என் மலர்
நீங்கள் தேடியது "oil"
- எண்ணெய் சருமம் உள்ளவர்களும் பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தலாம்
- பூப்பெய்தும் பெண்களை வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிக்க சொல்வார்கள்.
பலரும் சருமம் பளபளப்பாக, மென்மையாக, ஈரப்பதத்துடன் இருக்க பாடிலோஷன்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை அனைத்தும் பல விளைவுகளையும் கொண்டுள்ளன என்பதை அறிய மறுக்கின்றனர். பாடி லோஷன்களுக்கு பதில் எண்ணெய்யை சருமத்திற்கு பயன்படுத்துவது அவ்வளவு நன்மை பயக்கும். அதனால்தான் நமது பாட்டி எல்லாம் எண்ணெய் குளியல் எடுக்க சொல்வர். எண்ணெய் குளியல், எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை தரவல்லது. பாடி லோஷன்களுக்கு மாறாக உங்களுக்கு முழுமையான உடல் பளபளப்பை தரும் 5 எண்ணெய் வகைகளை பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய்
நெடுங்காலமாகவே தேங்காய் எண்ணெய்யை அழகு, ஆரோக்கியம், ஆகாரம் என பல செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். அதன் நற்குணங்கள் அனைத்தும் நாம் அறிந்தவையே. தேங்காய் எண்ணெய் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளது. இது சருமத்தில் ஆழமாக ஊடுருவி மென்மையையும், பளபளப்பையும் இயற்கையாகவே தருகிறது. சிறந்த பலன்கிடைக்க தேங்காய் எண்ணெய்யை சிறிது சூடுபடுத்தி பயன்படுத்தலாம். வெயிலில் சென்றுவந்த பிறகு அல்லது சருமம் வறட்சியாக, சோர்வாக உணரும்போது தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
நல்லெண்ணெய்
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது மந்தமான, வறண்ட சருமத்திற்கு நல்ல பலன் கொடுக்கும். நல்லெண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது இன்னும் பலனளிக்கும். பொதுவாக பூப்பெய்தும் பெண்களை வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிக்க சொல்வார்கள். இடுப்பு எலும்புகள் பலம் அடையும் என்று. அவ்வளவு நன்மைகள் கொண்டது நல்லெண்ணெய். நல்லெண்ணைய்யை லேசாக சூடாக்கி ஒரு 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தை உறுதியாகவும், ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் காட்டும்.
பாதாம் எண்ணெய்
எண்ணெய் பசையை அதிகம் விரும்பாதவர்கள், எண்ணெய் சருமம் உள்ளவர்களும் பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தலாம். பாதாம் எண்ணெய் மற்ற எண்ணெய்களைப் போல கனமாக இருக்காது. இது மென்மையாகவும், சருமத்தால் விரைவாக உறிஞ்சப்படும் தன்மையும் கொண்டது, இதனால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது, இது உங்கள் சருமத்தின் நிறத்தை சமன் செய்து நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி இரவுமுழுவதும் அப்படியே விடலாம். பழுப்பு நிற கோடுகள், கருமையான திட்டுகளை இது நீக்கும். வேண்டுமானால் பாதாம் எண்ணெயுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

பாதாம் & ஆர்கன் எண்ணெயில் அதிகம் ஒட்டும்தன்மை இருக்காது
ஆர்கன் எண்ணெய்
ஆர்கன் மரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய்தான் ஆர்கன் எண்ணெய். இது திரவ தங்கம் என்று அழைக்கப்படுகிறது. பிசுபிசுத்தன்மையை வெறுப்பவர்களுக்கு இதுவும் நல்ல தேர்வாகும். இதில் வைட்டமின் ஈ மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சருமத்தை எண்ணெய் பசையின்றி பளபளப்பாக்குகின்றன. இதனை குளித்தபிறகு இரண்டு, மூன்று சொட்டுகள் முகத்தில் தடவினால் போதும். எண்ணெய் பசை இருப்பதுபோல் முகத்தில் தெரியாது. இது நல்ல வாசனை கொடுப்பதோடு மென்மையான, பளபளப்பான தன்மையை சருமத்திற்கு அளிக்கிறது.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயில் ஒமேகா-3 அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை சருமத்தை பிரகாசமாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மசாஜ் செய்ய, குறிப்பாக குளிர்காலத்தில், உடலை சூடாகவும், சருமத்தை மிருதுவாகவும் வைத்திருக்க, இது பல காலமாகப் பயன்படுத்தப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை கடுகு எண்ணெய்யை பயன்படுத்தினால், உங்கள் சருமம் வலுவாகவும், மென்மையாகவும் இருக்கும். இதன் வாசனை பிடிக்காதவர்கள் ஜாஸ்மீன் அல்லது லாவெண்டர் எண்ணெய்யை இரண்டு, மூன்று சொட்டுகள் சேர்த்து பயன்படுத்துங்கள்.
- ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகியவற்றிற்கு பொருளாதார தடை விதித்தார்.
- சுய மரியாதை கொண்ட நாடும், சுயமரியாதை கொண்ட மக்களும் அழுத்தத்திற்காக எதையும் முடிவு செய்ய மாட்டார்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் பதவி ஏற்றபிறகு ரஷியாவுடன் உறவுகளை மேம்படுத்த முயன்றார். அந்நாட்டு அதிபர் புதினுடன் தொலைபேசியிலும் பேசி நட்பை வளர்த்தார்.
மேலும், உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த டிரம்ப் ரஷியா வின் மிகப்பெரிய 2 எண்ணை நிறுவனங்களான ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகியவற்றிற்கு பொருளாதார தடை விதித்தார்.
ரஷியாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும். ரஷியாவின் இந்த 2 எண்ணெய் நிறுவனங்களும் உலக கச்சா எண்ணை வினியோகத்தில் 6 சதவீத பங்கை கொண்டு உள்ளன. ரஷிய அரசுக்கான மிகப் பெரிய வருவாய் ஆதாரமாக இந்நிறுவனங்கள் உள்ளன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து ரஷிய அதிபர் புதின் கூறியதாவது:-
ரஷியா மீதான தடைகள் நட்பற்ற செயல். இது நிச்சயமாக ரஷியா மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சிதான். இவை சில விளைவுகளை ஏற்படுத்தினாலும் எங்களது பொருளாதாரம் பாதிக்கும் வகையில் இருக்காது. இவை நீண்ட காலம் நீடிக்காது என்று நம்புகிறோம்.
அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் ரஷியா ஒரு போதும் அடிபணியாது. சுய மரியாதை கொண்ட நாடும், சுயமரியாதை கொண்ட மக்களும் அழுத்தத்திற்காக எதையும் முடிவு செய்ய மாட்டார்கள். சுய மரியாதை கொண்ட எந்த நாடும் அப்படி செய்யாது. ரஷியா வின் எரிசக்தி துறை நம்பிக்கையுடன் உள்ளது.
போரை விட பேச்சுவார்த்தை எப்போதும் சிறந்தது. போர் தீர்க்கப்படும் என நம்புகிறோம்.
அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய டோமோ ஹாக் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் அதற்கான பதிலடி கடுமையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெய் 15 கிலோ டின் ஒன்றிற்கு ரூ.10,500, சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.660-க்கும் விற்கப்படுகிறது.
- கடந்த வாரம் விற்ற விலையிலேயே மாற்றமின்றி எண்ணெய் விலைகள் தொடர்கின்றன.
விருதுநகர்:
விருதுநகர் வணிகச் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் இந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்கப்படும் எண்ணெய் வகைகளின் விலை நிலவரம் வருமாறு:-
நல்லெண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 4,300 ரூபாய், கடலை எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,600 ரூபாய், தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 6,500 ரூபாய், ரீபைண்ட் ஆயில் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,400 ரூபாய் , விளக்கெண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,550 ரூபாய், பாமாயில் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,030 ரூபாய் , கடுகு எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,700 க்கு விற்கப்படுகிறது.
சில்லறை விலையில் எண்ணெய் வகைகள் விலை நிலவரம் :-
நல்லெண்ணெய் ஒரு கிலோ 290 ரூபாய்க்கும் கடலை எண்ணெய் ஒரு கிலோ 190 ரூபாய்க்கும், ரீபைண்ட் ஆயில் ஒரு கிலோ 170 க்கும், தேங்காய் எண்ணெய் ஒரு கிலோ 460 ரூபாய்க்கும், விளக்கெண் ணெய் ஒரு கிலோ 190 ரூபாய்க்கும் , பாமாயில் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், கடுகு எண்ணெய் ஒரு கிலோ 190 க்கும் விற்கப்படுகிறது.
