வெனிசுலாவுடன் எண்ணெய் வர்த்தகம்? - இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்

வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டது என்று அமெரிக்கா தெரிவித்தது.
வெனிசுலாவுடன் எண்ணெய் வர்த்தகம்? - இந்திய வெளியுறவுத்துறை  விளக்கம்
Published on

அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும். அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ரஷியாவுக்கு பதில் இந்தியா இனி வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்து குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், "எண்ணெய் இறக்குமதியை பொருத்தவரை, 140 கோடி மக்களின் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா எந்த நாட்டிலிருந்து வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கும்.அனைத்து கொள்முதல் முடிவுகளும் நாட்டு நலன் மற்றும் ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன. இதில் அரசியல் அழுத்தங்களுக்கு இடமில்லை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com