என் மலர்
நீங்கள் தேடியது "டொனால்ட் டிரம்ப்"
- இங்கிலாந்து பிரதமருடன் டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
- அமெரிக்கா-இங்கிலாந்து இடையே இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாள் பயணமாக வருகிற 16-ந்தேதி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் இளவரசர் வில்லியம், இளவரசி மிடில்டன் ஆகியோரை டிரம்ப் சந்திக்கிறார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் அமெரிக்கா-இங்கிலாந்து இடையே இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு டிரம்ப் அதிக வரி விதிக்க தொடங்கினார்.
- அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் வர்த்தக போர் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்க பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து அவர் அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க தொடங்கினார். இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்தது. இதனால் அமெரிக்கா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் தொடங்கியது.
அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எரிபொருள், உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை வளர்ந்து வரும் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் எதிர்கொண்டுள்ளன.
இதற்கிடையே ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய வரி விதிப்பை இரு நாடுகளும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன.
இந்நிலையில், சீனாவிற்கான பரஸ்பர வரிவிதிப்பிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் 90 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்துள்ளார்.
இதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- மாணவர் விசாவில் அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் மீதும் கெடுபிடிகள் காட்டப்பட்டு வருகின்றன.
- விசா காலத்தை கடந்து எந்த வெளிநாட்டினரும் தங்கக்கூடாது என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.
நியூயார்க்:
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற டிரம்ப், சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதில் தீவிரமாக இருக்கிறார். சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்தல், நாடு கடத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாணவர் விசாவில் அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் மீதும் கெடுபிடிகள் காட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்காலிக பயணமாக அமெரிக்கா செல்பவர்கள் ரூ.13 லட்சம் வரை டெபாசிட் செலுத்தினால்தான் விசா வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை விரைவில் சோதனை முறையில் டிரம்ப் அரசு அமல்படுத்தப்பட உள்ளது.
கடந்த 2023-ம் நிதியாண்டுக்கான அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிக்கையில், அந்த ஆண்டில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் விசா காலத்தை தாண்டி, அமெரிக்காவில் தங்கி இருந்ததாக கூறப்பட்டுள்ளது. எனவே, விசா காலத்தை கடந்து எந்த வெளிநாட்டினரும் தங்கக்கூடாது என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.
- இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது உலகம் முழுவதுக்கும் தெரியும்.
- பிரதமர் மோடி அதானி என்ற ஒரு நபருக்காக மட்டுமே பணியாற்றுகிறார்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், இந்தியப் பொருளாதாரம் இறந்து விட்டது என்று டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்யாவுடனான இந்திய உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே அதிகம். நாங்கள் அவர்களுடன் பெரிய அளவில் வணிகம் வைத்துக் கொண்டதில்லை. ரஷ்யாவுடனும் அமெரிக்கா வணிக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்ற டிரம்பின் கருத்து குறித்து பேசிய ராகுல் காந்தி, "டிரம்ப் சொல்வது சரிதான், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் இது தெரியும். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஜனாதிபதி டிரம்ப் ஒரு உண்மையை கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது உலகம் முழுவதுக்கும் தெரியும். பிரதமர் மோடி அதானி என்ற ஒரு நபருக்காக மட்டுமே பணியாற்றுகிறார். அதானிக்கு உதவ பாஜக இந்திய பொருளாதாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
எங்களிடம் ஒரு சிறந்த வெளியுறவுக் கொள்கை உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகிறார். ஒருபுறம், அமெரிக்கா உங்களை துஷ்பிரயோகம் செய்கிறது. மறுபுறம், சீனா உங்கள் பின்னால் உள்ளது. நீங்கள் உங்கள் குழுவை உலகிற்கு அனுப்பியபோது, எந்த நாடும் பாகிஸ்தானைக் கண்டிக்கவில்லை.
பிரதமர் மோடி தனது உரையில் டிரம்ப், சீனாவின் பெயரை கூட சொல்லவில்லை. இந்த பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தானின் இராணுவத் தலைவர், ஜனாதிபதி டிரம்ப் அவருடன் மதிய உணவு அருந்துகிறார். நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்" என்று கூறினார்
இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் 30-32 முறை கூறியுள்ளார். 5 இந்திய ஜெட் விமானங்கள் வீழ்ந்ததாகவும் அவர் கூறினார். டிரம்ப் இப்போது இந்திய பொருட்களுக்கு 25% வரிகளை விதிப்பதாகக் கூறுகிறார். இதற்கு பிரதமர் மோடி ஏன் பதில் அளிக்க முடியவில்லை? உண்மையான காரணம் என்ன? யார் கையில் அதிகாரம் உள்ளது?
