என் மலர்
நீங்கள் தேடியது "ஈட்டி எறிதல்"
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 4 தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
புதுடெல்லி:
மாற்றுத் திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப்.44 பிரிவு) இந்திய வீரர் சந்தீப் சர்கார் 62.82 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
இதில் இன்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப்.64 பிரிவு) இந்திய வீரர் சுமித் அன்டில் 71.37 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
நடப்பு தொடரில் இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என 9 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.
- நடப்பு தொடரில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
- மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் 64.76 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
புதுடெல்லி:
மாற்றுத் திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப்.46 பிரிவு) இந்திய வீரர் ரிங்கு ஹூடா 66.37 மீட்டர் தூரம் எறிந்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
நடப்பு தொடரில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். உலக சாதனையாளரான மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் 64.76 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். கியூபா வீரர் குல்லெர்மோ வரோனா கொன்சாலெஸ் (63.34 மீட்டர்) வெண்கலப்பதக்கம் பெற்றார். இன்னொரு இந்திய வீரர் அஜீத் சிங் (61.77 மீட்டர்) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
- ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.
- கென்யாவின் ஜூலியஸ் யெகோ 84.51 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இந்திய நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா பெங்களூருவில் தனது பெயரில் நடைபெற்ற முதல் 'நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025' போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் நீரஜ் போட்டியிடுவதைக் காண ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில், நீரஜ் ஒரு தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சனிக்கிழமை நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், நீரஜ் தனது மூன்றாவது முயற்சியில் 86.18 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்.
கென்யாவின் ஜூலியஸ் யெகோ 84.51 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இலங்கை தடகள வீரர் ருமேஷ் பதிரேஜ் 84.34 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
மற்றொரு இந்திய தடகள வீரர் சச்சின் யாதவ் 82.23 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார். நீரஜ் சோப்ரா இந்தப் போட்டியின் அமைப்பாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது
- நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
- 1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்து நீரஜ் சோப்ரா அசத்தியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராக நீரஜ் சோப்ரா உள்ளார். இவர் ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
மேலும், அண்மையில் நடந்த ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டி மற்றும் டயமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் உலகளவில் ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் 'நம்பர் 1' இடத்தை இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா பிடித்துள்ளார்.
1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்து நீரஜ் சோப்ரா அசத்தியுள்ளார். ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 1370 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
- 85.29 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததன் மூலம் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
- கடந்த வாரம் பாரிசில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடல் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.
ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த போட்டியில் முதல் மற்றும் கடைசி முயற்சிகள் புள்ளிகள் எடுக்காத நீரஜ் சோப்ரா, இடைப்பட்ட முயற்சிகளில் 83.45, 85.29, 82.17, 81.01 மீட்டருக்கு ஈட்டி எறிந்து அசத்தினார்.
அதில் மூன்றாவது முயற்சியில் 85.29 மீட்டருக்கு ஈட்டி எறிந்ததன் மூலம் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
தென் ஆப்பிரிக்காவின் ஸ்மித் 84.12 மீட்டர் தூரமும் கிரெனடா நாட்டை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 83.63 மீட்டர் தூரமும் ஈட்டி எறிந்து முறையே 2 மற்றும் 3 ஆம் இடங்களை பிடித்தனர்.
முன்னதாக கடந்த வாரம் பாரிசில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடல் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நீரஜ் சோப்ரா 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பாரிஸ் டயமண்ட் லீக்கை வென்றார்.
- நீரஜ் சோப்ரா கிளாசிக் அடுத்த மாதம் 5-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
பாரிஸ்:
பாரிசில் டயமண்ட் லீக் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா நேற்று இரவு பட்டத்தை வென்றதன் மூலம் உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தார்.
நேற்று நடந்த போட்டியின் முதல் சுற்றிலேயே 88.16 மீட்டர் தூரம் எறிந்தார். நடு சுற்றுகளில் 3 புள்ளிகள் இல்லாதபோதும், அவரது தொடக்க முயற்சியே போட்டி முழுவதும் அவரை முதலிடத்தில் வைத்திருந்தது.
ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.88 மீட்டர் தூரம் எறிந்தார். பிரேசிலின் மௌரிசியோ லூயிஸ் டா சில்வா 86.62 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறும் நீரஜ் சோப்ரா கிளாசிக்கின் தொடக்கப்பதிப்பில் விளையாடுகிறார்.
- ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவு தடகள போட்டி போலந்தில் நடைபெற்றது.
- ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முதலிடத்தை பிடித்தார்.
சோர்ஜோவ்:
ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவு தடகள போட்டி போலந்தின் சோர்ஜோவ் நகரில் நடைபெற்றது.
இதில் நேற்றிரவு நடந்த ஈட்டி எறிதல் பந்தயத்தில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 84.14 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம்பிடித்தார். இவர் தனது வாய்ப்பில் 3 பவுல்கள் செய்தது பின்னடைவை ஏற்படுத்தியது.
86.12 மீட்டர் தூரம் வீசிய ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முதலிடமும், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (83.24 மீட்டர்) 3-வது இடமும் பிடித்தனர்.
- ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார்.
- 90 மீட்டர் தூரம் எறிந்த 3-வது ஆசிய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.
தோகா:
16-வது டைமண்ட் லீக் தடகள போட்டி கடந்த 26-ந் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 28-ந்தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. 15 சுற்றுகளை கொண்ட இந்த தொடரின் 3-வது சுற்று கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று நடைபெற்றது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார்.
