என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vikram misri"

    • இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம்
    • சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம்.

    காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

    இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் இரு பேச்சு வார்த்தையை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இந்தியா -பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முடிவு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம். வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் அறிவித்தார் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது.

    இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • இதற்குப் பாகிஸ்தான் தான் பொறுப்பு.
    • மீண்டும் மீண்டும் நிகழும் மீறல்களை அதிக பலத்துடன் கையாளுவோம்.

    பாகிஸ்தான் இந்தியா இடையே நிலவிய மோதல் இன்று மாலை சண்டை நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் பகுதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இதுகுறித்து நடத்திய அவசர செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே இன்று மாலை ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் கடந்த சில மணி நேரங்களாக இந்தப் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி வருகிறது.

    இந்திய ராணுவம் இந்த தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது, இதற்குப் பாகிஸ்தான் தான் பொறுப்பு.

    பாகிஸ்தான் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், நிலைமை குறித்து ராணுவம் மிகுந்த விழிப்புடன் உள்ளது. மேலும் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டில் மீண்டும் மீண்டும் நிகழும் மீறல்களை அதிக பலத்துடன் கையாள ராணுவத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.

    • பாகிஸ்தானின் தாக்குதல்களை தடுத்ததுடன் இந்தியா தகுந்த பதிலடியும் அளித்து வருகிறது.
    • பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் மட்டுமே நடத்தி வருகிறது.

    பாகிஸ்தான் நேற்றிரவு பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களை குறிவைத்து தாக்கியது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் அதிக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்தது.

    இந்த நிலையில் இன்று காலை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    * பாகிஸ்தானின் செயல்தான் ஆத்திரமூட்டல் மற்றும் தீவிரப்படுத்தலை உருவாக்கியது:

    * பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது.

    * பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் வெளிப்படையாக தாக்குதல் நடத்தியது.

    * பாகிஸ்தானின் தாக்குதல்களை தடுத்ததுடன் இந்தியா தகுந்த பதிலடியும் அளித்து வருகிறது.

    * பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் மட்டுமே நடத்தி வருகிறது.

    இவ்வாறு விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

    • உலகில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் பாகிஸ்தானின் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.
    • பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தான் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் இல்லமாக பாகிஸ்தான் உள்ளது. பின்லேடன் கூட பாகிஸ்தானில் தான் தஞ்சம் அடைந்திருந்தார்.

    உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் என்ற பெயரைத் தான் பாகிஸ்தான் பெற்றிருக்கிறது.

    உலகில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் பாகிஸ்தானின் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.

    பாகிஸ்தானை சேர்ந்த 2 அமைச்சர்கள் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதை போல் பேசி இருந்தனர்.

    பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தான் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் டிஎன்ஏ உள்பட முழு விவரங்களையும் பாகிஸ்தானிடம் கொடுத்துள்ளோம்.

    ஆனால், இந்தியா அளித்த ஆதாரங்களுக்கு பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    நேற்று கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் கூட சில பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்டு மரியாதை செலுத்தினர்.

    குறிப்பாக பாகிஸ்தான் கொடியை உயிரிழந்த பயங்கரவாதிகள் மீது போர்த்தி அரசு மரியாதை வழங்கப்பட்டடதையும் பார்க்க முடிந்தது. பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதை செலுத்துவது பாகிஸ்தானின் வழக்கமாக உள்ளது.

    இந்தியாவின் நோக்கம் பயங்கரவாதிகளை தாக்குவது மட்டுமே, மதம் சார்ந்த இடங்களை நாம் தாக்கவில்லை. ஆனால், பாகிஸ்தானின் குறிப்பிட்ட மத வழிபாட்டுத் தலங்களை இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.

    ஆனால், பயங்கராத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது.

    இந்தியாவின் பதில் நடவடிக்கை மீது வகுப்புவாத சாயம் பூச பாகிஸ்தான் முயற்சிக்கிறது.

    பாகிஸ்தானின் உள்நோக்கம் இந்தியாவில் வெற்றிபெற நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

    தற்போது அழிக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும், இந்திய எல்லையில் தாக்குதலுக்கு ஆளான பகுதிகளுக்கும் உறுதியான இணைப்பு உள்ளது.

