search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neeraj Chopra"

    • 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றேன்.
    • கடந்த முறையை விட அதிகமாக உள்ளது. நிச்சயம் இந்த தடவை நெருக்கடி அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி தடகள வீரர் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறியும் வீரரான அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று புதிய வரலாறு படைத்தார். ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு அவர் இந்த சாதனையை படைத்தார். மேலும் அவர் உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான நீரஜ் சோப்ரா மீது பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் தன் மீது அழுத்தம் அதிகம் இருப்பதாக நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த முறை என் மீது அழுத்தம் அதிகம் உள்ளது. ஏனென்றால் ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை நான் தக்கவைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். இதற்கு முன்பு இதே மாதிரியான அனுபவத்தை கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் எதிர்கொண்டேன்.

    2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றேன். அதனால் நான் ஆசிய விளையாட்டில் மீண்டும் தங்கம் வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டு இருந்தது.

    ஆனாலும் அதோடு ஒலிம்பிக்கை ஒப்பிட முடியாது. என் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனை மறுக்க இயலாது. கடந்த முறையை விட அதிகமாக உள்ளது. நிச்சயம் இந்த தடவை நெருக்கடி அதிகரித்துள்ளது.

    இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.

    • முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா ஈட்டியை 83.62 மீட்டர்கள் எறிந்து முன்னிலை பெற்றார்.
    • ஆலிவர் ஹெலாண்டரை வீழ்த்தி வெற்றி பெற்றார் நீரஜ் சோப்ரா.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பின்லாந்தில் நடைபெறும் பாவோ நுர்மி போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த முறை அவர் 85.97 மீட்டர்கள் ஈட்டியை எறிந்தது அவருக்கு தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளது.

    பாவோ நுர்மி போட்டியின் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா ஈட்டியை 83.62 மீட்டர்கள் எறிந்தது, அவருக்கு முன்னிலையை ஏற்படுத்தி கொடுத்தது. பிறகு, நடைபெற்ற இரண்டாம் சுற்றில் பின்லாந்து வீரர் ஆலிவர் ஹெலாண்டர் 83.96 மீட்டர்களுக்கு ஈட்டியை எறிந்து முன்னிலை பிடித்தார்.

     


    அடுத்து நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி சுற்றில் நீரஜ் அபாரமாக வீசியதில் ஈட்டி 85.97 மீட்டர்கள் தூரத்திற்கு பாய்ந்தது. இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, ஆலிவர் ஹெலாண்டரை வீழ்த்தி நீரஜ் சோப்ராவுக்கு தங்க பதக்கத்தையும் உறுதிப்படுத்தியது.

    இந்த போட்டியில் தங்கம் வென்றுள்ளதை அடுத்து வரவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் நீரஜ் சோப்ரா சிறப்பான போட்டியை ஏற்படுத்தி, மீண்டும் பதக்கத்தை வெல்வார் என்ற நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது.

    • டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.
    • பாரிஸ் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவின் முன்னணி தடகள வீரர் நீரஜ் சோப்ரா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், உலக சாம்பியன் போட்டியில் சாதனைப் படைத்துள்ளார்.

    பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் சாதனைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படுவதற்காக ஐரோப்பியாவில் தனது பயிற்சியாளர் மற்றும் பிசியோவுடன் சென்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டு இருந்தார். இந்த நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சகம் நீரஜ் சோப்ரா வெளிநாட்டில் சென்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

    இந்த நிலையில் மே 29-ந்தேதியில் இருந்து ஜூலை 28-ந்தேதி வரை ஐரோப்பியாவில் உள்ள பல்வேறு இடங்களில் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்காக TOPS என்ற திட்டம் இந்தியாவில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீர்ஜ் சோப்ராவின் பயிற்சிக்காக தொகை வழங்கப்படும்.

    நீரஜ் சோப்ராவை போன்று பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற சில வீரர்கள் வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்காக உதவிகள் கேட்டுள்ளது.

    • நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்.
    • 3 ஆண்டில் முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

    3 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றுள்ளார்.

    போட்டியின் தொடக்கத்தில் முன்னிலை பெற கடுமையாக போராடினார். 3 சுற்றுகளுக்கு பின் 2-வது இடம் பிடித்த அவர், 4-வது சுற்றில் 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முன்னிலை பெற்றார். போட்டியில் மற்றவர்களைவிட தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் இறுதிச்சுற்றில் அவர் விளையாடவில்லை.