நெய் 15 கிலோ டின் ஒன்றிற்கு ரூ.10,500, சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.660-க்கும் விற்கப்படுகிறது.
கடந்த வாரம் விற்ற விலையிலேயே மாற்றமின்றி எண்ணெய் விலைகள் தொடர்கின்றன. தீபாவளி வரை இந்த நிலையே தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்கி வருகிறது.
- இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், "இந்தியா இனி, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப் போவதில்லை என கேள்விப்பட்டதாகவும், அப்படி நடந்தால் உண்மையில் அது நல்ல நடவடிக்கை" என்று தெரிவித்தார்.
- ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
- இந்திய நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வர்த்தகம் செய்ததாகக் கூறி 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது
அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்ட இந்திய நிறுவனங்கள் :
1. அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
2. குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட்
3. ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட்
4. ராம்னிக்லால் எஸ் கோசாலியா & கோ
5. பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட்
6. காஞ்சன் பாலிமர்ஸ்
- பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
- ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய டிரம்ப், பாகிஸ்தான் நாட்டுடன் நாங்கள் ஒப்பந்தம் ஒன்றை முடிவு செய்துள்ளோம். இதன்படி, பாகிஸ்தானிலுள்ள பெரிய அளவிலான எண்ணெய் இருப்புகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியை இணைந்து மேற்கொள்ள போகிறோம். இதற்காக எண்ணெய் நிறுவனம் தேர்வு செய்யும் நடைமுறையில் ஈடுபட்டு இருக்கிறோம்.
யாருக்கு தெரியும், ஒரு நாள் இந்தியாவுக்கு கூட பக்ஷிதன் எண்ணெயை விற்பனை செய்ய கூடும் என்று டிரம்ப் கிண்டலாக கூறினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்று தொடர்ந்து டிரம்ப் கூறி வரும் நிலையில், பாகிஸ்தானுடன் அமெரிக்கா கைகோர்த்துள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- வரிவிதிப்பு முறை ஏப்ரல் 2ம் தேதி அமலுக்கு வரும்.
வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் அல்லது எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், வெனிசுலா நாடு அமெரிக்காவுக்கு எதிரியாக செயல்பட்டு வருகிறது. வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த வரிவிதிப்பு முறை ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு காரணமாக சீனா, ஸ்பெயின், இந்தியா, ரஷியா, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் வெனிசுலா ஏற்றுமதி செய்த ஒட்டுமொத்த எண்ணெயில் சீனா 68 சதவீதம் அளவுக்கு எண்ணெய் வாங்கியுள்ளது அமெரிக்க எரிசக்தித் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெனிசுலாவுக்கு எதிராக வரிவிதிப்பு அறிவித்துள்ள போதிலும், அமெரிக்கா தற்போதும் அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த ஜனவரியில் அமெரிக்கா 8.6 பாரெல் எண்ணெயை வெனிசுலாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- குழந்தையின் உடல் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது.
- பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது நல்லது.
பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. ஒரு சரியான எண்ணெய் மசாஜ், குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. வயிற்று வலிக்கு நல்ல ஒரு சிகிச்சையாக உள்ளது, குழந்தையின் உடல் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. எண்ணெய் மசாஜ் மூலம் குழந்தையின் வளர்ச்சியை அதிகரிப்பது பெற்றோர் கையில் மட்டும் தான் உள்ளது.
குழந்தைகளுக்கு இயற்கையான எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதால் அவர்களின் சரும ஆரோக்கியம் மேம்படும். தசை மற்றும் எலும்புகள் வலுப்பெறும். குழந்தைக்கும் அன்னைக்குமான பாசம் அதிகரிக்கும்.
குழந்தையின் நாசுக்கான சருமத்தில் ஏதாவது ஒரு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்தில் தவறான பாதிப்புகளைத் தரும். எந்த ஒரு எண்ணெயையும் குழந்தைக்கு தடவுவதற்கு முன்னர், குழந்தையின் கை அல்லது கால் பகுதியில் ஒரு சிறிய பகுதியில் தடவி, சோதித்து, ஒரு மணி நேரம் கழித்து தடிப்பு, ஒவ்வாமை போன்ற எந்த ளரு பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் முழு உடலிலும் தடவலாம்.