பாஜக அரசாங்கம் நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையை அழித்துவிட்டது" என்று தெரிவித்தார்.
- இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்
- ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், இந்தியப் பொருளாதாரம் இறந்து விட்டது என்று டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்யாவுடனான இந்திய உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே அதிகம். நாங்கள் அவர்களுடன் பெரிய அளவில் வணிகம் வைத்துக் கொண்டதில்லை. ரஷ்யாவுடனும் அமெரிக்கா வணிக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.
- ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.
டிரம்பின் புதிய வரி விதிப்பால் எந்தத் துறைக்கு பாதிப்பு?
இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் 25% வரி விதிப்பால் வேளாண்மை, ஜவுளி, மின்னணு, ஆபரணங்கள் உள்பட பல முக்கியத் துறைகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் ஐபோன்களில் 44% இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகிறது. வரிவிதிப்பால் நாட்டில் செல்போன் உற்பத்தித் துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
- இந்திய நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வர்த்தகம் செய்ததாகக் கூறி 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது
அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்ட இந்திய நிறுவனங்கள் :
1. அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
2. குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட்
3. ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட்
4. ராம்னிக்லால் எஸ் கோசாலியா & கோ
5. பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட்
6. காஞ்சன் பாலிமர்ஸ்
- பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
- ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய டிரம்ப், பாகிஸ்தான் நாட்டுடன் நாங்கள் ஒப்பந்தம் ஒன்றை முடிவு செய்துள்ளோம். இதன்படி, பாகிஸ்தானிலுள்ள பெரிய அளவிலான எண்ணெய் இருப்புகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியை இணைந்து மேற்கொள்ள போகிறோம். இதற்காக எண்ணெய் நிறுவனம் தேர்வு செய்யும் நடைமுறையில் ஈடுபட்டு இருக்கிறோம்.
யாருக்கு தெரியும், ஒரு நாள் இந்தியாவுக்கு கூட பக்ஷிதன் எண்ணெயை விற்பனை செய்ய கூடும் என்று டிரம்ப் கிண்டலாக கூறினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்று தொடர்ந்து டிரம்ப் கூறி வரும் நிலையில், பாகிஸ்தானுடன் அமெரிக்கா கைகோர்த்துள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது.
- இரு நாடுகளின் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர்.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் வர்த்தக போர் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்க பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து அவர் அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க தொடங்கினார். இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்தது. இதனால் அமெரிக்கா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் தொடங்கியது.
அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எரிபொருள், உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை வளர்ந்து வரும் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் எதிர்கொண்டுள்ளன.
இதற்கிடையே ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய வரி விதிப்பை இரு நாடுகளும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன.
மேலும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டது என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே இரு நாடுகளின் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
இதுபற்றி குறிப்பிட்ட டிரம்ப், உரையாடல் மிக நேர்மறையாக நடந்து முடிந்தது என்றார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மந்திரிசபையின் பிரதிநிதிகள் வருகிற 9-ந்தேதி லண்டனில் சீன மந்திரிசபை பிரதிநிதிகளை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் வருகிற 9-ந்தேதி லண்டனில் சீன பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டம் மிக சிறப்பாக நடக்க வேண்டும்.
இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
- இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம்
- சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம்.
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் இரு பேச்சு வார்த்தையை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம். வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் அறிவித்தார் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம்
- சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம்.
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் இரு பேச்சு வார்த்தையை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம். வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், வர்த்தகத்தை நிறுத்திவிடுவேன் எனக் கூறி இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், "ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதில் இருந்து இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க மற்றும் இந்திய தலைவர்கள் இடையே அவ்வப்போது உரையாடல் நடந்தது. ஆனால் அவற்றில் வர்த்தகம் தொடர்பான பேச்சே எழவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், "பாகிஸ்தான் தீவிரவாதத்தை தொழிற்சாலைகளில் வளர்ப்பது போல் வளர்த்தெடுத்து வருகிறது; பாகிஸ்தான் தனது தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரையில் சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
- ஜம்மு- காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற ட்ரோன்கள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ட்ரோன்கள் ஊடுருவ முயன்ற நிலையில் ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் குறித்து இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் (DGMO) இடையேயான பேச்சுவார்த்தை இன்று மாலை நடந்தது.
அதில், இரு தரப்பிலும் இருந்து ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை தொடர்வது குறித்து பேசப்பட்டு, இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
எல்லைகளில் படை வீரர்களைக் குறைப்பதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை பரிசீலிப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஜம்மு- காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற ட்ரோன்கள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்ரோன்கள் ஊடுருவ முயன்ற நிலையில் ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் வெடிச் சத்தம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நிலையில் ட்ரோன்கள் ஊடுவருவல் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.