    பாகிஸ்தான் பதிலடி கொடுப்பதாக கூறி எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் பொது மக்களை தான் பாதிக்கிறது.

    சிந்து நதி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இல்லை.

    தாக்குதல் தொடர்பான நுட்பமான அம்சங்களை தற்போது வெளியிட முடியாது.

    இருநாட்டு பாதுகாப்பு ஆலோசர்களும் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான தகவல் என்னிடம் இல்லை.

    அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக அமைச்சரவைக்குழு உள்ளிட்ட அமைப்புகள் சூழலை பொறுத்து முடிவு எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்தியாவின் மீதான தாக்குதல்கள் முறியடிப்பு என்றார்.
    • இந்தியாவின் தாக்குதலால் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 16 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.

    எல்லையை ஒட்டிய 15 நகரங்கள் மீதான தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.

    பாகிஸ்தான் ராணுவம் ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட 12 இடங்களில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் இந்திய ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு பதற்றம் அதிகரிக்காத வகையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.

    இந்தியாவின் ட்ரோன்களை பாகிஸ்தான் தகர்த்ததாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது.

    இந்தியா மீதான ராணுவ தாக்குதலை மேலும் அதிகரித்தால் தக்க பதிலடி தரப்படும்.

    இந்தியாவின் தாக்குதலால் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான்.

    இந்தியா போர் பதற்றத்தை ஏற்படுத்தவில்லை, பதிலடி மட்டுமே தருகிறது.

    லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்தியாவின் ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானிலேயே முறியடித்தது.

    இந்தியா தொடர்பாக பாகிஸ்தானில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

    ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து TRF என்ற அமைப்பின் பெயரை நீக்க பாகிஸ்தான் அழுத்தம் கொடுத்தது. பஹல்காம் தாக்குதலுக்கு TRF தான் பொறுப்பேற்றிருந்தது.

    இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்க விரும்பவில்லை என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது.

    பாகிஸ்தான் எப்போது உருவானதோ அப்போதே அவர்கள் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டனர். எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதை நாம் மட்டுமல்ல ஐ.நா குழுவை சேர்ந்தவர்களும் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.

    பாகிஸ்தான் தான் பிரச்சனையை 22ம் தேதி முதலில் தொடங்கியது.

    பாகிஸ்தான் தொடங்கிய பிரச்சனைக்கு நாம் பதிலடி தான் கொடுத்து வருகிறோம். நாட்டின் பாதுகாப்புக்காக பதிலடி கொடுக்க வேண்டியது கட்டாயம்.

    பயங்கரவாதிகளின் தலைவர்கள் யார் யார் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல்களை தற்போது வெளியிட முடியாது. அதற்கு இது சரியான நேரமல்ல.

    சர்வதேச நாணய நிதியம் தாமாக முன்வந்து சூழ்நிலைகளை ஆராய்ந்து பாகிஸ்தான் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.

    கொடூர தாக்குதலுக்கு ஆளான இந்தியாவின் பதிலடிக்கு உலக தலைவர்கள் மதிப்பளித்துள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான அவர்களின் ஆதரவையும் நம்முடன் பகிர்ந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம் செய்யப்பட்டார்.
    • இவர் தற்போது தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகராக இருந்து வருகிறார்.

    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஆக வினய் குவாத்ரா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் ஜூலை 14-ம் தேதி முடிவடைய உள்ளது.

    இந்நிலையில், புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    இவர் தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகர் ஆக இருந்து வருகிறார்.

    1989-ம் ஆண்டு பிரிவு ஐ.எப்.எஸ். அதிகாரியான இவர், ஜூலை 15-ம் தேதிமுதல் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

    சீனா நாட்டுக்கான இந்தியாவின் அடுத்த தலைமை தூதராக விக்ரம் மிஸ்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #VikramMisri #Ambassadoroflndia #ambassadortoChina
    புதுடெல்லி:

    மியான்மர் நாட்டுக்கான இந்தியாவின் தலைமை தூதராக விக்ரம் மிஸ்திரி பொறுப்பு வகித்து வருகிறார். 

    சீனா நாட்டுக்கான இந்திய தலைமை தூதர் கவுதம் பம்பாவாலே-வின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இந்நிலையில், புதிய தலைமை தூதராக விக்ரம் மிஸ்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளது. #VikramMisri #Ambassadoroflndia #ambassadortoChina
    ×