என் மலர்
நீங்கள் தேடியது "ரகுராம் ராஜன்"
- அமெரிக்காவை நம்ப முடியாது.
- சோவியத் யூனியன் இந்தியாவுக்கு உதவியது.
மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார். வர்த்தக பதட்டங்களை தவிர்க்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான மிகவும் பாராட்டப்பட்ட நட்பு எங்கே? என்று பொருளாதார நிபுணரும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பினார்.
சிகாகோ கவுன்சில் ஆன் குளோபல் அஃபேர்ஸ் நடத்திய உரையாடலில் பேசிய ரகுராம் ராஜன், "கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கி வருவதாக நான் நினைக்கிறேன். அது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. அமெரிக்கா, இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துவிட்டு, பாகிஸ்தானுக்கு 19 சதவீத வரி மட்டுமே விதிக்கிறது. அப்படியெனில் மோடிக்கும் டிரம்பிற்கும் இடையே பாராட்டப்பட்ட நட்பு எங்கே?
அமெரிக்காவை நம்ப முடியாது. 1970களில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கிஸ்ஸிங்கரும் 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானின் பக்கம் சாய்த்தனர். அவர்கள் போரை நிறுத்தவும், பாகிஸ்தானுக்கு உதவவும் ஏழாவது கடற்படையை அனுப்பினர். அதனால் இந்தியர்கள் மிகவும் கோபமடைந்தனர். அப்போது சோவியத் யூனியன் இந்தியாவுக்கு உதவியது. அது இந்தியாவை 25 ஆண்டுகளாக சோவியத் முகாமில் வைத்திருந்தது" என்று தெரிவித்தார்.
- இன்றைய உலக ஒழுங்கில் வர்த்தகம், முதலீடு மற்றும் நிதி ஆகியவை ஆயுதமயமாக்கப்பட்டுள்ளன.
- இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரிகள் வருத்தத்தை அளிக்கிறது.
இந்தியா உள்பட 70 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கடந்த 1-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக வரிகளை உயர்த்தினார். இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது.
மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி 27-ந்தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்தது. அதன்படி, இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி நேற்று அமலுக்கு வந்தது.
50 சதவீத வரிவிதிப்பு காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், தோல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், விலங்கு பொருட்கள், ரசாயனங்கள், மின்சார எந்திரங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
மொத்தம் 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில்,
இன்றைய உலக ஒழுங்கில் வர்த்தகம், முதலீடு மற்றும் நிதி ஆகியவை ஆயுதமயமாக்கப்பட்டுள்ளன. இந்தியா கவனமாக நடக்க வேண்டும்.
இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரிகள் வருத்தத்தை அளிக்கிறது. எந்தவொரு ஒற்றை வர்த்தக கூட்டாளியையும் சார்ந்திருப்பதை குறைக்க இந்தியாவுக்கு இது ஒரு தெளிவான விழிப்புணர்வு அழைப்பு.
நாம் எந்த ஒரு நாட்டையும் பெரிய அளவில் சார்ந்து இருக்கக்கூடாது. கிழக்கு, ஐரோப்பா, ஆப்பிரிக்காவைப் பார்த்து, அமெரிக்காவுடன் தொடர்வோம். ஆனால் நமது இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதற்குத் தேவையான 8–8.5% வளர்ச்சியை அடைய உதவும் சீர்திருத்தங்களை கட்டவிழ்த்து விடுவோம்.
ரஷியாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பான தனது கொள்கையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- இந்தியா வளர்ந்து வருகிறது.
- மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது.
டாவோஸ் :
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேட்டி அளித்தார்.
அப்போது, சர்வதேச பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பதில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா என்று இப்போதே சொல்ல முடியாது. ஏனென்றால், தற்போதைய நிலையில் இந்தியா மிகவும் சிறிய பொருளாதாரத்தை கொண்டது. இருப்பினும், அது உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருப்பதால், நிலைமை மாறலாம். இந்தியா வளர்ந்து வருகிறது. மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது.
சீன பொருளாதாரம் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மீண்டு எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், சர்வதேச பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2023-ம் ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கும், மற்ற உலக நாடுகளுக்கும் கடினமானதாக இருக்கும்.
- வளர்ச்சிக்கு தேவையான சீர்திருத்தங்களை உருவாக்க நாடு தவறிவிட்டது.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வருகிறார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்று காஷ்மீரில் முடிவடைய உள்ளது. யாத்திரையின் போது பல்வேறு பிரபலங்களும், முன்னாள் அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற யாத்திரையின் போது ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பங்கேற்று கலந்துரையாடினார்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்ற ரகுராம் ராஜனிடம், ராகுல் காந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், ராகுல் காந்தி எந்த வகையிலும் பப்பு அல்ல.
அவரை பற்றிய இமேஜ் துரதிர்ஷ்டவசமானது என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு புத்திச்சாலி, இளைஞர், ஆர்வமுள்ள மனிதர். முன்னுரிமைகள் என்ன, அடிப்படை அபாயங்கள் மற்றும் அவற்றை மதிப்பிடும் திறன் ஆகியவற்றை நன்கு புரிந்து கொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ராகுல் காந்தி அதை செய்யக்கூடிய திறன் கொண்டவர் என்று நான் நினைக்கிறேன் என்றார். தொடர்ந்து பொருளாதாரம் குறித்து அவர் கூறியதாவது:-
2023-ம் ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கும், மற்ற உலக நாடுகளுக்கும் கடினமானதாக இருக்கும். வளர்ச்சிக்கு தேவையான சீர்திருத்தங்களை உருவாக்க நாடு தவறிவிட்டது.
கொரோனா தொற்று நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள கீழ் நடுத்தர வர்க்கத்தை மனதில் வைத்து கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
சீனாவுடன் ஒப்பிடும் போது இந்திய பொருளாதாரம் சிறியது. எனவே உலக பொருளாதாரத்தில் சீனாவின் இடத்தை இந்தியா வகிக்கும் என்ற விவாதம் முதிர்ச்சியற்றது. ஏற்கனவே 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா தொடர்ந்து எழுச்சி காணும் போது குறிப்பிட்ட காலங்களில் இந்நிலை மாறலாம் என்றார்.






