என் மலர்
நீங்கள் தேடியது "டயமண்ட் லீக் மீட் தொடர்"
- 85.29 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததன் மூலம் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
- கடந்த வாரம் பாரிசில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடல் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.
ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த போட்டியில் முதல் மற்றும் கடைசி முயற்சிகள் புள்ளிகள் எடுக்காத நீரஜ் சோப்ரா, இடைப்பட்ட முயற்சிகளில் 83.45, 85.29, 82.17, 81.01 மீட்டருக்கு ஈட்டி எறிந்து அசத்தினார்.
அதில் மூன்றாவது முயற்சியில் 85.29 மீட்டருக்கு ஈட்டி எறிந்ததன் மூலம் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
தென் ஆப்பிரிக்காவின் ஸ்மித் 84.12 மீட்டர் தூரமும் கிரெனடா நாட்டை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 83.63 மீட்டர் தூரமும் ஈட்டி எறிந்து முறையே 2 மற்றும் 3 ஆம் இடங்களை பிடித்தனர்.
முன்னதாக கடந்த வாரம் பாரிசில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடல் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நீரஜ் சோப்ரா 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பாரிஸ் டயமண்ட் லீக்கை வென்றார்.
- நீரஜ் சோப்ரா கிளாசிக் அடுத்த மாதம் 5-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
பாரிஸ்:
பாரிசில் டயமண்ட் லீக் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா நேற்று இரவு பட்டத்தை வென்றதன் மூலம் உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தார்.
நேற்று நடந்த போட்டியின் முதல் சுற்றிலேயே 88.16 மீட்டர் தூரம் எறிந்தார். நடு சுற்றுகளில் 3 புள்ளிகள் இல்லாதபோதும், அவரது தொடக்க முயற்சியே போட்டி முழுவதும் அவரை முதலிடத்தில் வைத்திருந்தது.
ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.88 மீட்டர் தூரம் எறிந்தார். பிரேசிலின் மௌரிசியோ லூயிஸ் டா சில்வா 86.62 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறும் நீரஜ் சோப்ரா கிளாசிக்கின் தொடக்கப்பதிப்பில் விளையாடுகிறார்.
- ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 9வது இடம் பிடித்தார்.
- சாப்லே 8 நிமிடம் 17.09 வினாடிகளில் தூரத்தைக் கடந்தார்.
பிரஸ்சல்ஸ்:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட இந்த லீக்கின் இறுதிச்சுற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடக்கிறது. இறுதிச்சுற்றுக்கு 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 9வது இடம் பிடித்தார். அவர் 8 நிமிடம் 17.09 வினாடிகளில் தூரத்தைக் கடந்தார்.
கென்ய வீரர் முதலிடமும், மொராக்கோ வீரர் இரண்டாம் இடமும் பிடித்தனர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் சாப்லே 8 நிமிடம் 14.18 வினாடிகளில் தூரத்தைக் கடந்து 11வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்தார்.
- இதன்மூலம் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பிரஸ்சல்ஸ்:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட இந்த லீக்கின் இறுதிச்சுற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடந்தது. இறுதிச்சுற்றுக்கு 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர்.
நேற்று நடந்த இறுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே 9வது இடம் பிடித்தார்.
இந்நிலையில், ஈட்டி எறிதலில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் இறங்கினார்.
மொத்தம் 6 சுற்றுகளின் முடிவில் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரது அதிகபட்சமாக 3வது சுற்றில் 87.86 மீட்டர் எறிந்தார்.
90 மீட்டர் என்ற இலக்கை இம்முறையும் நீரஜ் சோப்ரா கடக்க முடியவில்லை.
கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார்.
- நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன்வெல்த் தொடரில் பங்கேற்கவில்லை.
- சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டயமண்ட் லீக் மீட் தொடர் பைனல் போட்டி நடந்தது.
சூரிச்:
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டயமண்ட் லீக் மீட் தொடரின் இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் 88.44 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
- காயம் காரணமாக காமன்வெல்த் தொடரில் நீரஜ் சோப்ரா பங்கேற்கவில்லை.
- சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் சர்வதேச தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
லாசேன்:
சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டயமண்ட் லீக் மீட் சர்வதேச தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.
அவர் 89.08 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
மேலும், செப்டம்பர் 7ம் தேதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறும் டயமண்ட் லீக் பைனலுக்கும் தகுதி பெற்றுள்ளார்.