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் தொற்று மற்றும் வறட்சி ஏற்படாமல் காக்கும்.
சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய்யை உபயோகப்படுத்தினால் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பாதாம் எண்ணெய் தோல் நோய்கள் உண்டாகாமல் காக்கும். சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.
குழந்தைகளின் சருமம் வறண்டதாக இருந்தால், விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். நகங்கள் மற்றும் தலை முடிக்கும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனால் தலைமுடி மற்றும் விரல்கள் மிகவும் பளபளப்பாக மாறுகின்றன. குழந்தையின் உடலில் விளக்கெண்ணெய் தடவி, 10-15 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.
குழந்தைக்கு மசாஜ் செய்ய ஆலிவ் எண்ணெய் மிகவும் ஏற்றது. ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் குழந்தையின் தசை வேகமாக வளர்ச்சி அடைகிறது. ஆனால் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி குழந்தைக்கு மசாஜ் செய்யும்போது சில விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைக்கு தோல் அழற்சி, வெட்டு அல்லது தடிப்புகள் இல்லாமல் இருக்கும்போது மட்டும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தவும். வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்ட குழந்தையின் சருமத்திற்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது .
- இதனைத் தினமும் இரவு செய்யலாம்.
- சோர்வடைந்த கண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன.
ஜோஜோபா எண்ணெயில் (Jojoba Oil ) அழற்சி எதிர்ப்பு மற்றும் காயம் குணப்படுத்தும் பண்புகள் உள்ளதால் சோர்வடைந்த உங்கள் கண்களைப் புத்துயிர் பெறச் செய்யும். அவோகேடாவில் வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் ஈ ஆகியவை நிறைந்து இருப்பதால் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி சருமத்தினை மென்மையாக வைக்கிறது. அப்ரிகாட் கர்னல் எண்ணெயில் வைட்டமின் ஏ, ஓலிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் உள்ளதால் சோர்வடைந்த கண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன. அத்துடன் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து சருமத்தில் பயன்படுத்துவதால் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை நீரேற்றத்துடன் வைக்கலாம்.
தேவையான பொருட்கள்
ஜோஜோபா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டியளவு
அப்ரிகாட் கர்னல் எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு
அவோகேடா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு
4 எண்ணெய்களையும் எடுத்து அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி கண்களைச் சுற்றித் தடவிவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து கழுவுங்கள். இதனைத் தினமும் இரவு செய்யலாம்.
கண் சுருக்கங்கள்
ஆரஞ்சு பழத்தின் தோல் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுவதால் கண்களில் ஏற்பட்ட சுருக்கத்தினை சரி செய்ய உதவுகிறது. வேப்ப எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் கண்களின் தோற்றத்தினை மேம்படுத்துகிறது.
தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய் 1 தேக்கரண்டி அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர், 3 முதல் 4 துளி வேப்ப எண்ணெய் எடுத்து ஒன்றாகக் கலந்து கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.
- கறிவேப்பிலை எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல.
- இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.
கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படும் எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல. இந்த எண்ணெயானது இளம் வயதினரை தாக்கும் நரை முடியை மீண்டும் கருமையாக்க உதவி புரிகிறது. இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.
இப்போது இருக்கும் இளைய தலைமுறை கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, கெமிக்கல் கலந்த ஷாம்பூக்களை பயன்படுத்துவது, போதுமான அளவு தூங்காமல் விழித்திருப்பது போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி நரைத்து முதிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது. இது அவர்களது மன தைரியத்தை குறைக்கிறது.
இந்த பெரும் பிரச்சனையில் இருந்து விடுபட கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தலாம். இப்போது கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்கும் முறையை பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை எண்ணெய் செய்ய இரண்டே பொருட்கள் போதும். ஒன்று செக்கில் கொடுத்து அரைக்கப்பட்ட சுத்தமான தேங்காய் எண்ணெய் வேண்டும். இரண்டாவது நிழலில் உலர்த்தப்பட்ட கறிவேப்பிலை இலைகள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு நிழலில் உலர்த்த வேண்டும்.
செய்முறை:
முதலில் தேவையான அளவு கறிவேப்பிலையை உருவி ஒரு தட்டில் அல்லது துணியில் போட்டு நிழலில் உலர்த்தி வையுங்கள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்து கொள்ளவும். கடாய் ஒன்றில் ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனை சூடு செய்யுங்கள்.