    இந்தப் போட்டியில் டி.பி.மானு 82.06 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • நீரஜ் சோப்ரா 88.36 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்தார்.
    • செக் குடியரசு வீரர் 88.38 மீட்டர் தூரம் எறிந்து முதுல் இடம் பிடித்தார்.

    கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் டைமண்ட் லீக் நடைபெற்று வருகிறது. தடகள போட்டியில் ஒன்றான ஈட்டி எறிதல் போட்டி இந்திய நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நீரஜ் சோப்ராவுக்கும், செக்குடியரசு வீரர் ஜாக்கப் வாட்லெஜ்-க்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. ஜாக்கப் வாட்லெஜ் 88.38 மீட்டர் தூரம் வீசி முன்னிலை வகித்தார்.

    நீரஜ் சோப்ரா 4-வது முயற்சியில் 86.18 மீட்டர் வீசியிருந்தார். ஆனால் ஐந்தாவது முயற்சியில் 82.28 மீட்டர் தூரமே சென்றது.

    6-வது மற்றும் கடைசி முயற்சியில் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி வீசினார். இதனால் ஈட்டி சீறிப்பாய்ந்து முன்னோக்கி சென்றது. ஆனால் 88.36 மீட்டர்தான் சென்றது.

    2 சென்டி மீட்டர் குறைந்ததால் முதல் இடம் வாய்ப்பை இழந்தார். இதனால 2-வது இடம் பிடித்தார். கிஷோர் ஜெனா 76.31 மீட்டர் எறிந்தார். கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர் 85.75 மீ்ட்டர் தூரம் வீசி 3-வது இடம் பிடித்தார். தோகா டைமண்ட் லீக் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வெள்ளோட்டமாக பார்க்கப்படுகிறது.

    • ஒலிம்பிக்கில் அதிகாரப்பூர்வ டைம்கீப்பராக ஒமேகா உள்ளது.
    • நீரஜ் சோப்ரா தோகாவில் நடைபெற இருக்கும் டைமண்ட் லீக் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக்கில் ஆசியாவிலேயே ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற முதல் வீரர் இவர் ஆவார்.

    இவரை சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட ஆடம்பர கடிகார நிறுவனமான ஒமேகா (OMEGA) விளையாட்டு தூதராக இணைத்துள்ளது.

    தோகாவில் டைமண்ட் லீக் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், அங்குள்ள ஒமேகா ஷாப்பிற்கு நீரஜ் சோப்ராவை அழைத்துள்ளது.

    ஒமேகா ஒலிம்பிக் தொடருக்கான அதிகாரப்பூர்வ டைம்கீப்பராக உள்ளது. 1932-ல் இருந்து டைகீப்பராக இருந்து வருகிறது. பாரிஸ் நகரில் இந்த வருடம் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் ஒமேகாவிற்கு 31-வது தொடர் ஆகும்.

    டைமண்ட் லீக்கிற்குப் பிறகு புவனேஸ்வரில் நடைபெறும் பெடரேசன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்திய மண்ணில் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து நீரஜ் சோப்ரா கலந்து கொள்ளும் போட்டி இதுவாகும்.

    மிகவும் பிரபலமான நிறுவனத்தின் ஒரு பகுதியாக இணைய இருப்பது மிகவும் ஆர்வமாக உள்ளது என நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    • டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு எனது தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கிறது.
    • எல்லாமே சரியாக அமைந்தால், 90 மீட்டர் இலக்கை பார்க்க மக்கள் ஒலிம்பிக் வரை காத்திருக்க வேண்டாம்.

    புதுடெல்லி:

    இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிலும், அதைத் தொடர்ந்து உலக தடகளத்திலும் தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். இப்போது ஜூலை - ஆகஸ்டு மாதத்தில் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக்கில் மீண்டும் மகுடம் சூடும் உத்வேகத்துடன் தன்னை தீவிரமாக தயார்படுத்தி வருகிறார். அரியானாவைச் சேர்ந்த 26 வயதான நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்துள்ளார்.

    இந்த நிலையில் தனது அடுத்தக்கட்ட இலக்கு குறித்து ஆன்லைன் மூலம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 90 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டி எறிய முயற்சிப்பேன். எல்லாமே சரியாக அமைந்தால், 90 மீட்டர் இலக்கை பார்க்க மக்கள் ஒலிம்பிக் வரை காத்திருக்க வேண்டாம். அதற்கு முன்பாகவே நடந்து விடும் என்று நம்புகிறேன். அதற்கு ஏற்ப தயாராகி உள்ளேன்.

