என் மலர்tooltip icon

    சுவிட்சர்லாந்து

    • உக்ரைன் ஒரு முடிவில்லாத சுழற்சியில் சிக்கிக்கொண்டுள்ளது
    • இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் இருப்பதாக டிரம்ப கூறியுள்ளார்.

    நேட்டோ நாடுகளுடன் சேர முயற்சித்த உக்ரைனால் தங்களுக்கு ஆபத்து என கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.

    தீர்வு எட்டப்படாமல் நான்கு ஆண்டுகளை கடந்து உக்ரைன் -ரஷியா போர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்றத்துமுதல் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் போரை நிறுத்த பல முயற்சிகளை செய்து வருகிறார்.

    அமெரிக்காவின் அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை கடந்த ஆகஸ்டில் சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் முடிவு எட்டப்படவில்லை.

    இதற்கிடையே கடந்த ஜனவரி 19 முதல் சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடந்து வரும் நிலையில் நேற்று இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.

    அங்கு வைத்து அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து ஜெலன்ஸ்கி போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதல் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளதாக ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

    இதன்படி, அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய மூன்று நாடுகளும் முதன்முறையாக நேரடியாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    முன்னதாக மாநாட்டில் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைன் ஒரு முடிவில்லாத சுழற்சியில் சிக்கிக்கொண்டுள்ளது என்றும் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, போரை நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் சாடினார்.

    மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது என்றும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் இருப்பதாக டிரம்ப கூறியுள்ளார்.

    இதற்கிடையே அமெரிக்காவின் சிறப்புத் தூதர்கள் இருவர் மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கு மத்தியில் உக்ரைனின் தென்கிழக்குப் பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

    • காசா போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
    • இதில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    டாவோஸ்:

    இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.

    இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள் இணைந்துள்ளனர்.

    காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், டிரம்ப் அமைத்த காசா அமைதி வாரியத்தை இந்தியா புறக்கணித்து விட்டது.

    • சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது.
    • பிரதமர் மோடி ஒரு அற்புதமான மனிதர், எனது நண்பர்.

    சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பேசினார்.

    அப்போது செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், தனது நண்பர் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவருடன் நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    உங்கள் பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் ஒரு அற்புதமான மனிதர், எனது நண்பர். எங்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம் ஏற்படப் போகிறது என்று கூறினார்.

    இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • கிரீன்லாந்து மக்கள் எங்களுக்கு நன்றி உணர்வுடன் இல்லை.
    • கிரீன்லாந்தை எங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்றார்.

    லாவோஸ்:

    சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    கிரீன்லாந்தை எங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும். வேறு யாராலும் கிரீன்லாந்தை பாதுகாக்க முடியாது. கிரீன்லாந்தை நாங்கள் பாதுகாத்து அதனை டென்மார்க்கிடம் வழங்கினோம். இது நாங்கள் செய்த முட்டாள்தனம். இப்போது கிரீன்லாந்து மக்கள் எங்களுக்கு நன்றி உணர்வுடன் இல்லை. கிரீன்லாந்துக்கு எதிராக படைபலத்தை பயன்படுத்த மாட்டேன்.

    அமெரிக்க அதிபர்கள் கடந்த 2 நூற்றாண்டாக கிரீன்லாந்தை வாங்க முயன்று வருகின்றனர். பனியால் சூழப்பட்ட இந்த மாபெரும் நிலப்பரப்பை எங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும். இது நேட்டோவுக்கான மிரட்டல் அல்ல. நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒன்றை யாராலும் மறுக்க முடியாது.

    நாங்கள் நேட்டோவிற்கு எவ்வளவு கொடுக்கிறோம். ஆனால் அதற்கு பதிலாக குறைந்த அளவில் தான் நேட்டோவிடம் இருந்து பலன் பெறுகிறோம். நான் பல ஆண்டுகளாக நேட்டோவை எதிர்க்கும் விமர்சகராக இருந்து வருகிறேன். ஆனாலும், வேறு எந்த அதிபரையும் விட நான் நேட்டோவிற்கு அதிகமாக அள்ளிக் கொடுத்துள்ளேன் என தெரிவித்தார்.

    • இந்தியாவில் தற்போது 164 விமான நிலையங்கள் உள்ளன.
    • அடுத்த 5 ஆண்டில் 50 விமான நிலையம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    டாவோஸ்:

    சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு மாநில முதல் மந்திரிகளும் பங்கேற்று வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரியான ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    விக்சித் பாரத் என்ற நீண்டகால தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக வரும் 2047-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 350 விமான நிலையங்களைக் கட்ட மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. ஆனால், இந்தியாவில் தற்போது 164 விமான நிலையங்கள் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது 50 விமான நிலையங்கள் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    2047-ம் ஆண்டுக்குள் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே எங்கள் இலக்கு. கடந்த 11 ஆண்டுகளில், பெரிய நகரங்களில் மட்டுமின்றி நாட்டின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் 88 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

    2047 விக்சித் பாரத இலக்கை அடைய விமானப் போக்குவரத்து மிக முக்கியமான துறையாகும். நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சித் துறை சிவில் விமானப் போக்குவரத்து என்பதை நாங்கள் காண்கிறோம்.

