என் மலர்
இந்தியா

பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது: விக்ரம் மிஸ்ரி
- பாகிஸ்தானின் தாக்குதல்களை தடுத்ததுடன் இந்தியா தகுந்த பதிலடியும் அளித்து வருகிறது.
- பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் மட்டுமே நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் நேற்றிரவு பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களை குறிவைத்து தாக்கியது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் அதிக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்தது.
இந்த நிலையில் இன்று காலை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
* பாகிஸ்தானின் செயல்தான் ஆத்திரமூட்டல் மற்றும் தீவிரப்படுத்தலை உருவாக்கியது:
* பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது.
* பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் வெளிப்படையாக தாக்குதல் நடத்தியது.
* பாகிஸ்தானின் தாக்குதல்களை தடுத்ததுடன் இந்தியா தகுந்த பதிலடியும் அளித்து வருகிறது.
* பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் மட்டுமே நடத்தி வருகிறது.
இவ்வாறு விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.