அவர் முதல் முறையாக 90 மீட்டருக்கு மேல் எறிந்து புதிய வரலாறு நிகழ்த்தினார். இதற்கு முன்பு 2022 ஸ்டாக் ஹோம் டைமன்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டர் தூரம் எறிந்ததே அவரது சிறப்பான நிலையாக இருந்தது.
90 மீட்டர் தூரம் எறிந்த 3-வது ஆசிய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். இதற்கு முன்பு இந்த இலக்கை எட்டிய மற்ற இரண்டு ஆசிய வீரர்கள் ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (92.97 மீ.) மற்றும் சீன தைபேயின் சாவோ-சுன் செங் (91.36 மீ.) ஆவார்கள். சர்வதேச அளவில் 25-வது வீரர் ஆவார்.
90.23 மீட்டர் எறிந்தாலும் நீரஜ் சோப்ராவால் 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.64 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் ஜெனோ கிஷோர் 78.60 மீட்டர் தூரம் எறிந்து 8-வது இடத்தை பிடித்தார்.
புதிய சாதனை குறித்து நீரஜ் சோப்ரா கூறியதாவது:-
90 மீட்டரை தாண்டியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது ஒரு சிறந்த அனுபவமாகும். பயிற்சியாளர் 90 மீட்டர் இலக்கை எட்ட முடியும் என்று என்னிடம் கூறினார். இந்த இலக்கை தொட எனக்கு காற்று உதவியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
27 வயதான நீரஜ் சோப்ரா 2 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தங்கப் பதக்கமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளிப் பதக்கமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய சாதனை நிகழ்த்திய நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
இது ஒரு அற்புதமான சாதனை. தோகா டைமன்ட் 'லீக்' போட்டியில் 90 மீட்டரை தாண்டி எறிந்ததற்காகவும், தனது சிறந்த நிலையை எட்டியதற்காகவும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஆர்வத்தின் விளைவாகும். அவரால் இந்தியா மகிழ்ச்சி அடைந்து பெருமை கொள்கிறது.
இவ்வாறு மோடி அதில் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவிற்கு சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்டு வந்தார்.
- 2018 இல் அர்ஜுனா விருதும், 2021 இல் விசிஷ்ட சேவா பதக்கமும் வழங்கப்பட்டது.
இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரமும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு ஒரு அரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய பிராந்திய இராணுவம் அவருக்கு லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவியை வழங்கியது. இந்த நியமனம் ஏப்ரல் 16 முதல் அமலுக்கு வந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நியமனம் குறித்த விவரங்கள் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான 'தி கெசட் ஆஃப் இந்தியா'வில் வெளியிடப்பட்டுள்ளன.
நீரஜ் சோப்ரா 2016 இல் இந்திய ராணுவத்தில் நைப் சுபேதார் என்ற பதவியதுடன் ஜூனியர் கமிஷன்டு அதிகாரியாக (JCO) சேர்ந்தார். ஈட்டி எறிதல் விளையாட்டில் தனது திறமையால் இந்தியாவிற்கு சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்டு வந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்துடன் அவர் வரலாறு படைத்தார்.
அவரது சேவைகளைப் பாராட்டி, அவருக்கு 2018 இல் அர்ஜுனா விருதும், 2021 இல் விசிஷ்ட சேவா பதக்கமும் வழங்கப்பட்டது. அதே ஆண்டில், சோப்ரா சுபேதாராக பதவி உயர்வு பெற்றார்.
2022 ஆம் ஆண்டு இந்திய ஆயுதப் படைகளின் மிக உயர்ந்த அமைதிக்கால பதக்கமான பரம் விஷிஷ்ட சேவா பதக்கத்தை பெற்ற அவர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சுபேதார் மேஜராக பதவி உயர்வு பெற்றார்.
தற்போது மீதும் அவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். அடுத்ததாக மே 23ல் போலந்தில் நடக்கவுள்ள 71வது ஆர்லன் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார்.
- பெங்களூருவில் நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி அடுத்த மாதம் (மே) 24 -ந்தேதி நடக்கிறது.
- இதில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்தார்.
லாகூர்:
ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி' நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி பெங்களூருவில் அடுத்த மாதம் (மே) 24 -ந்தேதி நடக்கிறது.
2 முறை உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தாமஸ்ரோஹ்லர் (ஜெர்மனி), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஜூலியஸ் யெகோ (கென்யா), கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.
இதில் பங்கேற்க 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு, நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் நீரஜ் சோப்ராவின் இந்த அழைப்பை நதீம் நிராகரித்தார். கொரியாவில் மே 22-ந்தேதி நடைபெறும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ப இருப்பதால் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
- ஒடிசா மாநிலம் போலங்கீரில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்து கொண்டு இருந்தது.
- படுகாயமடைந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் போலங்கீரில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்து கொண்டு இருந்தது. ஈட்டி எறிதலின்போது 9-ம் வகுப்பு மாணவனின் கழுத்தில் ஈட்டி எதிர்பாராதவிதமாக பாய்ந்தது. படுகாயமடைந்த அவனை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தகவல் அறிந்த அந்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மாணவனின் நலம் விசாரித்தார். சிகிக்சைக்கான செலவை முதல்-மந்திரி நிவாரண நிதி மூலம் ஏற்கப்படும் என அறிவித்தார்.
- நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
- 2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா வெள்ளி வென்றார்.
கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.
2022ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சோப்ரா வெள்ளி வென்றார். அதனால், இந்த முறையும் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். செக் குடியரசு வீரர் ஜேக்கப் வேட்லக்(88.63 மீட்டர்) இரண்டாவது இடத்தையும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ்(85.88 மீட்டர்) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.






