாமல் தமிழக அரசு கணக்கில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பொருளாதார வளர்ச்சியில் 5-வது நிலையை எட்டி உள்ளோம்.
- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும் போது பல நிலைகளில் நம் நாடு முன்னேறி உள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழ் சேவா சங்கம் சார்பில் தமிழர் திருவிழா, கிராமப்புற பொருளாதார மேம்பாடு, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வீடு வழங்குதல் மற்றும் மீனவர் மேம்பாட்டு திட்டம் வழங்கும் விழா நாகை பொரவாச்சேரியில் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு முதல்கட்டமாக 25 பேருக்கு வீட்டிற்கான சாவி, 250 பேருக்கு தையல் எந்திரம் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:-

தமிழ் சேவா சங்கம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல், மகளிருக்கு தையல் எந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த பணிகள் தொடர வேண்டும்.
நான் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு சென்றேன். பூர்வகுடி மக்களையும், மீனவர்களையும் சந்தித்தேன். அவர்களுடைய ஏழ்மை நிலை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலைமாற வேண்டும்.
நமது நாடு உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் 5-வது நிலையை எட்டி உள்ளோம். தமிழ்நாடும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இருந்தபோதும் இங்கு இருக்கக்கூடிய ஏழ்மை நிலையை பார்க்கும் போது வருத்தம் அளிக்கிறது. கீழவெண்மணி கிராமத்திற்கு சென்று அங்கு தியாகி பழனிவேலை சந்தித்து உரையாடினேன்.

நமது நாடு உலக அளவில் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. புதிய கோட்பாட்டின்படி மனிதர்கள் அனைவரையும், உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் பயணிக்கின்றோம்.
எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் அதன் நோக்கம். மத்தியில் உள்ள தலைமை இதை நோக்கிய வீரநடை போட்டு வருகிறது. இந்த புதிய பாரத அவதாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 35 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உள்ளனர்.
புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு இங்குள்ள பூர்வகுடி மக்களின் பங்களிப்பும், மீனவர்களின் பங்களிப்பும் முக்கியத்துவமாக உள்ளது. அப்படிப்பட்ட பங்களிப்புடன், இருந்தால் நமது நாட்டை 25 ஆண்டுகளில் நாம் முன்னேறிய நாடாக மாற்றிவிடலாம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும் போது பல நிலைகளில் நம் நாடு முன்னேறி உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களை நம் நாட்டின் முன்னேற்றத்தின் சிற்பிகளாக உருவாக்கும் பணியை ஸ்ரீதர் வேம்பு திறமையாக செய்து வருகிறார். அரசியலால் நாம் பிரச்சினைகளையும், பிரிவைவும் மட்டுமே செய்ய முடியும்.
ஆனால் சேவை செய்யக்கூடிய நல்ல உள்ளங்கள், அமைப்புகள் மூலம் தான் நமது நாட்டை முன்னேற்ற முடியும். அந்த சேவையை தமிழ் சேவா சங்கம் திறமையாக செய்து வருகிறது. இளைஞர்களின் புதிய கனவுகளுடன் புதிய தமிழ்நாட்டை படைப்போம்.
இவ்வாறு கவர்னர் ஆர்.என். ரவி பேசினார்.
- ஆண்கள் குழுக்களுக்கும்15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
- இரண்டு கறவை மாடு வாங்க தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும்.
திருப்பூர்:
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மக்கள், பொருளாதார மேம்பாட்டுக்கான கடன் உதவிகளை பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.ஆண்டு வருமானம் 3லட்சம் ரூபாய்க்கு மிகாத 18 முதல் 60 வயது வரையுள்ள நபர்களில், குடும்பத்தில் ஒருவர் மட்டும் பயன்பெறலாம்.
பொதுகால கடன், தனிநபர் கடன் திட்டத்தில், அதிகபட்சமாக 15 லட்சம் வரையிலும் பெண்கள், 2 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் பெறலாம்.மகளிர் திட்ட அலுவலரால் தர ஆய்வு செய்த 6 மாதங்களுக்கு மேலாக இயங்கும் மகளிர் குழுக்களுக்கு 15 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும்.
இதேபோல்ஆண்கள் குழுக்களுக்கும்15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.குழுவில் அதிகபட்சமாக 20 பேர் வரை இருக்கலாம்.
இரண்டு கறவை மாடு வாங்க தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும்.பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்கங்களில் விண்ணப்பித்தை பெற்றுபூர்த்தி செய்து கூட்டுறவு சங்கங்களில் ஒப்படைக்கலாம்.
இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் 0421 2999130 என்ற எண்களிலும்,dbcwotpr@gmail.comஎன்ற இணையதளத்திலும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






