6 இந்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்திய நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது
6  இந்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
Published on

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வர்த்தகம் செய்ததாகக் கூறி 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது

அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்ட இந்திய நிறுவனங்கள் :

1. அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்

2. குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட்

3. ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட்

4. ராம்னிக்லால் எஸ் கோசாலியா & கோ

5. பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட்

6. காஞ்சன் பாலிமர்ஸ்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com