    இந்த சீசன் தொடங்கிய போது உடல்தகுதி மற்றும் உடல் வலிமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினேன். ஈட்டி எறிதலுக்கு என்று பிரத்யேகமாக எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் தொழில்நுட்பத்தில் நான் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளேன். மேலும் தென்ஆப்பிரிக்கா மற்றும் துருக்கியில் மேற்ெகாண்ட பயிற்சிகள் நல்லவிதமாக அமைந்தது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு எனது தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. அதன் பிறகு இரண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ளேன். அவற்றில் ஒன்றில் வெள்ளியும், மற்றொன்றில் தங்கமும் வென்றேன். டைமண்ட் லீக் தடகளத்தில் கோப்பையை கைப்பற்றினேன். ஆசிய விளையாட்டில் பட்டத்தை தக்க வைத்தேன். டோக்கியோ மற்றும் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு இடைப்பட்ட காலத்தில் கிடைத்த இந்த வெற்றிகள் நிறைய நம்பிக்கையை தந்திருக்கிறது. எந்த நிலையிலும், எத்தகைய போட்டியிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும்.

    அடுத்த மாதத்தில் தோகா டைமண்ட் லீக் மற்றும் ஜூன் மாதத்தில் பாவோ நூர்மி விளையாட்டில் பங்கேற்க உள்ளேன். ஒலிம்பிக்குக்கு முன்பாக 3-4 போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்.

    ஜெர்மனி இளம் வீரர் குறித்து...

    ஜெர்மனியின் இளம் வீரர் மேக்ஸ் டெனிங் சமீபத்தில் 90.20 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தது குறித்து கேட்கிறீர்கள். மேக்ஸ் டெனிங்குடன் இதற்கு முன்பு நான் விளையாடியதில்லை. பாவோ நூர்மி விளையாட்டில் அவரை எதிர்கொள்ள ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

    டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் உலக தடகளத்தில் என்னுடன் 90 மீட்டர் தூரத்திற்கு மேல் ஈட்டி எறிந்தவர்களும் களம் கண்டனர். அதில் அவர்களை தோற்கடித்தேன். அதனால் இது போன்று அதிக தூரம் ஈட்டி எறிந்தவர்களுடன் மோதுவது எனக்கு புதிதல்ல. அது ஒரு பெரிய விஷயமே இல்லை. குறிப்பிட்ட நாளில் நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதே முக்கியம்.

    சக நாட்டவரான கிஷோர் ஜெனா உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும், ஆசிய விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட்டார். அவரது முன்னேற்றத்தை பார்க்கும் போது, எனக்கு முன்பாக 90 மீட்டர் இலக்கை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ஊக்கத்தொகை அறிவிப்புக்கு வரவேற்பு

    பாரீஸ் ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு ஊக்கத்தொகை (ரூ.41½ லட்சம்) வழங்கப்படும் என்ற உலக தடகள சம்மேளனத்தின் அறிவிப்பு ஒரு சிறப்பான தொடக்கமாகும் இதேபோல் டைமண்ட் லீக் போன்ற மற்ற பெரிய போட்டிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கினால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.

    • டைமண்ட் லீக் தடகளத்தின் இறுதிச்சுற்று போட்டி அமெரிக்காவின் யூஜின் நகரில் நடந்தது.
    • இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடம் பிடித்தார்.

    வாஷிங்டன்:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகளத்தின் இறுதிச்சுற்று போட்டி அமெரிக்காவில் உள்ள யூஜின் நகரில் இன்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

    இதில் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.

    செக் குடியரசின் ஜாகுப் வால்டிச் முதல் இடம் பிடித்தார். பின்லாந்து வீரர் ஹாலெண்டர் 3ம் இடம் பிடித்தார்.

    • டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள சூரில் நகரில் நேற்று தொடங்கியது.
    • இறுதி முயற்சியில் நீரஜ், 85.71 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடத்திற்கு முன்னேறினார்.

    ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் கடைசி நாளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான இறுதிசுற்று நடந்தது.

    இதில், எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதைதொடர்ந்து, நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற கையோடு டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்றுள்ளார்.

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள சூரில் நகரில் நேற்று தொடங்கியது.