தீயை குறைவாக வைத்து சூடு செய்யுங்கள். அதே சமயம் புகை வரும் அளவிற்கு சூடு செய்ய வேண்டாம். எண்ணெய் சூடேறிய பிறகு உலர்த்தி வைக்கப்பட்ட கறிவேப்பிலையை சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம். இந்த எண்ணெய் நன்றாக ஆறி வரட்டும். கறிவேப்பிலை நிறம் மாறி வரும்.
எண்ணெய் முழுவதுமாக ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் இதனை ஊற்றி வைத்து பயன்படுத்தலாம். கறிவேப்பிலையோடு சேர்த்தே ஊற்றிக் கொள்ளலாம். கறிவேப்பிலை எண்ணெயில் மிதக்காமல் நன்றாக மூழ்கி இருக்க வேண்டும். எப்போதும் பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இளநரை உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இந்த எண்ணெயை உபயோகிக்கலாம்.
- கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.
- இந்த எண்ணெய் கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை தரும்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 500 மி
நல்லெண்ணெய் - 100 மி
கரிசலாங்கண்ணி இலைகள் - 2 கைப்பிடி
அரைக்க வேண்டியவை
சின்ன வெங்காயம் - 20
செம்பருத்தி இலை - 2 கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கைப்பிடி
கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
மருதாணி - 1 கைப்பிடி
நெல்லிக்காய் - 10
வெந்தயம் - 2 ஸ்பூன்
கற்றாழை - 2 இதழ்.
செய்முறை
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 3 எண்ணெயை ஊற்றி மிதமாக சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலக்கவும். அடிபிடிக்காமல் இருக்க பொறுமையாக சிறிது நேர இடைவெளியில் கிளறிக் கொண்டே இருக்கவும். நுரை அடங்கும் வரை காய வைத்து இறக்கி ஆற விடவும்.
இப்போது எண்ணெய் நன்கு கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதனை பாட்டிலில் சேகரித்து தினமும் பயன்படுத்தி வர கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.
குறிப்பு: சளி பிடிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை பயன்படுத்துவதை தவிர்த்து விடவும்.
- தீபம் ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் முக்கியத்துவம் வாய்ந்தது.
- எந்த எண்ணெய் தீபம் ஏற்ற உகந்தது என்று அறிந்துகொள்ளலாம்.
கடலை எண்ணெய், பாமாயில், ரீபைண்டு ஆயில், கடுகு எண்ணெய் போன்றவற்றை விளக்கேற்ற பயன்படுத்தக்கூடாது. இவற்றால் தீமைகளே ஏற்படும்.
இறைவனுக்கு உகந்த எண்ணெய் விபரம் வருமாறு:-
மகாலட்சுமிக்கு - நெய்
திருமால், சர்வ தேவதைகளுக்கு - நல்லெண்ணெய்
விநாயகருக்கு - தேங்காய் எண்ணெய்
சிவபெருமானுக்கு - இலுப்பை எண்ணெய்
அம்பாளுக்கு -நெய்,விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜை செய்ய, அம்பாளின் அருள் கிடைக்கும்.
தீபத்திற்கு ஏற்ற எண்ணெய்
பசு நெய்:- லட்சுமி வாசம் செய்வாள், புத்திர பாக்கியம் கிட்டும்.
நல்லெண்ணெய்:- பூஜை தீபத்திற்கு சிறந்தது, சனி பரிகாரம் தரும், லட்சுமிகடாட்சம் உண்டாகும்.
தேங்காய் எண்ணெய்:- லலிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும், கணவன், மனைவி பாசம் கூடும், பழையபாவம் போகும்.
இலுப்பை எண்ணெய்:- எல்லாப் பாவங்களும் போகும், மோட்சம் கிட்டும், நல்ல ஞானம் வரும், பிறப்பு அற்றுப் போகும்.
விளக்கெண்ணெய்:- தெய்வ அருள், புகழ், ஜீவன சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவைகளை இது விருத்தி செய்யும்.
வேப்ப எண்ணெய்:- குலதெய்வ அருள் கிடைக்கும்.
மூவகைஎண்ணெய்- நெய், வேப்பஎண்ணை, இலுப்பை எண்ணெய் இந்த மூன்றும் கலந்து தீபமிட செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும். இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.






