என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் வணிகச் சந்தையில் எண்ணெய் விலையில் மாற்றமில்லை
    X

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் வணிகச் சந்தையில் எண்ணெய் விலையில் மாற்றமில்லை

    • நெய் 15 கிலோ டின் ஒன்றிற்கு ரூ.10,500, சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.660-க்கும் விற்கப்படுகிறது.
    • கடந்த வாரம் விற்ற விலையிலேயே மாற்றமின்றி எண்ணெய் விலைகள் தொடர்கின்றன.

    விருதுநகர்:

    விருதுநகர் வணிகச் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் இந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்கப்படும் எண்ணெய் வகைகளின் விலை நிலவரம் வருமாறு:-

    நல்லெண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 4,300 ரூபாய், கடலை எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,600 ரூபாய், தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 6,500 ரூபாய், ரீபைண்ட் ஆயில் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,400 ரூபாய் , விளக்கெண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,550 ரூபாய், பாமாயில் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,030 ரூபாய் , கடுகு எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,700 க்கு விற்கப்படுகிறது.

    சில்லறை விலையில் எண்ணெய் வகைகள் விலை நிலவரம் :-

    நல்லெண்ணெய் ஒரு கிலோ 290 ரூபாய்க்கும் கடலை எண்ணெய் ஒரு கிலோ 190 ரூபாய்க்கும், ரீபைண்ட் ஆயில் ஒரு கிலோ 170 க்கும், தேங்காய் எண்ணெய் ஒரு கிலோ 460 ரூபாய்க்கும், விளக்கெண் ணெய் ஒரு கிலோ 190 ரூபாய்க்கும் , பாமாயில் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், கடுகு எண்ணெய் ஒரு கிலோ 190 க்கும் விற்கப்படுகிறது.

    நெய் 15 கிலோ டின் ஒன்றிற்கு ரூ.10,500, சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.660-க்கும் விற்கப்படுகிறது.

    கடந்த வாரம் விற்ற விலையிலேயே மாற்றமின்றி எண்ணெய் விலைகள் தொடர்கின்றன. தீபாவளி வரை இந்த நிலையே தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×