    இந்த போட்டியில் கலந்துக் கொண்ட நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் 80.79 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார். அடுத்த 2 முறை தவறுதல் ஏற்பட்ட நிலையில் 4வது முயற்சியில் 85.22 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார். 5வது முயற்சியிலும் தவறு ஏற்பட்டதால் நீரஜ் சோப்ரா பின்னடைவை அடைந்தார்.

    பின்னர், இறுதி முயற்சியில் நீரஜ், 85.71 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடத்திற்கு முன்னேறினார்.

    போட்டி முடியும் வரை நீரஜ் சோப்ரா தனது 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

    • 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
    • டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்ில் உள்ள சூரில் நகரில் இன்று நடைபெறவுள்ளது.

    ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் கடைசி நாளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான இறுதிசுற்று நடந்தது.

    இதில், எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இந்நிலையில், நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற கையோடு டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கிறார்.

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்ில் உள்ள சூரில் நகரில் இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இதயத்தை வெல்லுங்கள்... செலானை அல்ல
    • நீரஜ் சோப்ராவின் ஈட்டி அல்ல... வெள்ளைக் கோட்டை தாண்டினால் மெடல் கிடைக்காது

    இந்தியாவின் இளம் தடகள வீரரான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் நட்சத்திர வீரராக ஜொலித்து வருகிறார். தனது 25 வயதிற்குள் ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.

    மேலும், அபிநவ் பிந்திராவிற்குப் (துப்பாக்கிச் சுடுதல்) பிறகு இரண்டிலும் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    சாதனைப் படைத்த நீரஜ் சோப்ராவின் சாதனையை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடி வருகிறார். பாராட்டுகள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நீரஜ் சோப்ராவை மேற்கொள் காட்டி, டெல்லி போலீஸ், சாலை பாதுகாப்பு தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள போஸ்ட் வைரலாகி வருகிறது.

    டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ள பதிவில் ''நீரஜ் சோப்ரா போன்று இருங்கள். இதயங்களை வெல்லுங்கள். செலானை (போக்குவரத்து விதிமுறையை மீறும்போது போலீசாரால் கொடுக்கப்படும் அபாரதத்திற்கான ரசீது) அல்ல.

    டிரைவர் மற்றும் வாகன ஓட்டிகளே, நீங்கள் நீரஜ் சோப்ராவின் ஈட்டி அல்ல. வெள்ளை கோட்டை தாண்டும்போது புள்ளிகளோ அல்லது பதக்கங்களோ கொடுக்கப்படாது'' எனக் குறிப்பிட்டுள்ளது.

    இதற்கு பலர் பதில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

    • இறுதிப் போட்டியின் முடிவில், நீரஜ் மைதானத்தில் புகைப்படம் எடுக்க நதீமை அழைத்தார்.
    • நதீம் உடனடியாக மூவர்ண கொடியை ஏந்திய நீரஜ் சோப்ராவுடன் நின்று புகைப்படம் எடுத்தார்.

    புடாபெஸ்ட்:

    19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 9 நாட்களாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று, இரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிசுற்று நடந்தது.

    எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அவருக்கு சவாலாக இருந்த பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (87.82 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

    இறுதிப் போட்டிக்குப் பிறகு, நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் இருவரும் களத்தில் தங்களது தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

    தற்போது எங்கள் இரு நாடுகளும் எப்படி வளர்ந்து வருகின்றன என்பதை நாங்கள் விவாதித்தோம். பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என நிரஜ் சோப்ரா தெரிவித்திருந்தார்.

    அது சமூக ஊடகங்கள் முழுவதும் ரசிகர்களின் இதயங்களை வென்றது. நீரஜ் மற்றும் நதீம் களத்தில் ஒருவரை ஒருவர் கட்டி தழுவினர். அவர்களின் பிணைப்பு இந்தியா-பாகிஸ்தான் வேற்றுமைக்கு அப்பால் செல்கிறது.

    இறுதிப் போட்டியின் முடிவில், நீரஜ் மைதானத்தில் புகைப்படம் எடுக்க நதீமை அழைத்தார். நதீம் உடனடியாக மூவர்ண கொடியை ஏந்திய நீரஜ் சோப்ராவுடன் நின்று புகைப்படம் எடுத்தார். அவர்களுடன் வெண்கலப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜும் நின்றார்.

    நீரஜ் மற்றும் நதீம் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்த தருணம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. மூவர்ண கொடியுடன் புகைப்படம் எடுத்த பாகிஸ்தான் வீரரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    ×