    சிவில் விமானப் போக்குவரத்தில் மாநிலங்களை வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். வரும் நாட்களில் மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்குவோம் என தெரிவித்தார்.

    • உலகப் பொருளாதார மன்ற கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது.
    • இதில் ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    டாவோஸ்:

    சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய ஆணைய தலைவரான உர்சுலா வான் டெர் லேயன் பேசியதாவது:

    இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்கு இன்னும் சில பணிகள் உள்ளன. ஆனால், நாங்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விளிம்பில் உள்ளோம்.

    சிலர் இதை அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என அழைக்கிறார்கள். இது 200 கோடி மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும். இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்குக்குச் சமம்.

    இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத்தைப் பல்வகைப்படுத்தும்.

    உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்தும் என தெரிவித்தார்.

    இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணைய தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அப்போது, இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிலர் பட்டாசு வெடித்தனர்.
    • இதனால் ஏற்பட்ட தீப்பொறி பறந்து அந்த விடுதி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.

    பெர்ன்:

    சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட தீப்பொறி பறந்து அந்த விடுதி கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. தீ விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள பாரில் நிகழ்ந்தது.
    • தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நள்ளிரவு 1:30 மணியளவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது அந்த பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 100 கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சுவிஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என கூறப்படுகிறது.

    வெடிப்புக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் காரணமாக இருக்கலாம் எனச் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள பாரில் நிகழ்ந்தது.
    • தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நள்ளிரவு 1:30 மணியளவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது அந்த பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் சுவிஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என கூறப்படுகிறது.

    வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இசை நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பபடுகிறது.   

    • சுவிட்சர்லாந்தின் கருத்துகள் மேலோட்டமான தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.
    • சுவிட்சர்லாந்து இனவெறி, திட்டமிட்ட பாகுபாடு மற்றும் வெளிநாட்டவர் வெறுப்பு போன்ற அதன் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்

    ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சுவிட்சர்லாந்து தெரிவித்த கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

    கூட்டத்தில் பேசிய சுவிட்சர்லாந்து பிரதிநிதி, இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த ஐநாவுக்கான இந்திய தூதரகத்தின் ஆலோசகர் க்ஷிதிஜ் தியாகி, சுவிட்சர்லாந்தின் கருத்துகள் மேலோட்டமான தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டது என்று கூறினார்.

    மேலும், "ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவராக சுவிட்சர்லாந்து, வெளிப்படையாக தவறான மற்றும் இந்தியாவின் யதார்த்தத்திற்கு பொருந்தாத கதைகளால் சபையின் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    சுவிட்சர்லாந்து இனவெறி, திட்டமிட்ட பாகுபாடு மற்றும் வெளிநாட்டவர் வெறுப்பு போன்ற அதன் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று தியாகி தெரிவித்தார். 

    • நெஸ்லே சி.இ.ஓ. லாரன்ஸ் பிரெக்சி அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
    • இவர் கடந்த 40 ஆண்டுக்கு மேலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெர்ன்:

    சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனம் நெஸ்லே. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்து வருபவர் லாரன்ஸ் பிரெக்சி.

    விதிமுறைகளுக்கு மாறாக நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருடன் சி.இ.ஓ. ரகசிய உறவு வைத்திருந்ததாக புகார் எழுந்தது. நிறுவனம் நடத்திய விசாரணையில் ஊழியர் உடனான ரகசிய உறவு தெரிய வந்தது.

    இந்நிலையில், சி.இ.ஓ. லாரன்ஸ் பிரெக்சியை அதிரடியாக பதவிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து, பிலிப் நவ்ராட்டில் புதிய தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    • டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
    • இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.01 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.

    சூரிச்:

    டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்று சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இன்று நடைபெற்றது.

    இதில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரு பதக்கம் வென்று தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா களமிறங்கினார். இறுதிச்சுற்றில் ஜூலியன் வெபர், முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஜூலியஸ் யெகோ மற்றும் கெஷோர்ன் வால்காட் ஆகியோர் களமிறங்கினர்.

    இந்நிலையில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.01 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.

    ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.51 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். டிரின்பாகோவைச் சேர்ந்த கெஷோர்ன் வால்காட் 3வது இடம் பிடித்தார்.

    ×