என் மலர்
நீங்கள் தேடியது "economic barrier"
- ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகியவற்றிற்கு பொருளாதார தடை விதித்தார்.
- சுய மரியாதை கொண்ட நாடும், சுயமரியாதை கொண்ட மக்களும் அழுத்தத்திற்காக எதையும் முடிவு செய்ய மாட்டார்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் பதவி ஏற்றபிறகு ரஷியாவுடன் உறவுகளை மேம்படுத்த முயன்றார். அந்நாட்டு அதிபர் புதினுடன் தொலைபேசியிலும் பேசி நட்பை வளர்த்தார்.
மேலும், உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த டிரம்ப் ரஷியா வின் மிகப்பெரிய 2 எண்ணை நிறுவனங்களான ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகியவற்றிற்கு பொருளாதார தடை விதித்தார்.
ரஷியாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும். ரஷியாவின் இந்த 2 எண்ணெய் நிறுவனங்களும் உலக கச்சா எண்ணை வினியோகத்தில் 6 சதவீத பங்கை கொண்டு உள்ளன. ரஷிய அரசுக்கான மிகப் பெரிய வருவாய் ஆதாரமாக இந்நிறுவனங்கள் உள்ளன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து ரஷிய அதிபர் புதின் கூறியதாவது:-
ரஷியா மீதான தடைகள் நட்பற்ற செயல். இது நிச்சயமாக ரஷியா மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சிதான். இவை சில விளைவுகளை ஏற்படுத்தினாலும் எங்களது பொருளாதாரம் பாதிக்கும் வகையில் இருக்காது. இவை நீண்ட காலம் நீடிக்காது என்று நம்புகிறோம்.
அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் ரஷியா ஒரு போதும் அடிபணியாது. சுய மரியாதை கொண்ட நாடும், சுயமரியாதை கொண்ட மக்களும் அழுத்தத்திற்காக எதையும் முடிவு செய்ய மாட்டார்கள். சுய மரியாதை கொண்ட எந்த நாடும் அப்படி செய்யாது. ரஷியா வின் எரிசக்தி துறை நம்பிக்கையுடன் உள்ளது.
போரை விட பேச்சுவார்த்தை எப்போதும் சிறந்தது. போர் தீர்க்கப்படும் என நம்புகிறோம்.
அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய டோமோ ஹாக் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் அதற்கான பதிலடி கடுமையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வளர்ந்த நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது.
அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பதாக அறிவித்தது. மேலும் தனது நட்பு நாடுகளையும் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இதனால் ஈரானின் பணமான ரியாலின் மதிப்பு குறைந்துள்ளது. பொருட்களின் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது. ஈரானின் பணமதிப்பு மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்ததால் வர்த்தகர்கள் தெக்ரானில் பாராளுமன்றம் முன்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்கும் விதமாக ஈரான் மக்களிடையே அந்நாட்டு அதிபர் ஹசன் ரக்கானி டி.வி.யில் உரையாற்றினார். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் அமெரிக்கா மீதான நன் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் ஆக்கபூர்வமான தேவைகளுக்கு யுரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளது. அமெரிக்காவின் நெருக்கடிக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம்.
எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நடைமுறைகளையும் பாதுகாக்க ஒருநாளும் தவர மாட்டோம். ஈரானின் பொருளாதாரம் சமீப காலமாக சீராக சென்று கொண்டிருக்கிறது. அதில் எந்தவித பிரச்சினையும் இல்லை.
நம்மிடம் போதுமான அளவுக்கு சர்க்கரை- கோதுமை மற்றும் சமையல் எண்ணை உள்ளது. மார்க்கெட்டில் செலுத்த தேவைப்படும் அன்னிய செலாவணி இருப்பு உள்ளது’’ என்றார். #IranRiyal






