2 ஆண்டுகளுக்கு பிறகு... வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிய பாரத் பெட்ரோலியம்

வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தியது.
2 ஆண்டுகளுக்கு பிறகு... வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிய பாரத் பெட்ரோலியம்
Published on

அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசினார்.

இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியாவின் BPCL நிறுவனம் 2 ஆண்டுகளுக்குப் பின், வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளது.

பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தியதை அடுத்து, BPCL மற்றும் HPCL மிட்டல் எனர்ஜி நிறுவனங்கள் தலா 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை தற்போது வெனிசுலாவிடம் இருந்து வாங்கியுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com